மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
சபரிமலைக்கு செல்ல பணம் கொடுக்காத ஆத்திரத்தில் தாய், தந்தையை தாக்கிய மகன்
சங்கர் சபரிமலைக்கு செல்வதற்கு அவரது தாய் ராஜேஸ்வரி மற்றும் தந்தை நடேசன் ஆகியோரிடம் பணம் கேட்டு உள்ளார்.
சபரிமலைக்கு செல்ல பணம் கேட்டு தராத்தால் ஆத்திரத்தில் தாய், தந்தையை அடித்து மண்டை உடைத்த மகனை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் முதுநகர் அடுத்த ஆற்றங்கரை விதி பகுதியை சேர்ந்தவர் நடேசன், ராஜேஷ்வரி தம்பதி. இவர்களது மகன் சங்கர் (வயது 43). கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் ஆண்டு தோறும் சங்கர் ஐயப்ப சாமிக்கு மாலை அணிவித்து சபரிமலைக்கு செல்வது வழக்கம். இதே போல் இந்த ஆண்டும் சங்கர் சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்து உள்ளார். இந்த நிலையில் சங்கர் சபரிமலைக்கு செல்வதற்கு அவரது தாய் ராஜேஸ்வரி மற்றும் தந்தை நடேசன் ஆகியோரிடம் பணம் கேட்டு உள்ளார். வீட்டில் இருக்கும் எங்களிடம் பணம் இல்லை என கூறியுள்ளனர் பிறகு நான் எப்படி சபரிமலைக்கு செல்லவது என சங்கர் பெற்றோரிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
சங்கர் யாரிடமாவது கடன் பெற்று கொடுங்கள் என பெற்றோரிடம் முறையிட்டதாக தெரிகிறது. இதற்கு பெற்றோர் முடியாது என தெரிவித்துள்ளனர். மீண்டும் மீண்டும் சங்கர் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். பின்பு பணம் தராததால் தாய், தந்தை என்று பார்க்காமல் சங்கர் வீட்டின் வெளியே இருந்து மரக்கட்டையை எடுத்து வந்து கடுமையாக தாக்கி தாயின் மண்டையை உடைத்துள்ளார். மேலும் தந்தையையும் கடுமையாக அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த தாய் ராஜேஸ்வரி, தந்தை நடேசன், ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் கடலூர் துறைமுக போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கரை கைது செய்தனர்.
சபரிமலைக்கு செல்வதற்ககு பணம் கேட்டு தாய், தந்தையை மகனே அடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion