திருச்சி: முசிறியில் மதுபான கடையில் போலி டின் பீர் விற்பனையா? மது பிரியர்கள் அதிர்ச்சி
தமிழகத்தில் போலி மதுபானத்தை அரசு மதுபான கடைகளில் விற்பனை , தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மது பிரியர்கள் கோரிக்கை.
![திருச்சி: முசிறியில் மதுபான கடையில் போலி டின் பீர் விற்பனையா? மது பிரியர்கள் அதிர்ச்சி Trichy: fake tins of beer being sold at a liquor store in Musiri? beer lovers are shocked by the double cover TNN திருச்சி: முசிறியில் மதுபான கடையில் போலி டின் பீர் விற்பனையா? மது பிரியர்கள் அதிர்ச்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/21/52cf6f88736d80c262e3c76037d54c4d1687344464803184_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையாததால் அரசு மதுபான கடைகளில் தற்பொழுது விற்பனைக்கு உள்ள டின் பீர் அதிகளவில் விற்பனையாகிறது. அதில் திருச்சி மாவட்டம் முசிறி நகரத்தில் இரண்டு அரசு மதுபான கடைகள் எதிரெதிரே உள்ளது. அதில் மதுபான கடை எண். 10 360- ல் இரட்டை கவர் கொண்ட டின் பீர் விற்கப்பட்டுள்ளது. இதை வாங்கிய பீர் பிரியர் ஒருவர் அதில் இரண்டு கவர்கள் ஒட்டப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் மேலே உள்ள கவரை லாபமாக பிரித்த பொழுது அதன் உள் கவரில் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் மட்டும் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆங்கிலத்தில் எழுதியுள்ளது. மேலும் அந்த பீர் 4- சதவீதம் ஆல்கஹால் உள்ளதாகவும் விலை குறைவாக மதிப்பிடப்பட்டு இருந்தது. மேல் கவரில் தமிழ்நாட்டில் மட்டுமே விற்பனை என்ற வெளி உரையும் 8- சதவீதம் ஆல்கஹால் உள்ளது என அச்சிடப்பட்டுள்ளது. இதை கண்ட பீர் பிரியர் அதிர்ச்சி அடைந்தனர்.
திருச்சி : முசிறியில் மதுபான கடையில் போலி டின் பீர் விற்பனையா? இரட்டைக் கவரால் மது பிரியர்கள் அதிர்ச்சி.@TnIpro @abpnadu #Trichydistrict pic.twitter.com/xseNnrzPfH
— Dheepan M R (@mrdheepan) June 21, 2023
இதனை தொடர்ந்து மதுக்கடையின் விற்பனையாளரிடம் கேட்ட பொழுது அவர் எங்களுக்கு இது தெரியாது? மாவட்ட மேலாளரை தான் கேட்க வேண்டும் என பதில் கூறியுள்ளார்?. இதனால் அதிர்ச்சி அடைந்த மது மற்றும் பீர் பிரியர்கள் இது காலாவதியாகி மீண்டும் புது உரை போட்டு வருகிறதா? அல்லது டூப்ளிகேட் டின் பீரா என மது மற்றும் பீர் பிரியர்கள் அச்சமும், அதிர்ச்சியினையும் அடைந்துள்ளனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)