மேலும் அறிய
Advertisement
வகுப்பறையில் போதை பொருள் பயன்படுத்திய மாணவர்கள்- தலைமையாசிரியர் எடுத்த அதிரடி நடவடிக்கை
வாணியம்பாடி அருகே வகுப்பறையில் போதை பொருள் பயன்படுத்திய 7 மாணவர்கள் ஒருவாரம் சஸ்பென்ட்
வாணியம்பாடி அருகே வகுப்பறையில் போதை பொருள் பயன்படுத்திய 7 மாணவர்கள் ஒருவாரம் சஸ்பென்ட் செய்து பள்ளி தலைமையாசிரியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் அவர்கள் நடத்தையில் சந்தேகம் ஏற்படவே ஆசிரியர் மாணவர்களின் பையை சோதனையிட, அவர்களிடமிருந்து சிறிய வெள்ளை நிற பையில் இருந்து கஞ்சா மாதிரியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது
மேலும் இதனை வகுப்பறையில் பயன்படுத்தியதாக ஏழு மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் தேவன் தெரிவித்த பொழுது, மாணவர்கள் பயன்படுத்தியது கஞ்சா இல்லை ஹேன்ஸ் HANS போன்ற புகையிலைப் பொருள் என்றும் இதனை அவர்களிடமிருந்து கைப்பற்றியது உண்மைதான் எனவும் இதுகுறித்து ஏழு மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்களிடையே போதை பொருள் கலாச்சாரம் பெருகி வருவது இப்பகுதியில் உள்ள பெற்றோர்களிடம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion