மேலும் அறிய

உடல்நலக்குறைவால் காலமான வேலூர் முன்னாள் எம்.பி செங்குட்டுவன் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

அ.தி.மு.க இரண்டாக உடைந்தபோது அ.ம.மு.க.வில் சேர்ந்தார். பின்னர் சசிகலா - டிடிவி தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. கட்சியின் நிர்வாகியாக பதவி வகித்து வருகிறார்  .

வேலூர் முன்னாள் அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் (65) உடல்நலக்குறைவு காரணமாக வேலூர் தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார். காட்பாடி திருநகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த செங்குட்டுவனுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காகச் சென்னை உட்பட பல மருத்துவமனைகளில்  சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவில் செங்குட்டுவன் மரணமடைந்தார்.
 
உடல்நலக்குறைவால் காலமான வேலூர் முன்னாள் எம்.பி செங்குட்டுவன் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி
 
அவருடைய உடல் காட்பாடி திருநகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது . இன்று மாலை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள எரிவாயு தகன மேடையில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. 2014ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க சார்பில் வேலூர் மக்களவை தொகுதியில் தனக்கு எதிராக போட்டியிட்ட பாஜக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை 59,393 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் 30 ஆண்டுகளுக்கு பின்னர் வேலூரில் அ.தி.மு.க. வெற்றி பெற்ற காரணமாக இருந்தவர் செங்குட்டுவன்.
 
1980ஆம் ஆண்டு சென்னை சட்டக் கல்லூரியில் பயின்ற மாணவர் பருவத்திலேயே தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்ட செங்குட்டுவன், 1983ஆம் ஆண்டிலிருந்து வழக்கறிஞராக தனது வாழ்க்கையை தொடங்கினார். 2001 முதல் 2006 வரை வேலூர் மாவட்ட அரசு வழக்கறிஞராகவும், 2011 முதல் 2014 வரை பொது வழக்கறிஞராகவும் பதவி வகித்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பாதுகாப்பு நிலைக்குழு உறுப்பினர், தொழில்துறை நிலைக்குழு உறுப்பினர் , சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் குழு உறுப்பினராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
 
உடல்நலக்குறைவால் காலமான வேலூர் முன்னாள் எம்.பி செங்குட்டுவன் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி
 
அ.தி.மு.க இரண்டாக உடைந்தபோது அ.ம.மு.க.வில் சேர்ந்தார். பின்னர் சசிகலா - டிடிவி தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. கட்சியின் நிர்வாகியாக பதவி வகித்து வந்தார் பின்னர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். செங்குட்டுவனின் மனைவி ஜெயந்தி வேலூர் எல்.ஐ.சி. அலுவலகத்தில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார் அவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
 
உயிரிழந்த வேலூர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செங்குட்டுவனின் உடலுக்கு அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Group 2: நாளை குரூப் 2 மெயின் தேர்வு; இதையெல்லாம் செய்தால் விடைத்தாளே செல்லாது- டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை!
TNPSC Group 2: நாளை குரூப் 2 மெயின் தேர்வு; இதையெல்லாம் செய்தால் விடைத்தாளே செல்லாது- டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை!
மெயின் விக்கெட்! நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளை துறந்த காளியம்மாள்? இன்று வெளியாகும் அறிவிப்பு
மெயின் விக்கெட்! நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளை துறந்த காளியம்மாள்? இன்று வெளியாகும் அறிவிப்பு
ரூ.822 கோடி பிராஜெக்ட்! ராயபுரத்திற்கு மாறும் பிராட்வே பஸ்டாண்டு! வரப்போகுது மல்டி மாடல் கட்டிடம்! என்னென்ன வசதிகள்?
ரூ.822 கோடி பிராஜெக்ட்! ராயபுரத்திற்கு மாறும் பிராட்வே பஸ்டாண்டு! வரப்போகுது மல்டி மாடல் கட்டிடம்! என்னென்ன வசதிகள்?
Manjummel Boys Making Video: மஞ்சும்மல் பாய்ஸ் ஓராண்டு...பிரமிக்க வைக்கும் குணா குகை மேக்கிங் வீடியோ வெளியீடு...
மஞ்சும்மல் பாய்ஸ் ஓராண்டு...பிரமிக்க வைக்கும் குணா குகை மேக்கிங் வீடியோ வெளியீடு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NEEK Movie review | விடிய விடிய ஒட்டிய NEEK! தனுஷ் செய்த பெரிய தப்பு? காவியமா..? கிரிஞ்சா..?Annamalai | சால்வை போட வந்த நிர்வாகி தள்ளி விட்ட கே.பி ராமலிங்கம் அ.மலை நிகழ்ச்சியில் அதிர்ச்சி! | BJPMarina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 2: நாளை குரூப் 2 மெயின் தேர்வு; இதையெல்லாம் செய்தால் விடைத்தாளே செல்லாது- டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை!
TNPSC Group 2: நாளை குரூப் 2 மெயின் தேர்வு; இதையெல்லாம் செய்தால் விடைத்தாளே செல்லாது- டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை!
மெயின் விக்கெட்! நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளை துறந்த காளியம்மாள்? இன்று வெளியாகும் அறிவிப்பு
மெயின் விக்கெட்! நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளை துறந்த காளியம்மாள்? இன்று வெளியாகும் அறிவிப்பு
ரூ.822 கோடி பிராஜெக்ட்! ராயபுரத்திற்கு மாறும் பிராட்வே பஸ்டாண்டு! வரப்போகுது மல்டி மாடல் கட்டிடம்! என்னென்ன வசதிகள்?
ரூ.822 கோடி பிராஜெக்ட்! ராயபுரத்திற்கு மாறும் பிராட்வே பஸ்டாண்டு! வரப்போகுது மல்டி மாடல் கட்டிடம்! என்னென்ன வசதிகள்?
Manjummel Boys Making Video: மஞ்சும்மல் பாய்ஸ் ஓராண்டு...பிரமிக்க வைக்கும் குணா குகை மேக்கிங் வீடியோ வெளியீடு...
மஞ்சும்மல் பாய்ஸ் ஓராண்டு...பிரமிக்க வைக்கும் குணா குகை மேக்கிங் வீடியோ வெளியீடு...
US Threatens Ukraine: நீ அத தரலைன்னா, நான் இத கட் பண்ணிடுவேன்... உக்ரைனை மிரட்டும் அமெரிக்கா...
நீ அத தரலைன்னா, நான் இத கட் பண்ணிடுவேன்... உக்ரைனை மிரட்டும் அமெரிக்கா...
CBSE: எதிர்த்தா பேசுறீங்க..! மாநில அரசுகளின் உரிமையை பறித்த மத்திய அரசு - இனி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு..!
CBSE: எதிர்த்தா பேசுறீங்க..! மாநில அரசுகளின் உரிமையை பறித்த மத்திய அரசு - இனி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு..!
Rahul Slams Modi: அது ஒண்ணும் பர்சனல் மேட்டர் இல்ல, மோடி இப்படி செஞ்சுருக்க கூடாது..எதை பற்றி கூறினார் ராகுல்.?
அது ஒண்ணும் பர்சனல் மேட்டர் இல்ல, மோடி இப்படி செஞ்சுருக்க கூடாது..எதை பற்றி கூறினார் ராகுல்.?
Anna Univ Case: யாருப்பா நீ? மேலும் 7 வழக்குகளில் கைதான ஞானசேகரன் - நீளும் குற்றப்பட்டியல், போலீஸ் அதிரடி
Anna Univ Case: யாருப்பா நீ? மேலும் 7 வழக்குகளில் கைதான ஞானசேகரன் - நீளும் குற்றப்பட்டியல், போலீஸ் அதிரடி
Embed widget