மேலும் அறிய
Advertisement
விஜய் போட்ட உத்தரவு... திருப்பத்தூரில் 1000 பேருக்கு உணவு வழங்கி அசத்திய தவெகவினர்
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்குமாறு நடிகர் விஜய் தனது ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பட்டினி இல்லா உலகம் வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழக வெற்றிக் கழகப் பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், மே 28-ம் தேதி பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு அறிவித்துள்ளார்.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும், அண்டை மாநிலங்களிலும் தமிழக வெற்றி கழகம் சார்பில் இலவச மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மாயப்பிள்ளையார் கோவில் தெரு மற்றும் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம், கோட்டை தெரு பகுதிகளில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் திருப்பத்தூர் மாவட்ட இளைஞர் அணி தலைவர் நவீன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சுமார் 1000க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
நிதி மேலாண்மை
வணிகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion