தொடங்கியது மார்கழி....வாசலில் வண்ண கோலமிட்டு அழகு படுத்துவதில் பெண்கள் ஆர்வம்
மார்கழி மாதம் தொடங்கிய நிலையில் வீடுதோறும் வாசலில் வண்ண கோலமிட்டு பூசணிப்பூ வைத்து அழகு படுத்துவதில் பெண்கள் ஆர்வம்.
தமிழ் மாதங்களில் சூரிய தனுசு ராசியில் பிரவேசிக்கும் மாதம் மார்கழி மாதம் என்று அழைக்கப்படுகிறது. தனுசு ராசியில் அதிபதி குரு பகவானாக இருப்பதால் இந்த ராசியில் சூரியன் இருக்கும் நாள் இந்து மாத வழிபாடுகளில் புனித நாட்களாக கருதப்படுகிறது. குரு பகவான் ஞானத்தை அருள் பவன் என்பது குறிப்பிடத்தக்கது. சிவன் கோயில்களில் இந்த மாதத்தில் மாணிக்கவாசகர் அருளிய திருவெண்பாவை பாடல்களையும் வைணவ கோயில்களில் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்களையும் பாடி வழிபடுவார்கள். சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம் மற்றும் வைணவ கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழாக்கள் நடைபெறுவதும் மார்கழியில் தான். இந்த மாதத்தில் அனைத்து கிராம கோயில்களிலும் வழிபாடுகள் நடைபெறும் பஜனைகள் பாடுவார்கள், பக்தி பாடல்கள் ஒளிபரப்புவார்கள்.
பூமியானது விஞ்ஞான ரீதியாக வளிமண்டலத்தை இந்த மாதத்தில் நெருங்கி வருவதால் ஓசோன் வாய்வு பூமிக்கு அதிகம் வருவது காலை நான்கு முப்பது மணி முதல் காலை 6 மணி வரையில், இந்த மாதத்தில் தான் ஓசோன் வாயு என்பது அடர்த்தியான ஆக்ஸிஜன் ஆகும். இதை சுவாசித்தால் நோய் எதிர்ப்பு சக்தியும் ஆரோக்கியமும் கிடைப்பதால் தான் முன்னோர்கள் இந்த மாதத்தில் அதிகாலை எழுந்து பாடல்கள் பாடி கோயில்களில் வழிபட வேண்டும் என்றனர். கிராமங்களில் வீட்டின் வாசலில் கோளம் இட்டு மருத்துவ சக்தி கொண்ட பூசணிப்பூவை மாட்டு சாணியில் சொறுகி வைக்கலாம் கிருஷ்ண பரமாத்மா மாதங்களில் நான் மார்கழி என்று கூறியுள்ளார். மேலும் அனைத்து கோயில்களும் அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெறும்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம்புதூர் கிராமத்தில் மார்கழி மாதம் 1-ம் நாள் தொடங்கிய நிலையில் வீடுதோறும் வாசலில் தண்ணீர் தெளித்து வண்ண கோலமிட்டு பூசணிப்பூ வைத்து அழகு படுத்துவதில் பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மார்கழி மாதத்தில் அதிகாலை 4 மணி முதல் 5 மணி வரை பச்சரசி மற்றும் பல வண்ண கோலம் போட்டு அதில் மாட்டு சாணத்தில் பிள்ளையார் செய்து மஞ்சள் நிறமான பூசணி பூ வைப்பது வழக்கம். மார்கழி மாதம் முதல் தை மாதம் பொங்கல் முடியும் வரை இவற்றை செய்து வருகின்றனர். இவ்வாறு காலையில் எழுவதால் சுத்தமான ஆக்சிஜன் சுவாசக்காற்றுகளும் இதன் மூலம் உடல் ஆரோக்கியமும் பல்வேறு நன்மைகளும் கிடைப்பதாகவும் மற்றும் நோய் விலகுவதாகவும். மேலும் முன்னோர்கள் காலத்தில் தங்கள் வீடுகளில் திருமண வயதில் பெண், மகன் இருப்பதை குறிக்கும் விதமாக தங்கள் வீட்டு வாசலில் அதிகாலையில் தண்ணீர் தெளித்து வண்ண கோலமிட்டு சாணத்தில் பிள்ளையார் செய்து அதில் பூசணிப்பூ அல்லது செம்பருத்தி பூ வைப்பதன் மூலம் அவ்வழியாக செல்வது பஜனர்கள் அதனைப் பார்வையிட்டு தகவல் தெரிந்து கொள்வதற்காக இதை வைப்பதாகவும் பெண்கள் தெரிவிக்கின்றனர்.