மேலும் அறிய

ராமருக்கு கோயில் கட்டி கும்பிட்டால், மூன்று வேளையும் சோறு கிடைக்குமா? - சி.வி. சண்முகம்

ராமருக்கு கோயில் கட்டி கும்பிட்டால் மக்களுக்கு மூன்று வேளையும் சோறு கிடைக்குமா? சிவி சண்முகம் பேச்சு..

விழுப்புரம்: கடந்த 10 ஆண்டுகால மத்திய அரசு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் கூட கட்டவில்லை என்றும் ராமருக்கு கோயில் கட்டி கும்பிட்டால் மக்களுக்கு மூன்று வேலையும் சோறு கிடைக்குமா என்றும் திண்டிவனத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அதிமுகம் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் விமர்சனம் செய்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டி, சில்வர் பாத்திரங்கள், புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம்..

”மத்தியில் 10 ஆண்டு காலம் ஆட்சியில் உள்ள அரசுக்கு தேர்தல் வரும் போதுதான் மக்களின் நினைவு வரும். 600 ரூபாய் விற்ற கேஸ் தற்போது 1200 ரூபாயாக உயர்ந்துளளது. தேர்தல் வருகிறது என்றவுடன் 200 ரூபாய் விலை குறைக்கப்பட்டுள்ளது. கடைகளைப் போல விலை ஏற்றி தற்போது குறைக்கப்படுகிறது. பத்தாண்டு கால மத்திய ஆட்சியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. வேலை வாய்ப்பு, புதிய திட்டங்கள் எதுவும் வரவில்லை. மதுரைக்கு வழங்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் சுற்றுச்சுவர் கூட கட்டவில்லை. இன்றைக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செல்கிறார், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை தருவோம் என்று. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையே 12 லட்சம்தான்.

தமிழ்நாட்டில் இரண்டு கோடியே 24 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளது அப்படியென்றால் அண்ணாமலை செல்வது போல இரண்டு கோடியே 24 லட்சம் பேருக்கு அரசு வேலை தர வேண்டும். வடிவேல் நகைச்சுவை காட்சிகள் வரும், கடலிலேயே இல்லையாம் என்பது போல 2 கோடி பேருக்கு அரசு வேலை எங்குள்ளது என்றும் இது ஒரு பித்தலாட்ட வேலை. கோயில் கட்டி ராமரை கும்பிட்டால் மூன்று வேளைக்கும் சோறு கிடைத்துவிடுமா என கேள்வி எழுப்பிய சிவி.சண்முகம். இன்றைக்கு பாஜக மத உணர்வுகளை தூண்டி மக்களை பிளவுபடுத்த பார்க்கிறது.

இன்றைக்கு மத்தியில் உள்ள அரசும், மாநில அரசும் மக்களின் உண்மையான பிரச்சனைகளை மறைத்து இன்றைக்கு வாக்குகளை பெறுவதற்கு நாடகமாடிக்கொண்டிருக்கிறது. விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த ஐந்து ஆண்டுகளில் புயல், வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகளின் போதும் கூட தொகுதி பக்கம் வரவில்லை. கூட்டணியில் இருப்பதால் பட்டியலின மக்களுக்கு ஏற்படும் அநீதிகளுக்கு கூட குரல் கொடுக்க விசிக தயங்குகிறது” என சிவி.சண்முகம் விமர்சனம் செய்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Embed widget