(Source: ECI/ABP News/ABP Majha)
வாத்து பண்ணையில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு; குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை - புதுவை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
புதுச்சேரியில் வாத்து பண்ணையில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவுகுற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை விதித்து புதுவை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
புதுச்சேரி கீழ்சாத்தமங்கலம் வாத்து பண்ணையில் வேலை செய்த சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 11 பேரில் 9 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. கன்னியப்பன் உட்பட 6 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், சுபா, காத்தவராயன் ஆகிய இரண்டு பேருக்கு ஒரு ஆயுள் தண்டனையும், ஆறுமுகம் என்பருக்கு 10 வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த 2020 ஆம் ஆண்டு கீழ்சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்த கன்னியப்பன் என்பவர் தனது வாத்து பண்ணைக்கு வாத்து மேய்ப்பதற்காக சிவகங்கை மாவட்டதில் இருந்து சிறுமிகள் சிலரை அழைத்து வந்து பண்ணையில் உள்ள அறையில் அடைத்து வேலை வாங்கி வந்துள்ளார். அப்போது கன்னியப்பன் உட்பட அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மது போதையில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமிகள் குழந்தைகள் நல வாரியம் தெரிவித்தை அடுத்து மங்கலம் போலீசார் போக்ஸோ வழக்கு பதிவு செய்து, கன்னியப்பன் உடபட 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கானது கடந்த 2 வருடங்களாக புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் வாத்து பண்ணை உரிமையாளர் கன்னியப்பன், அவரது மகன் ராஜ்குமார், சுபா, சரத்குமார், சிவா, மூர்த்தி, காத்தவராயன், ஆறுமுகம் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கு தண்டனை விதித்து நீதிபதி செல்வநாதன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
அதில் போக்ஸோ மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வாத்து பண்ணை உரிமையாளர் கன்னியப்பன், அவரது மகன் ராஜகுமார், சரத்குமார் உள்ளிட்ட 6 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தும், கன்னியப்பன் மனைவி சுபா,காத்தவராயன் இருவருக்கும் ஒரு ஆயுள் தண்டனையும், ஆறுமுகம் என்பவருக்கு 10 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு ஒருவருக்கு 7 லட்சமும் மற்ற 4 சிறுமிகளுக்கு 5 லட்சமும் இழப்பிடு வழங்க வேண்டும் என புதுச்சேரி போக்ஸோ நீதிமன்ற நீதிபதி செல்வநாதன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா?
என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்