திருவண்ணாமலை | மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விசிக மாவட்ட செயலாளர் மிரட்டும் தொனியில் பேச்சு.. குவியும் கண்டனங்கள்
திமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போலீஸ் எல்லாம் எங்களை ஒன்னும் பண்ணமுடியாது என்றும் தகாத வார்த்தைகளாலும் பேசிய விசிக மாவட்ட செயலாளர் மிரட்டல் வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே உள்ள வீரளூர் கிராமத்தில், பொங்கலன்று சுடுகாட்டு வழி பிரச்சனையால் இரு சமூகத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அருந்ததியர் வசிக்கும் பகுதியில் உள்ள வீடுகள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து கலவரம் கட்டுக்குள் கொண்டுவர டிஐஜி ஆனி விஜயா தலைமையிலும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமாருடன் 800-க்கும் மேற்பட்ட திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 4 மாவட்ட காவல்துறையினர் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
திருவண்ணாமலையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் விசிக நபர் பேசிய வீடியோ வலை தளங்களில் வைரலாகி வருகின்றது@imanojprabakar@SRajaJourno@dinesh_venu@abpnadu @AbpVelMurugan pic.twitter.com/jsiC8xFN7r
— Vinoth (@Vinoth05503970) January 24, 2022
அதனை தொடர்ந்து அப்பகுதியில் கலவரத்தில் ஈடுபட்ட 250 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அதில் 20-க்கும் மேற்பட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் அருந்ததிய மக்களுக்கு ஏற்பட்ட அவல நிலையை கண்டித்து பல கட்சிகள் மற்றும் பல அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோன்று விடுதலை சிறுத்தை கட்சியினர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற விடுதலை சிறுத்தை கட்சியின் ஒரு ஆர்ப்பாட்டத்தில், அந்த கட்சியை சேர்ந்த ஆரணி வடக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கரன் பேசும் வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
இதுகுறித்து வைரலாகும் அந்த காணொளியில் பாஸ்கரன் பேசியதாவது,
”விடுதலை சிறுத்தைகள் அதிகாரம் மிக்கவர்கள். அரசியல் களத்திற்கு அதிகாரம் மிக்கவர்கள் என்றே செயல்படுங்கள். சவால்விட்டு சொல்கிறோம்., நாங்கள் எல்லாம் ரவுடிகள்., நாங்கள் எல்லாம் யாரு? நாங்களெல்லாம் ரவுடிகள் பட்டியலில் இருக்கின்றோம். எத்தனை ரவுடிகளை உருவாக்க வேண்டுமானாலும் தயாராக இருக்கிறோம். எல்லோரும் ரவுடி ஆகிவிட்டால்., நீ என்னடா செய்வ., கைது செய்வாய் அவ்வளவுதானடா.," என்று அந்த காணொளியில் அவர் அதிகாரமாக பேசுவது விமர்சனத்துக்கு ஆளாகிறது
காணொளி வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறது. மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆளுங்கட்சியை எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும், இவர் பேசியது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிராகவும் அந்தபகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.