புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு 50 புதிய மதுவகைகள் அறிமுகம்
பிரெஞ்சு ஆட்சி காலத்தில் இருந்தே மது வகைகளுக்கு புகழ்பெற்ற பகுதியாக புதுவை விளங்குகிறது.
புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஆண்டு தோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை, புத்தாண்டு, பொங்கல் என தொடர் நிகழ்வுகளும் விடுமுறையும் இருப்பது சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க செய்கிறது. இதனால் புதுவை நகரமே சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்கும் புதுவை தயாராகி வருகிறது. நகர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள ஓட்டல், விடுதிகள், ரெஸ்டாரண்டுகளில் அனைத்து அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரெஞ்சு ஆட்சி காலத்தில் இருந்தே மது வகைகளுக்கு புகழ்பெற்ற பகுதியாக புதுவை விளங்குகிறது. விலை குறைவு மட்டுமல்லாது விதவிதமான மது வகைகள், வெளிநாட்டு மது பானங்கள் போன்றவை தான் மது பிரியர்களை புதுவையை நோக்கி இழுக்கிறது. இதனை கூடுதலாக்கும் நோக்கில் இந்த முறை புத்தாண்டையொட்டி மதுபார்கள் புதுபொலிவாக மாற்றப்பட்டு வருகிறது. பார்களின் உள் அமைப்புகள் மதுபிரியர்களை கவரும் வகையில் மின்னொலியில் ஜொலிக்கின்றன.
மேலும் வெளிநாடுகளில் இருந்தும் வெளிமாநில மாநிலங்களில் இருந்தும் 50க்கும் மேற்பட்ட புதிய மதுவகைகள் புதுவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஜப்பானிய விஸ்கி, மெக்சிக்கோ டக்கீலா, லண்டன் ஜின், பிரான்ஸ் ஒயின், இத்தாலி பீர், அமெரிக்கன் ஓட்கா மற்றும் கோவா பென்னி என விதவிதமான மதுவகைகள் வரிசை கட்டி மதுபிரியர்களை வரவேற்க காத்திருக்கிறது. மது வகைகளை போல புதிய சைடிஷ்களும் தயாராகியுள்ளன. கடற்கரை பகுதியாக புதுவை இருப்பதால் கடல் உணவுகள், சிக்கன், மட்டன் வகைகள் சிறப்பு சலுகைகளுடன் தயாராகி வருகிறது. புதுவையில் 1400 வகையான மதுவகைகள் ஏற்கனவே சந்தையில் உள்ளது. அத்துடன் புத்தாண்டை குறிவைத்து 50 புதிய மதுவகைகள் களத்தில் இறங்கியுள்ளது.
உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா?
என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்