கர்ப்பமாக்கிய தலைமறைவான மாணவர்: பெற்றோருடன் காதலன் வீட்டில் குடியேறிய கல்லூரி மாணவி!
மாணவியின் பெற்றோர் தனது மகளை அழைத்து கொண்டு, நேற்று மதன்குமார் வீட்டிற்கு சென்றனர். பின்னர், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கேயே தங்க ஆரம்பித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள ஒருகிராமத்தை சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. ஆரணி டவுனை சேர்ந்தவர் முனுசாமி மகன் மதன்குமார் வயது (21). இருவரும் வேலூரில் உள்ள வெவ்வேறு கல்லூரிகளில் படித்து வருகின்றனர். பேருந்தில் கல்லூரிக்கு சென்று வரும்போது இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அப்போது, மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி மதன்குமார் பலமுறை பாலியல் உறவு வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி தற்போது 7 மாதங்கள் கர்ப்பமாக உள்ளார்.
இதையறிந்து அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதன்குமார் வீட்டிற்கு சென்று, அவரது தாயிடம் நடந்த விவரங்களை தெரிவித்தனர். அதற்கு தனது மகளுடன் திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளனர். அப்போது, மதன்குமார் மற்றும் அவரது தாயார் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததுடன், மதன்குமார் கடந்த சில வாரங்களாக தலைமறைவாகிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர். கடந்த 15ம் தேதி ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், காவல்துறையினய் மதன்குமாரின் தாயாரை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, இருவருக்கும் திருமணம் செய்து வைக்க ஒப்புக்கொண்ட மதன்குமாரின் தாயார், திடீரென அவரும் தலைமறைவாகி விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் தனது மகளை அழைத்து கொண்டு, நேற்று மதன்குமார் வீட்டிற்கு சென்றனர். பின்னர், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கயே தங்க ஆரம்பித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, ஆரணி மகளிர் காவல்துறையினர் மதன் குமார் வீட்டிற்கு சென்று மாணவியின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், தனது மகளை திருமணம் செய்து கொள்ளும்வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் எனக்கூறி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடு பட்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து காவல்துறையினர், மதன்குமாரின் உறவினரை வரவழைத்து நடந்த விவரங்களை தெரிவித்தனர். மேலும், மதன்குமார் மற்றும் அவரது தாயை உடனடியாக வரவழைத்து, கல்லூரி மாணவிக்கு மதன்குமாரை திருமணம் செய்து வைக்குமாறு அறிவுறுத்தினர். அவரும் திருமணம் செய்து வைப்பதாக எழுத்துப்பூர்வமாக ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனாலும், மதன்குமார் வரும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் எனக் கூறி கல்லூரி மாணவி மற்றும் அவரது பெற்றோர் வீட் டிலேயே தங்கியுள்ளனர். இதனால் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இஸ்லாமிய இளைஞர் அடித்துக்கொலை: பிரிவினைவாதம் காரணமா? குடும்பத்தினர் சொல்வது என்ன?