மேலும் அறிய
Advertisement
Pongal 2024: திருப்பத்தூரில் பொங்கல் திருநாளை முன்னிட்டு களைகட்டிய கரும்பு விற்பனை
பொங்கல் வைக்க தேவையான பொருட்களை வாங்க திருப்பத்தூரில் பொதுமக்கள் குவிந்ததால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு திருப்பத்தூரில் கரும்பு விற்பனை களைகட்டியது.
தமிழர் திருநாளாம் தை திருநாளை முன்னிட்டு முதலில் இடம் பெறுவது கரும்பு தான். மேலும் தொழிற்சாலைகள், கம்பெனி, கடைகளில் தங்களது தொழிலாளர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசாக முதலாளிகள் கரும்பு பரிசளிப்பது வழக்கம்.
திருப்பத்தூர் நகர பகுதிகளில் உள்ள கரும்பு மற்றும் பொங்கலுக்கு தேவையான மஞ்சள் செடி, பானைகள், புத்தாடைகள் என பல்வேறு பகுதிகளில் இருந்து திருப்பத்தூருக்கு படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக ஜவுளி கடைகளில் மற்றும் மளிகை கடை மற்றும் பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.
இந்நிலையில் இன்று காலை முதலே நகர பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கரும்புகளை வாங்க வந்த வண்ணம் உள்ளனர். மேலும் கரும்பு விற்பனை அமோகமாகவும் நடைபெற்று வருகிறது. திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொங்கல் வைக்க தேவையான பொருட்களை வாங்க திருப்பத்தூரில் பொதுமக்கள் குவிந்ததால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion