மேலும் அறிய
கடலூர்: திமுக எம்பி ரமேஷுக்கு சொந்தமான இடம் தனியார் வங்கியால் ஜப்தி
பண்ருட்டியில் திமுக எம்பி ரமேஷுக்கு சொந்தமான இடம் தனியார் வங்கியால் ஜப்தி, ரூபாய் 45 கோடி கடன் நிலுவையில் இருப்பதால் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து வங்கி அதிகாரிகள் நடவடிக்கை.
![கடலூர்: திமுக எம்பி ரமேஷுக்கு சொந்தமான இடம் தனியார் வங்கியால் ஜப்தி DMK MP Ramesh's property seized by a private bank in panruti cuddalore TNN கடலூர்: திமுக எம்பி ரமேஷுக்கு சொந்தமான இடம் தனியார் வங்கியால் ஜப்தி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/27/1ea4c64dd37c3f1815e9622e435da2181672143297468501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஜப்தி செய்யப்பட்ட இடம்
கடலூர் மாவட்டம், பண்ருட்டி- சென்னை சாலையில் கடலூர் திமுக எம்பிக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் நிலத்தின் ஆவணங்களை வைத்து பண்ருட்டியில் உள்ள பண்ருட்டி தமிழ்நாடு மெர்க்கன்டைல் பேங்க் தனியார் வங்கியில் காயத்ரி முந்திரி நிறுவனத்தின் பெயரில் கடன் பெற்றுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் வங்கியில் நிலுவைத் தொகை ரூபாய் 45 கோடி கட்டாமல் காலம் தாழ்த்தி வந்ததால், அதனைத் தொடர்ந்து வங்கி சார்பில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வங்கி அதிகாரிகள் திமுக எம்பி ரமேஷுக்கு சொந்தமான இடத்தை ஜப்தி செய்தனர்.
![கடலூர்: திமுக எம்பி ரமேஷுக்கு சொந்தமான இடம் தனியார் வங்கியால் ஜப்தி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/27/ed6b141ec532031e06b63ad6bac2e0661672143333394501_original.jpg)
அப்போது அங்கு சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பு பணியில் இருக்கும் இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த பத்துக்கு மேற்பட்டவர்கள் அந்தப் பகுதியில் வாழ்ந்து வருவதாகவும், டிஆர் வி ரமேஷ் தங்களுக்கு 15 சென்ட் இடம் தருவதாக கூறியதன் பேரில் சம்பளம் இல்லாமல் வேலை பார்த்து வந்ததாகவும் தற்பொழுது வங்கி அதிகாரிகள் கடன் தொகை செலுத்தவில்லை என்று தங்களை இடத்தை காலி செய்ய கோரி போலீசார் உடன் வந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதால் தாங்கள் எங்கு செல்வது என்று வேதனையில் உள்ளதாகவும், திமுக எம்பி தங்களை ஏமாற்றி விட்டதாகவும் பராமரிப்பில் உள்ள இரண்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion