முதல்வர் வருகையால் திருச்சி- திண்டுக்கல் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்
நாளை நண்பகல் 12.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை திண்டுக்கலில் இருந்து திருச்சி வரும் கனரக வாகனங்கள் மற்றும் திருச்சியில் இருந்து திண்டுக்கல் செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம்
திருச்சி மாவட்டம் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ராம்ஜிநகர் அருகில் உள்ள கேர் கல்லூரியில் நாளை நடைபெறவுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்குகிறார்கள். இவ்விழாவில் பங்கேற்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பயனாளிகள் மற்றும் கட்சியினர் பல்வேறு வாகனங்களில் அதிக அளவில் வருகை தர இருப்பதால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழா நடைபெறும் நாளை மதியம் 12.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, திண்டுக்கல்லிருந்து திருச்சி வரும் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் திருச்சியிலிருந்து திண்டுக்கல் செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து வழித்தடங்களை மாற்றி இயக்குவதற்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
திருச்சியில் இருந்து திண்டுக்கல் செல்லும் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் மற்றும் புறநகர் பேருந்துக்கள் அனைத்தும் அரிஸ்டோ ரவுண்டானா வழியாக மன்னார்புரம் சென்று சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக விராலிமலை, மணப்பாறை வழியாக திண்டுக்கல் சென்றடைய வேண்டும். திண்டுக்கல் இருந்து திருச்சி வரும் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் மற்றும் புறநகர் பேருந்துக்கள் அனைத்தும் மணப்பாறை, விராலிமலை வழியாக மதுரை- சென்னை தேசிய நெடுஞ்சாலை வந்து மன்னார்புரம், TVS டோல்கேட், தலைமை தபால் அலுவலகம் வழியாக மத்திய பேருந்து நிலையம் சென்றடைய வேண்டும் திண்டுக்கல் மார்க்கத்தில் இருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் மட்டும் மணப்பாறை, குளித்தலை சென்று கரூர் - திருச்சி பிரதான சாலை வந்து ஜீயபுரம் வழியாக திருச்சி வந்து சென்னை செல்ல வேண்டும்.
யார் எதிர்த்தாலும் திருவண்ணாமலைக்கு சிப்காட் வந்தே தீரும் - எ.வ.வேலு சபதம்
திண்டுக்கல் மார்க்கத்தில் இருந்து திருச்சி வழியாக தஞ்சாவூர் செல்லும் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் மட்டும் மணப்பாறை, விராலிமலை, பஞ்சப்பூர், புதுக்கோட்டை சுற்று வட்ட சாலை வழியாக துவாக்குடி அடைந்து தஞ்சாவூர் செல்ல வேண்டும் மாநகர காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் திருச்சி மாநகர் முழுவதும் 5 ஆயிரம் காவல்துறையினர் பாதுக்காப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். முதல்வர் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சியில் எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க விழா நடைபெறும் கேர் கல்லூரி மைதானத்தை சுற்றியும் காவல்துறையினர் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டு உள்ளனர் என்றார். மேலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறினால கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் கார்த்திக்கேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாளை தஞ்சைக்கு வரும் முதல்வர் - வலுப்பெறும் கும்பகோணம் தனிமாவட்ட கோரிக்கை