மேலும் அறிய

பழிக்குப் பழி, நீண்ட நாள் பகை, திட்டம் தீட்டி கொலை செய்தோம் - திருச்சியில் கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம்

திருச்சியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பழிக்குப்பழி கொலை சம்பவம் - குற்றவாளிகள் பரபரப்பு வாக்குமூலத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் கேபிள் சேகர்.முன்னாள் அ.தி.மு.க. பகுதி செயலாளராகவும், இவரது மனைவி கயல்விழி சேகர். கவுன்சிலராக பதவி வகித்தார். இவர்கள் கேபிள் டி.வி. தொழில், பைனான்ஸ் மற்றும் பன்றி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது மகன் முத்துக்குமார் (32). இவர் பிபிஏ படித்துவிட்டு தொழிலை கவனித்து வந்தார். இதற்கிடையே பன்றி வளர்ப்பு தொழில் தொடர்பாக கேபிள் சேகர் குடும்பத்தினருக்கும் அவரது அண்ணன் பெரியசாமி குடும்பத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக பகை இருந்து வந்தது. இதில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கேபிள் சேகரை பெரியசாமியின் மகன் சிலம்பரசன் வெட்டி கொலை செய்தார். அதன் பின்னர் கடந்த 2021ல் பழிக்கு பழியாக சிலம்பரசனை, கேபிள் சேகரின் மகன் முத்துக்குமார் தரப்பினர் வெட்டி கொலை செய்ததாக கூறப்பட்டது. இந்த முன் விரோதத்தில் சிலம்பரசனின் தம்பி லோகநாதன், முத்துக்குமாரை தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டி வந்தார்.

இந்த நிலையில் 6 பேர் கொண்ட கும்பல் முத்துக்குமாரை வழிமறித்து ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் முகம் சிதைந்து ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் கொலையாளிகள் இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பழிக்குப் பழி, நீண்ட நாள் பகை, திட்டம் தீட்டி கொலை செய்தோம் -  திருச்சியில் கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம்

திருச்சியை அதிர வைத்த கொலை வழக்கில் 5 பேர் கைது

மேலும் இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் லோகநாதன் தனது கூட்டாளிகள் 5 பேருடன் சேர்ந்து முத்துக்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் தப்பி ஓடிய முக்கிய குற்றவாளியான லோகநாதனை நள்ளிரவு கைது செய்தனர். அதன் பின்னர் அவரது கூட்டாளிகள் அரியமங்கலம் அம்பிகா புரத்தைச் சேர்ந்த குமரேசன் (24), இளஞ்செழியன் ( 24), தினேஷ் என்கிற கூல் தினேஷ் ( 24), பொன்மலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கமணி என்கிற டேஞ்சர் மணி (37) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தப்பிச்சென்ற ஒருவரை தேடி வருகின்றனர்.

கைதான லோகநாதன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எனது தந்தை பெரியசாமி அதிக அளவு பன்றி வளர்த்து அதன் மூலம் அதிக வருமானம் ஈட்டி வந்தார். பின்னர் உடல் நலக்குறைவு காரணமாக அவர் திடீரென இறந்து விட்டார். அதன் பின்னர் தொழில் முழுவதும் எனது சித்தப்பா கேபிள் சேகர் கைக்கு சென்றது. அவர் அந்த வருமானத்தை தனது மனைவி குழந்தைகளுக்கு செலவழித்து வசதியாக வாழ வைத்தார். நான் மட்டும் இல்லாமல் எனது சகோதரர்கள் தங்கமணி, சிலம்பரசன், ஆகியோர் உள்ளூர் மாநகராட்சி பள்ளிகளில் படித்தனர். ஆனால் சித்தப்பாவின் மகன் மகள்கள் ஊட்டி தனியார் பள்ளியில் விடுதியில் தங்கிப் படித்தனர்.

பழிக்குப் பழி, நீண்ட நாள் பகை, திட்டம் தீட்டி கொலை செய்தோம் -  திருச்சியில் கொலையாளிகள் பரபரப்பு வாக்குமூலம்

நீண்ட நாள் பகை, தீர்த்து கட்டினோம் பரபரப்பு வாக்குமூலம்

மேலும், இந்த ஏற்றத்தாழ்வு மிகுந்த மன வருத்தத்தை அளித்தது. பின்னர் எங்கள் அண்ணன் சிலம்பரசன் வளர்ந்து ஆளாகிய பின்னர் சொத்தை பிரித்து தருமாறு கேட்டோம். அதற்கு கேபிள் சேகர் ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் அவரை கொலை செய்தோம்.இந்த முன் விரோதத்தில் எனது அண்ணன் சிலம்பரசனை முத்துக்குமார் கொலை செய்தார். பின்னர் முத்துக்குமாரை தீர்த்து கட்ட தக்க தருணம் பார்த்து வந்தோம். திட்டமிட்டபடி நேற்று நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து அவரை தீர்த்து கட்டினோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். திருச்சி அரியமங்கலத்தில் முன்னாள் கவுன்சிலர் மகன் முத்துக்குமார் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் காட்சியானது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதேபோல் இச்சம்பவத்தில் முதல் குற்றவாளியான லோக என்கின்ற லோகநாதன் போலீசாரிடமிருந்து தப்பிக்க முயற்சித்த போது அருகில் உள்ள வாய்க்கால் பாலத்தில் விழுந்ததால் கணுக்காலில் முடிவு ஏற்பட்டுள்ளது.  அருகில் உள்ள வாய்க்கால் பாலத்தில் விழுந்ததால் கணுக்காலில் முடிவு ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள நான்கு குற்றவாளிகளை போலீசார் நீதிபதி முன்பு ஆஜர்படுத்து சிறையில் அடைத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
Nirangal Moondru Twitter Review : படத்துக்கு நம்பி போகலாமா ? அதர்வாவின்  நிறங்கள் மூன்று சோசியல் மீடியா விமர்சனம்
Nirangal Moondru Twitter Review : படத்துக்கு நம்பி போகலாமா ? அதர்வாவின் நிறங்கள் மூன்று சோசியல் மீடியா விமர்சனம்
IND vs AUS 1st Test: : ”முடிச்சு விட்டீங்க போங்க” 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா
IND vs AUS 1st Test: : ”முடிச்சு விட்டீங்க போங்க” 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா
JEE Main 2025: இன்றே கடைசி; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
JEE Main 2025: இன்றே கடைசி; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்Seeman meets Rajini : ரஜினி வீட்டுக்கே போன சீமான் 1 மணி நேரம் பேசியது என்ன?விஜய்க்கு வைக்கும் செக்!DMK MP Meeting : அதானி To வக்பு வாரியம் நெருங்கும் குளிர்கால கூட்டத்தொடர் SCENE-க்கு வந்த ஸ்டாலின்”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORT

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
Nirangal Moondru Twitter Review : படத்துக்கு நம்பி போகலாமா ? அதர்வாவின்  நிறங்கள் மூன்று சோசியல் மீடியா விமர்சனம்
Nirangal Moondru Twitter Review : படத்துக்கு நம்பி போகலாமா ? அதர்வாவின் நிறங்கள் மூன்று சோசியல் மீடியா விமர்சனம்
IND vs AUS 1st Test: : ”முடிச்சு விட்டீங்க போங்க” 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா
IND vs AUS 1st Test: : ”முடிச்சு விட்டீங்க போங்க” 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா
JEE Main 2025: இன்றே கடைசி; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
JEE Main 2025: இன்றே கடைசி; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்?  டாப் 10 செய்திகள்
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்? டாப் 10 செய்திகள்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
Embed widget