அரசு விழாக்களில் இதைத்தான் பயன்படுத்த வேண்டும்... ஆளுநர் தமிழிசை கூறியது என்ன தெரியுமா ?
அரசு விழாக்களில் பொன்னாடை வேண்டாம்! கதர் ஆடை பயன்படுத்த வேண்டும் என ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.
புதுச்சேரி: புதுச்சேரி அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் "என் மண் என் தேசம்" நிகழ்ச்சி கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்தது. ஆளுநர் தமிழிசை நிகழ்ச்சியை தொடங்கி வைத்து தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை வாசித்தார். விழாவில் பங்கேற்றோர் உறுதிமொழி ஏற்றனர். விழாவில் ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், மாநிலத்தின் பல பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட மண்ணை கொட்டி மரக்கன்றுகள் நட்டனர்.
ஆளுநர் தமிழிசை பேசியதாவது:-
நம் நாட்டுக்கு தனி கலாச்சாரம், பண்பாடு உள்ளது. சில ஆண்டுக்கு முன்பு பண்பாடு, கலாச்சாரம் பற்றி பேசினால் இந்து மதம் சார்ந்து பேசுவது போல கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. 2047-ல் உலகிற்கே இந்தியா தலைமை வகிக்கும் பெருமை பெறும். அதற்கேற்ப இந்தியா வளர்ச்சி பெற்று வருகிறது. புதுச்சேரியில் முதல்வர் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. அதற்கு நான் உறுதுணையாக இருக்க தயக்கம் காட்டுவதில்லை. நாட்டில் நெசவாளர்கள் அதிகம் உள்ளனர். அரசு விழாக்களில் மரியாதை செலுத்தும்போது பொன்னாடைக்கு பதில் கதர் ஆடை அணிவிக்க வேண்டும் என ஆளுநர் தமிழிசை கூறினார்.
விழுப்புரம் மாவட்ட செய்திகள் :
கிராமங்கள் வளர்ச்சி பெற கடுமையாக உழைப்பவர் தான் முதல்வர் ஸ்டாலின் - எம்எல்ஏ லட்சுமணன்