உண்டியலில் திருடிய பணத்தை ஒருவாரம் கழித்து கோயிலில் வீசிய திருடன் - எங்கு தெரியுமா..?
கள்ளக்குறிச்சி : உண்டியலை உடைத்து திருடிய பணத்தை ஒருவாரம் கழித்து கோயிலில் வீசிய திருடன்.
கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு :
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த அரசம்பட்டு கிராமம் மணிமுத்தாறு அருகே பால தண்டாயுதபாணி என்ற முருகன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பூசாரியாக பணிபுரிந்து வருபவர் சம்பத். இவர் கடந்த 12.12.22 பூஜை செய்வதற்காக கோயிலுக்கு சென்றபோது கோயில் கதவு உடைந்து கிடந்தததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் கோயில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை யாரோ மர்ம நபர் திருடிச்சென்றதும் தெரியவந்தது.
திருடிய பணத்தை ஒருவாரம் கழித்து கோயிலில் வீசிய திருடன்:
இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து உண்டியல் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை வலை வீசி தேடி வந்தனர். இந்த நிலையில் கோயிலில் பூசாரி சம்பத் காலை வழக்கம் போல் கோயிலுக்கு பூஜை செய்வதற்காக வந்தார். அப்போது கோயில் வளாகத்தில் 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்ததை கண்டு வியப்படைந்தார். பின்னர் இதுகுறித்து ஊர் முக்கியஸ்தர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். அதன் பேரில் சங்கராபுரம் போலீசாரும், ஊர் முக்கியஸ்தர்களும் விரைந்து வந்து கோயிலில் கிடந்த ரூபாய் நோட்டுகளை பார்வையிட்டு அவற்றை சேகரித்தனர். மொத்தம் ரூ.17 ஆயிரம் ரூபாய் இருந்தது.
போலீசார் விசாரணை:
விசாரணையில் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர் ஒருவாரம் கழித்து காணிக்கை பணத்தை மீண்டும் கோயிலில் வீசி சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை வீசி சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். உண்டியலை உடைத்து திருடிய பணத்தை மர்ம நபர் ஒருவாரம் கழித்து கோயிலில் வீசி சென்ற சம்பவத்தால் அரசம்பட்டு கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா?
என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்