மேலும் அறிய

’கட்சிக்காரர்களே உள்ளடி வேலை  செய்துவிட்டனர், தபால் ஓட்டுக்களால் ஜெயித்தேன்’ - துரைமுருகன் .

திமுக நிர்வாகிகளே எனக்கு உள்ளடி வேலைகள் செய்தார்கள் என்பது எனக்கு தெரியும். அப்படி யாரெல்லாம் உள்ளடி வேலைகள் செய்தார்களோ அவர்களின் பட்டியல் என்னிடம் உள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறாவிட்டால் துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி அடியோடு தி.மு.க.வில் இருந்து நீக்கிவிடுவேன் என அமைச்சர் துரைமுருகன் காட்டமாக பேசியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட காட்பாடி மேற்கு ஒன்றிய தி.மு.க. உறுப்பினர்கள் கூட்டம் திருவளத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் தி மு க பொது செயலாளரும் , தமிழ்நாடு  நீர்ப்பாசனம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேசினார் .

கூட்டத்தில் அவர் பேசும்பொழுது "நான் காட்பாடி  தொகுதியில் 71-ம் ஆண்டு முதல் மகத்தான ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்று வருகிறேன். குறிப்பாக காட்பாடி மேற்கு ஒன்றியம் தி.மு.கவின் கோட்டை என்று தான் சொல்லவேண்டும். ஆனால் இந்தமுறை , நாம்தான் நிச்சயவெற்றி என்று சிலர் சரியாக வேலை செய்யாமல் இருந்துவிட்டனர். அதோடு மட்டும் இல்லாமல் , முதல் முறையாக நமது கட்சியை சேர்ந்தவர்களே நான் தோற்கவேண்டும் என்று உள்ளடிவேலையில் செய்துள்ளனர் .

காட்பாடி யூனியன் கிராமங்களில் பெரும்பாலான பூத்களில் ஓட்டு எண்ணும்போது நாம் பின் தங்கிதான் இருந்தோம். நமது தி.மு.க. நிர்வாகிகளே எனக்கு உள்ளடி வேலைகள் செய்தார்கள் என்பது எனக்கு தெரியும். அப்படி யாரெல்லாம் உள்ளடி வேலைகள் செய்தார்களோ அவர்களின் பட்டியல் என்னிடம் உள்ளது. என்னை தோற்கடிக்க வேண்டும் என நினைத்தார்கள். ஆனால் நல்ல வேளையாக தபால் ஓட்டினால் வெற்றி பெற்று விட்டேன். இப்போது அவர்களுக்கும் நான்தான் அமைச்சர்.

காட்பாடி தொகுதிக்குட்பட்ட  விவசாயிகளின் நலனுக்காக , அம்முண்டி பகுதியில் , கூட்டுறவு  சக்கரை ஆளை கொண்டுவந்தது நான் , இதுபோன்று காட்பாடி தொகுதியில் எண்ணற்ற முன்னேற்ற பணிகளை செய்துள்ளேன் . இது மட்டும் அல்லாமல் , கட்சிக்காரர்கள் , பொதுமக்கள் என அனைவருக்கும் குறிகளே இல்லாத அளவுக்கு பல நலத்திட்டப்பணிகளை செய்துள்ளேன். ஆனால் நீங்கள், எனக்கு சரியாக தேர்தல் வேலை செய்யவில்லை. குறிப்பாக திருவலம் பகுதியில் நான் எதிர்பார்த்த ஓட்டு எனக்கு கிடைக்கவில்லை. சில ஆண்டுகள் முன்புவரை காங்கிரஸ் கட்சியின் கூடையாக இருந்த திருவுளத்தை, கட்சிக்காரர்களின் கூட்டு முயற்சியால் இதனை திமுக கோட்டையாக மாற்றியிருந்தோம். ஆனால் அங்கும் எனக்கு ஓட்டு குறைவாகவே பதிவாகி இருந்தது .

எனக்கு வாக்களிக்காமல் துரோகம் செய்தவர்களை, ஒரு தாய் தன் குழந்தையை மன்னிப்பது போல மன்னிக்கிறேன். இனியாவது அனைத்து விருப்பு வெறுப்புகளையும் மறந்து நடக்கப்போகும் உள்ளாட்சிமன்ற தேர்தலில் அலட்சியம், துரோகம் செய்யாமல் உள்ளாட்சியின் அனைத்து பதவிகளிலும் நமது கட்சியினர் வெற்றிபெற வேண்டும். அதற்காக அனைவரும் ஒற்றுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 

தமிழ்நாட்டின் 16 -வது சட்டமன்ற வாக்குப்பதிவு 2021 ஆண்டு ஏப்ரல் மாதம் 6 -ஆம் தேதி நடைபெற்றது . இதன் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 -ஆம் தேதி நடைபெற்றது . இதில் காட்பாடி தொகுதிக்கான சட்டமன்ற தேர்தலின் 25-வது  சுற்றின் முடிவில் அதிமுக வேட்பாளர் ராமு திமுக வேட்பாளர் துரைமுருகனை விட 346 ஓட்டுகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார். தபால் ஓட்டு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டதில்  , தி.மு.க. வேட்பாளர் துரைமுருகன் 1,778 வாக்குகள் பெற்றிருந்தார். அ.தி.மு.க வேட்பாளர் ராமு 608 வாக்குகள் பெற்றிருந்தார். இதனால் நிலைமை தலைகீழாக மாறியது. முன்னிலையில் இருந்த ராமு பின்னுக்கு தள்ளப்பட்டார். பழுதான வாக்கு இயந்தரங்களில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு இறுதியாக, 746 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Modi in Ghana: கானாவில் 21 குண்டுகள் முழங்க மோடிக்கு வரவேற்பு; ‘ஹரே கிருஷ்ணா‘ பாடல் பாடி வரவேற்ற இந்தியர்கள்
கானாவில் 21 குண்டுகள் முழங்க மோடிக்கு வரவேற்பு; ‘ஹரே கிருஷ்ணா‘ பாடல் பாடி வரவேற்ற இந்தியர்கள்
Shubman Gill: நான் தான் இருக்கேன்ல.. சதம் விளாசி மாஸ் காட்டிய கேப்டன் கில், இங்கிலாந்தில் பாரத் ஆர்மி சம்பவம்
Shubman Gill: நான் தான் இருக்கேன்ல.. சதம் விளாசி மாஸ் காட்டிய கேப்டன் கில், இங்கிலாந்தில் பாரத் ஆர்மி சம்பவம்
அஜித் வீட்டில் விஜய்.. ”நான் இருக்கேன் மா” கையை இருகிப்பிடித்து ஆறுதல் சொன்ன தவெக தலைவர்..
அஜித் வீட்டில் விஜய்.. ”நான் இருக்கேன் மா” கையை இருகிப்பிடித்து ஆறுதல் சொன்ன தவெக தலைவர்..
Hari Nadar : ‘சிறைக்கு சென்றவருடன் அமைச்சர் பெரியகருப்பன்’ ஹரி நாடாரை அருகே வைத்துக்கொண்டது ஏன்..? – பரபரப்பு பின்னணி..!
‘சிறைக்கு சென்றவருடன் அமைச்சர் பெரியகருப்பன்’ ஹரி நாடாரை அருகே வைத்துக்கொண்டது ஏன்..?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?
Sivagangai Ajith Attack Video | அடித்தே கொன்ற POLICE! நடுங்க வைக்கும் பகீர் காட்சி வெளியான வீடியோ
Actor KPY Bala | “அண்ணன் நான் இருக்கேமா” வீடு கட்டிக்கொடுத்த KPY பாலா! Surprise கொடுத்த சிறுமி
”அஜித்குமார் LOCKUP DEATH!வாய் திறங்க ஸ்டாலின்” கொந்தளித்த VIJAY! Sivagangai Custodial Death

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi in Ghana: கானாவில் 21 குண்டுகள் முழங்க மோடிக்கு வரவேற்பு; ‘ஹரே கிருஷ்ணா‘ பாடல் பாடி வரவேற்ற இந்தியர்கள்
கானாவில் 21 குண்டுகள் முழங்க மோடிக்கு வரவேற்பு; ‘ஹரே கிருஷ்ணா‘ பாடல் பாடி வரவேற்ற இந்தியர்கள்
Shubman Gill: நான் தான் இருக்கேன்ல.. சதம் விளாசி மாஸ் காட்டிய கேப்டன் கில், இங்கிலாந்தில் பாரத் ஆர்மி சம்பவம்
Shubman Gill: நான் தான் இருக்கேன்ல.. சதம் விளாசி மாஸ் காட்டிய கேப்டன் கில், இங்கிலாந்தில் பாரத் ஆர்மி சம்பவம்
அஜித் வீட்டில் விஜய்.. ”நான் இருக்கேன் மா” கையை இருகிப்பிடித்து ஆறுதல் சொன்ன தவெக தலைவர்..
அஜித் வீட்டில் விஜய்.. ”நான் இருக்கேன் மா” கையை இருகிப்பிடித்து ஆறுதல் சொன்ன தவெக தலைவர்..
Hari Nadar : ‘சிறைக்கு சென்றவருடன் அமைச்சர் பெரியகருப்பன்’ ஹரி நாடாரை அருகே வைத்துக்கொண்டது ஏன்..? – பரபரப்பு பின்னணி..!
‘சிறைக்கு சென்றவருடன் அமைச்சர் பெரியகருப்பன்’ ஹரி நாடாரை அருகே வைத்துக்கொண்டது ஏன்..?
அன்றே மோசடி செய்த நிகிதா.. அதுவும் அவர் பேர்ல? அஜித்குமார் மரண வழக்கில் புதிய திருப்பம்
அன்றே மோசடி செய்த நிகிதா.. அதுவும் அவர் பேர்ல? அஜித்குமார் மரண வழக்கில் புதிய திருப்பம்
Police Attack New Video: தேனியில் மற்றொரு இளைஞரை போலீசார் தாக்கும் வீடியோ வைரல்; இன்னும் எத்தனை வருமோ.?
தேனியில் மற்றொரு இளைஞரை போலீசார் தாக்கும் வீடியோ வைரல்; இன்னும் எத்தனை வருமோ.?
Lockup Death: ஸ்டாலின் ஆட்சியில் 23 லாக்கப் மரணங்கள்! 21 வயது வாலிபர் முதல் 60 வயது முதியவர் வரை! பட்டியல் ரிலீஸ்
Lockup Death: ஸ்டாலின் ஆட்சியில் 23 லாக்கப் மரணங்கள்! 21 வயது வாலிபர் முதல் 60 வயது முதியவர் வரை! பட்டியல் ரிலீஸ்
தலைமைச் செயலகத்தில் இருந்து போன்; திருப்புவனம் லாக்கப் கொடூர கொலை- யார் அந்த அதிகாரி?
தலைமைச் செயலகத்தில் இருந்து போன்; திருப்புவனம் லாக்கப் கொடூர கொலை- யார் அந்த அதிகாரி?
Embed widget