Watch Video: சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற சிறுவன் மீது மோதிய பேருந்து - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ
ஆரணி அருகே சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற சிறுவன் மீது கண் இமைக்கும் நேரத்தில் தனியார் பேருந்து மோதியதில் வாகன டயரில் சிக்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
![Watch Video: சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற சிறுவன் மீது மோதிய பேருந்து - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ Tiruvannamalai Road Accident Private bus colliding with boy crossing road on bicycle in arani- Watch Video Watch Video: சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற சிறுவன் மீது மோதிய பேருந்து - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/15/f8cc5c40107e25bbdb761f4b9de65d1d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ராட்டினமங்கலம் கிராமத்தை சேர்ந்த கார் ஓட்டுநர் சரணவன். இவருடைய மனைவி புஷ்பலதா. இந்த தம்பதியினருக்கு விஷ்ணு வயது (11) அர்ஷினி வயது (8) என்ற ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் இவரது மகன் விஷ்ணு நேற்று இரவு தாய் புஷ்பலதா கூறியதன் பேரில் ஓட்டலுக்கு சென்று சாம்பார் வாங்கி வருவதற்காக சைக்கிளில் சென்று இருந்தார். அதனைத்தொடர்ந்து ஆரணி ஆற்காடு சாலையில் வீட்டின் அருகே உள்ள ஓட்டலில் டிபன் வாங்கிக்கொண்டு விஷ்ணு தன்னுடைய சைக்கிளில் நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டு இருந்தார். அப்போது இரும்பேடு கூட்ரோடு அருகில் செய்யாரிலிருந்து ஆரணி நோக்கி மின்னல் வேகத்தில் வந்துகொண்டு இருந்த தனியார் பேருந்து கண் இமைக்கும் நேரத்தில் சிறுவன் மீது வேகமாக மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சிறுவன் தனியார் பேருந்தின் பின்புற சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற சிறுவன் மீது கண் இமைக்கும் நேரத்தில் தனியார் பேருந்து மோதி வாகன டயரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சிறுவனின் விபத்து நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி@SRajaJourno@abpnadu pic.twitter.com/ZRbsG7PvC6
— Vinoth (@Vinoth05503970) June 15, 2022
அதன் பிறகு சிறுவனை அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் விஷ்ணுவை பரிசோதனை செய்ததில் சிறுவன் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும் தகலவலறிந்த வந்த ஆரணி தாலுகா காவல்நிலைய காவல்துறையினர் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையொடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய தனியார் பேருந்தை பறிமுதல் செய்தும் தப்பியோடிய ஓட்டுனர் செல்வரசு என்பவரை தேடி வருகின்றனர். நெஞ்சை பதற வைக்கும் சிறுவன் சைக்கிளில் சாலையை கடக்கும் காட்சி வெளியானது ஆரணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
உயிரிழந்த விஷ்ணு ஆரணியை அடுத்த குண்ணத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் நேற்றுமுன் தினம் 6-ம் வகுப்பு சேர்க்கப்பட்டார். சீருடையை வாங்கி வந்து தைக்க கொடுத்துவிட்டதாகவும், புத்தகங்களை பைண்டிங் செய்வதற்காக கொடுத்துவிட்டு வந்ததாகவும் , மேலும் விஷ்ணு உயிருடன் தான் உள்ளான் அவனுக்கு சிகிச்சை அளிக்கவேண்டும் என மருத்துவமனை வளாகத்தில் பெற்றோர் கூறி கதறும் காட்சி அங்கு இருந்தோரின் கண்களை கலங்க செய்தது. இதே போன்று தனியார் பேருந்து மோதி இருசக்கரவாகனத்தில் வந்த 2 நபர்கள் படுகாயமடைந்தனர். மேலும் அந்த இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் அங்கு வேகத்தடை அமைக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)