மேலும் அறிய
Advertisement
வாணியம்பாடி அருகே எருது விடும் விழாவிற்கு அனுமதி மறுப்பு; எச்சரிக்கை விடுத்த கிராம மக்கள்
மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க மறுக்கும் பட்சத்தில் வழக்கம்போல் எருது விடும் திருவிழா நடைபெறும் என கிராம மக்கள் எச்சரிக்கை.
வாணியம்பாடி அருகே வழக்கம் போல் நடைபெறும் எருது விடும் திருவிழாவிற்கு அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ள நிலையில், எருது விடும் திருவிழா நடைபெறுமா என கிராம மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளகுட்டை பகுதியில் தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை முன்னிட்டு கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக மூன்று தலைமுறைகளாக காணும் பொங்கல் மறுநாள் தை 4 ஆம் நாளில் எருது விடும் விழா நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் இந்த ஆண்டு எருது விடும் விழாவிற்காக அரசு விதிமுறைப்படி விழா குழுவினர் கடந்த மாதம் 16 ந்தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எருது விடும் விழாவிற்காக அனுமதி வழங்க மனு அளித்தும் அதன் பேரில் வாணியம்பாடி கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
மேலும் எருது விடும் விழா நெருங்கி வரும் நிலையில் திடீரென மாவட்ட நிர்வாகம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும், காப்பீடு கட்ட வேண்டும், தேசிய விலங்குகள் நல வாரியம் அனுமதி வழங்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும், அதற்குண்டான ஆவணங்களையும் சரியாக வைத்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்தும்,(வெப்சைட்) ஏற்கவில்லை என குற்றம் சாட்டிய அப்பகுதி மக்கள் வழக்கம் போல் காணும் பொங்கல் மறுநாள் கிராமத்தில் எருது விடும் திருவிழா நடைபெறும் என்றனர்.
வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் பணிபுரிபவர்கள் கூடுதலாக விடுமுறை எடுத்து விட்டு சொந்த ஊருக்கு திரும்பியுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்காதது கிராம மக்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்துள்ள பொதுமக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் அதேபோல் வெளிமாநிலங்களில் இருந்து சில காளைகள் ஏற்கனவே வந்துவிட்டதாக கூறப்படுகிறது.
விழா குழுவினர் எருது விடும் விழாவிற்கான தடுப்பு அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதால் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பரிசீலனை செய்து உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க மறுக்கும் பட்சத்தில் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று எருது விடும் திருவிழா நடைபெறும் எனவும் விழா குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion