தொடர் கனமழையால் திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 முக்கிய அணைகள் நிரம்பியது
’’திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய அணைகளாக சாத்தனூர், செம்பகத்தோப்பு, குப்பனத்தம், மிருகண்ட அணை உள்ளிட்ட 4 அணைகள் உள்ளது’’
திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்டோபர் நவம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவமழை கடந்த ஆண்டைவிட அதிக அளவில் மழை பெய்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் 2.861 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சராசரியாக 238 மில்லி மீட்டர் ஆக பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை எதிரொலியாக இந்தாண்டு தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழைபெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி அணையில் இருந்து தண்ணீர் தென்பண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதில் தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் காமராஜர் ஆட்சி காலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் பகுதியில் அணை கட்டப்பட்டது.
இந்த சாத்தனூர் அணையின் மூலம் விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்டங்களின் விவசாயிகளின் நீர் ஆதாரமாக விளங்கும் சாத்தனூர் அணை இந்தாண்டு ஷட்டர் மறு சீரமைப்பு காரணமாக 119 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 99 அடிஉயரத்திற்கு மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்க முடியும் என்பதால் தற்போது அணையின் நீர்மட்டம் 97.45 உயரம் உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 7321 மில்லியன் கன அடி தற்போதைய கொள்ளளவு 3392 மில்லியன் கன அடி ஆகும். அணைக்கு தற்போதைய நீர்வரத்து 1540 கன அடி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றுக்கு 1440 கன அடியும், பாசன கால்வாய் மூலமாக 100 கன அடி தண்ணீரும் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இந்த அணையின் மூலம் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகின்றது.
அதனை தொடர்ந்து ஜவ்வாது மலை அடிவாரத்தில் உள்ள செங்கம் குப்பநத்தம் அணை மொத்த உயரம் 59.04 தற்போதைய நீர்மட்டம் 57.07 ஆக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 700 மில்லியன் கனஅடி ஆகும் அணையின் தற்போதைய கொள்ளளவு 647.60 மில்லியன் கன அடி ஆகும். அணைக்கு நீர்வரத்து 300 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து செய்யாற்றில் 300 கன அடி நீர் வெளியேற்றப்ப்பட்டு வருகிறது. கலசப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள மற்றொரு அணை மிருகண்ட அணை அணையின் மொத்த உயரம் 22.97 அடி தற்போதைய நீர்மட்டம் 20.83 ஆக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 87.232 மில்லியன் கன அடியாகும். அணையின் தற்போதைய கொள்ளளவு 75.302 மில்லியன் கன அடியாகவும். அணைக்கு நீர்வரத்து 53 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படவில்லை.
அதனை தொடர்நது ஜவ்வாது மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மற்றொரு அணை செண்பக தோப்பு அணை அணையின் மொத்த உயரம் 62.32 அடியாக உள்ளது. தற்போதைய நீர்மட்டம் 54.32 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 287,00 மில்லியன் கன அடி அணையின் தற்போதைய கொள்ளளவு 208.337 மில்லியன் கன அடியாகும். அணைக்கு நீர்வரத்து 128 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து கமண்டல நாக நதிக்கு 37 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 4 முக்கிய அணைகள் மற்றும் நூற்றுக்கணக்கான ஏரிகள் நிரம்பி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்