மேலும் அறிய

‛‛நீண்ட விடுப்பு கேட்ட நளினி-முருகன்; கையை விரித்த அமைச்சர்’’ வேலூர் சிறை ஆய்வில் சந்திப்பு!

வேலூர் சிறையில் ஆய்வு செய்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் நீண்ட விடுப்பு வழங்குமாறு ராஜூவ் கொலை கைதிகள் முருகன் மற்றும் நளினி ஆகியோர் கோரிக்கை வைத்தனர்.

"சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழக சிறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி .

வேலூர் மாநகராட்சி தொரப்பாடியில் அமைந்துள்ள வேலூர் மத்திய சிறையில் இன்று சிறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

‛‛நீண்ட விடுப்பு கேட்ட நளினி-முருகன்; கையை விரித்த அமைச்சர்’’ வேலூர் சிறை ஆய்வில் சந்திப்பு!

முதலில் ஆண்கள் சிறைக்கு சென்று அங்குள்ள அடிப்படை வசதிகள், சிறைத்துறை மருத்துவமனை, கைதிகள் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார். பின்னர் சிறையில் கைதிகள் நடைமுறைகள், அங்கு சிறைவாசிகள் மூலம் நடைபெற்றுவரும் விவசாயம், காலணி உற்பத்தி  தொழில் ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்தும் கேட்டறிந்தார். 

இதைத் தொடர்ந்து பெண்கள் தனிச் சிறைக்கு சென்ற அமைச்சர் ரகுபதி, பெண் குற்றவாளிகளிடம்  உணவு முறைகள் முறையாக உள்ளதா என்று கேட்டறிந்து சமையல் கூடங்களையும் ஆய்வு செய்தார்.

‛‛நீண்ட விடுப்பு கேட்ட நளினி-முருகன்; கையை விரித்த அமைச்சர்’’ வேலூர் சிறை ஆய்வில் சந்திப்பு!

ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி , ‛‛வேலூர் ஆண்கள் சிறையில் தற்பொழுது 742 பேரும் பெண்கள் சிறையில் 97 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில்  உள்ள மருத்துவமனை , சமையல் கூடம், கைதிகள் தங்கும் இடம் ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது,’’ என்று தெரிவித்தார் . மேலும் அவர் கூறுகையில், 

‛‛ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும்  முருகன் ,  நளினி ஆகிய இருவரையும் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை  கேட்டறிந்தோம்.
 
‛‛நீண்ட விடுப்பு கேட்ட நளினி-முருகன்; கையை விரித்த அமைச்சர்’’ வேலூர் சிறை ஆய்வில் சந்திப்பு!

கோரிக்கை மனுவில் முருகன், நளினி இருவரும் தங்களுக்கு நீண்ட நாள் விடுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் . அவர்களிடம் உங்களது  குடும்ப உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தால் 30 நாட்கள் வரை விடுப்பு வழங்க வாய்ப்புள்ளது என்றும் , அதனை மேலும் சில நாட்கள் நீட்டிக்கவும் முடியும். ஆனால் நீண்ட நாட்கள் விடுப்பு என்பது அரசால் நேரடியாக வழங்க முடியாது என்றும் . நீண்ட நாட்கள் விடுப்பு குறித்து கோர்ட்டில் மனு தாக்கல் செய்து பெற்றுக்கொண்டால் அதனை செயல்படுத்த தயாராக இருக்கிறோம் என அவர்களுக்கு ஆலோசனை வழங்கியதாக கூறிய அமைச்சர் ரகுபதி , ஆண்கள் மற்றும் பெண்கள் சிறையில் உள்ள பிற கைதிகளின் கோரிக்கைகளையும் மனுவாக பெறப்பட்டுள்ளதாக,’’ குறிப்பிட்டார்.

வேலூர் சிறையில்  ஷூ தயாரிப்பு நெசவுத் தொழில் செய்து வருகின்றனர். இந்தத் தொழிற்கூடங்கள் விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார் .

‛‛நீண்ட விடுப்பு கேட்ட நளினி-முருகன்; கையை விரித்த அமைச்சர்’’ வேலூர் சிறை ஆய்வில் சந்திப்பு!

வேலூரில் சிறைக் கைதிகளால் பெட்ரோல் பங்க் நடத்தப்படுகிறது. இதேபோல தமிழகத்தில் உள்ள மேலும் 6 இடங்களில் விரைவில்  திறக்கப்படும். ஜெயில் கைதிகள் அனைவருக்கும் தகுதி அடிப்படையில் புதிய வேலைவாய்ப்பு வழங்கப்படும். கிளை சிறைகளில் பழுதான கட்டிடங்கள் புதுப்பிக்கப்படும். புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் உயர் நீதிமன்றம் பரிந்துரையின் பேரில் தலைமை நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்  என்று தெரிவித்தார் .

சிறைத்துறை அமைச்சரின் ஆய்வின் பொழுது,  தமிழ்நாடு  கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி , எம்.எல் ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர் விஷ்ணு பிரியா, சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி , சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி ஆகியோர் உடனிருந்தனர்.

தலைப்பு செய்திகள்

TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Embed widget