மேலும் அறிய

Tiruvannamalai Hijab: ஹிஜாப் அணியக் கூடாது என்பது தமிழகத்தில் துரதிஷ்டவசமானது - பாதிக்கப்பட்ட மாணவி

தமிழகத்தில் ஹிஜாப் அணிய கூடாது என்பது துரதிஷ்டவசமானது நம்முடைய அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள மத சுதந்திரத்திற்கு எதிரானதாக உள்ளது என மாணவி ஷபானா தெரிவித்தார்

திருவண்ணாமலை அடுத்த சோமாசிபாடி கிராமத்தில் அமைந்துள்ளது தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று தமிழ்நாடு தக்ஷின் பாரத் ஹிந்தி பிரச்சார் சபா சார்பில் இந்தி தேர்வுகள் நடைபெற்றது தேர்வு எழுதுவதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 540 மாணவ-மாணவிகள் இந்த தேர்வினை எழுதினர். அதில் திருவண்ணாமலை அடுத்த தனியார் பள்ளியில் அரபிக் ஆசிரியையாக பணிபுரியும் ஷபானா தேர்வு எழுத வந்துள்ளார். அனுமதி கடிதத்துடன் தேர்வு அறைக்குள் சென்ற ஷபானாவிற்கு கேள்வித்தாள் கொடுக்கப்பட்டு 10 நிமிடங்கள் தேர்வு எழுதிய ஷபானாவை தேர்வு அறை மேற்பார்வையாளர் ஹிஜாப் அணிந்து கொண்டு தேர்வை எழுதக்கூடாது என தெரிவித்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத ஷபானா, அதிர்ச்சியடைந்து ஹிஜாப் அணிந்து கொண்டுதான் தேர்வை எழுதுவேன் என்று தெரிவிக்கவே, இருவருக்கும் தேர்வு அறையிலுள்ளே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து பள்ளி நிர்வாகம் ஷபானாவிடம் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதுவேன் என்று நீங்கள் சொன்னால் வெளியே சென்று விடுங்கள் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

Tiruvannamalai Hijab: ஹிஜாப் அணியக் கூடாது என்பது தமிழகத்தில்  துரதிஷ்டவசமானது  - பாதிக்கப்பட்ட மாணவி

இதுகுறித்து மாணவி ஷபானாவிடம் பேசுகையில்,

நேற்று ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை மாவட்டம் சோமாசிபாடி பகுதியில் அமைந்துள்ள அண்ணாமலையார் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற மத்திமா இந்தி தேர்வு எழுத நான் சென்றிருந்தேன் எனக்கு ஹால்' டிக்கெட் வழங்கப்பட்டு தேர்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டேன். தேர்வு தொடங்கி 10 நிமிடம் கழித்து அந்தப் பள்ளியின் பிரின்சிபல் என்னிடம் வந்து ஹிஜாப் உடைய அகற்றிவிட்டு தேர்வு எழுத வற்புறுத்தினார். நான் சொன்னேன் இது எங்கள் மத உரிமை இந்த உடையை நாங்கள் வீட்டில் இருக்கும் நேரத்தை தவிர அகற்ற மாட்டோம் என்று அவரிடம் மன்றாடி கேட்டுக் கொண்டதன் பிறகும் அவர் ஏற்றுக் கொள்ளாமல் அந்தப் பள்ளியின் தாளாளரை அழைத்து சொன்னார் தாளாளரும் என்னுடைய கோரிக்கையை ஏற்றுக் கொள்ள மறுத்து என்னுடைய எக்ஸாம் பேப்பரை பிடுங்கிக் கொண்டு ஹால் டிக்கெட் கொண்டு சென்று விட்டார்கள். பிறகு இந்தி பிரச்சார சபா செயலாளர் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கரஸ்பாண்டன்ட் பேசினார்.

Tiruvannamalai Hijab: ஹிஜாப் அணியக் கூடாது என்பது தமிழகத்தில்  துரதிஷ்டவசமானது  - பாதிக்கப்பட்ட மாணவி

இது போல ஹிஜாப் அணிந்துதான் ஒரு பெண் தேர்வு எழுதுவாராம் என்று அடம் பிடிக்கிறார் என்று அவரிடம் கூறினார். அந்த ஹிந்தி பிரச்சார சபா செயலாளர் என்னிடம் தொலைபேசியில் பேசினார் அப்பொழுது என்னுடைய தரப்பு நியாயத்தை அவரிடம் கூறினேன் அவர் ஏற்றுக் கொள்ள மறுத்து நீ யார் நீ எங்கு பணி புரிகிறாய் எந்த பள்ளியில் டீச்சர் ஆக இருக்கிறாய் என்று மிரட்டல் தோணியில் கேட்டார் நான் இதே தேர்வை கடந்த (19/02/2023) அன்று எழுதினேன். அப்போதெல்லாம் ஹிஜாப் அணிந்துதான் எழுதினேன் இப்பொழுது மட்டும் ஏன் தடை செய்கிறீர்கள் ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதக்கூடாது என்று அரசாணை உள்ளதா என்று கேட்டேன். அதற்கு அவர்களிடம் எந்த பதிலும் இல்லை, நான் ஹிஜாப் இல்லாமல் தேர்வு எழுத மாட்டேன் என்று தீர்மானமாக அவரிடம் கூறிவிட்டேன். அவர் அந்தப் பள்ளியின் தாளாளர் இடம் பேசினார் பிறகும் எனக்கு தேர்வு எழுத அவர்கள் அனுமதிக்கவில்லை அந்த தாளாளரிடம் கேட்டால் இந்தி பிரச்சார சபா செயலாளர் உங்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டாம் என்று கூறிவிட்டார் என்று தாளாளர் கூறினார்.

Tiruvannamalai Hijab: ஹிஜாப் அணியக் கூடாது என்பது தமிழகத்தில்  துரதிஷ்டவசமானது  - பாதிக்கப்பட்ட மாணவி

நான் ஒரு மணி நேரம் அங்கேயே காத்திருந்தேன் அவர்கள் என்னை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை, என்னுடைய ஹிஜாபுரிமையை இழந்து தான் நான் தேர்வு எழுத வேண்டுமென்றால் நான் தேர்வு எழுத மாட்டேன் என்று கூறிவிட்டு தேர்வு மையத்தில் இருந்து வெளியே வந்துவிட்டேன். தேர்வு தொடங்கி ஒரு மணி நேரம் கழிந்து விட்டது, இதற்குப் பிறகு என்னால் எப்படி தேர்வு எழுத முடியும் காலையில் ஒரு தேர்வு மதியம் ஒரு தேர்வு எழுத வேண்டும் நேரம் கடந்து விட்டதாலும் அவர்கள் கொடுத்த மன உளைச்சல் காரணமாகவும் என்னால் தேர்வு எழுத முடியவில்லை. அதனால் நான் தேர்வு எழுதவில்லை இதுபோன்ற சம்பவங்கள் நம்முடைய தமிழகத்தில் நடைபெறுவது துரதிஷ்டவசமானது நம்முடைய அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள மத சுதந்திரத்திற்கு எதிரானதாக உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட பள்ளியின் தாளாளர் மீதும் பிரின்ஸ்பல் மீதும் ஹிந்தி பிரச்சார சபா செக்ரட்டரி மீதும் தக்க நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அண்ணாமலையார் மெட்ரிக் பள்ளியில் இதற்குப் பிறகு தேர்வு மையம் அமைக்க அனுமதி வழங்க கூடாது என்று தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK vs VCK Flag issue | ”எங்க கொடிதான் பறக்கணும்”தவெக- விசிக கடும் மோதல் களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!Tirupati Laddu Row BR Naidu : ”இந்துவா இருந்தால் தான் வேலை..இல்லனா வெளியே போ!” தேவஸ்தானம் பகீர்!Police Passed away | பேனரால் நிகழ்ந்த விபரீதம்பரிதாபமாக இறந்த காவலர் சோகத்தில் மூழ்கிய கிராமம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Prashant Kishor: ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
"ஊர்களுக்கு ராமர், கிருஷ்ணர்னுதான் பேர் வைக்கனும்" தடாலடியாக பேசிய அஸ்ஸாம் முதல்வர்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
Kodaikanal: தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
Embed widget