மேலும் அறிய
Advertisement
திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் தங்கைக்கு தாலி கட்டிய கொலை குற்றவாளி பெற்றோருடன் கைது...!
தங்களது மகளை ஒரு கொலை குற்றவாளிக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்து, விக்னேஷ் கட்டிய தாலியை அறுத்து எறிந்துவிட்டு அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்
அரக்கோணம் அருகே ஒருதலைபட்சமாகக் காதலித்த பெண்ணை திருமணம் செய்து தர மறுத்ததால் காதலியின் 14 வயது தங்கைக்கு கட்டாய தாலி கட்டிய கொலைக் குற்றவாளி கைது .
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், வேலுார்பேட்டையைச் சேர்ந்த கூலித்தொழிலாளிகளான கோபி-சரளா தம்பதிகளின் மகன் விக்னேஷ் (22). இதே மாவட்டத்தை சேர்ந்த கீழ்குப்பம் கிராமத்தில் பரோட்டா மணிகண்டன் என்பவரை கடந்த 2019ஆம் ஆண்டு கொலை செய்த குற்றத்திற்காக அரக்கோணம் போலீசார் கடந்த 2 ஆண்டுகளாக இவரை தேடி வருகின்றனர் .
போலீஸ் தேடுவதை அறிந்த விக்னேஷ் தனது பெற்றோருடன் கடந்த 2 ஆண்டுகளாகப் பெங்களூரில் தலைமறைவாக இருந்துள்ளார் . இதற்கிடையில், வேலுார்பேட்டையைச் சேர்ந்த 23 வயது பெண்ணை ஒருதலைபட்சமாக விக்னேஷ் காதலித்து வந்தார். இதற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலியைக் கடத்தி திருமணம் செய்ய விக்னேஷ் திட்டமிட்டார். இதையறிந்த பெண் குடும்பத்தினர், அப்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்தனர். மேலும் அந்த பெண்ணுக்குக் கன்னி பூஜை நடத்த ஏற்பாடு செய்தனர்.
இதையறிந்த விக்னேஷ், அவரது பெற்றோருடன் கடந்த 15ஆம் தேதி வேலுார்பேட்டைக்கு வந்தார். நேற்று முன்தினம் மாலை திருமணம் நிச்சயமான பெண்ணுக்கு கன்னி பூஜை நடந்தது. இதில் பங்கேற்ற விக்னேஷ், திருமணம் நிச்சயமாகி உள்ள தனது ஒரு தலைக்காதலிக்கு தாலி கட்ட மஞ்சள் கயிற்றை மறைத்து வைத்திருந்தார். ஆனால், அங்கு காதலி இல்லாததால் காதலியின் 14 வயது தங்கைக்கு தான் மறைத்து வைத்திருந்த தாலியை கட்டினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் தங்களது மகளை ஒரு கொலை குற்றவாளிக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்து, விக்னேஷ் கட்டிய தாலியை அறுத்து எறிந்துவிட்டு அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்களது புகாரின் அடிப்படையில் விக்னேஷ் அவரது பெற்றோர்கள் கோபி, சரளா ஆகிய மூவரையும் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து, மூவர் மீது போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டுள்ள விக்னேஷ் மீது கொலைவழக்கு நிலுவையில் இருப்பதால் கொலை வழக்கு சம்பந்தமாகவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
சென்னை
தேர்தல் 2024
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion