மேலும் அறிய

மணிப்பூர் கலவரம்: திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்!

மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்முறை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மணிப்பூரில் பழங்குடியின் பெண்கள் மீது நடைபெற்ற கொடுஞ்செயலை கண்டித்து, தமிழ்நா தவ்ஹீத் திருச்சி மாவட்டம் சார்பாக பாலக்கரை ரவுண்டானாவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் குலாம் தஸ்தஹீர் தலைமை தாங்கினார். இதனை தொடர்ந்து கண்டன உரையாற்றிய மாநில செயலாளர் செங்கோட்டை பைசல் பேசியது.. மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கு மேலாக மிகப்பெரிய கலவரங்கள் நடந்து வருகிறது. 

அதில் பல உயிர்கள் பறிக்கப்பட்டும், பல்வேறு மக்கள் தங்களுடைய வாழ்விடங்களை இழந்திருக்கிறார்கள். மேலும்  பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நேரத்தில் தான் இந்தியர்களுககுத் தலைதனிவை ஏற்படுத்தக்கூடிய ஒருசம்பவம் நடைபெற்று சமூக வலைத்தளங்களில் காட்சிகளாகப் பரப்பப்பட்டு வருகிறது. மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி விதியில், ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரமான வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்பொது பரவி வருகிறது. கடந்த மே மாதம் 4 ம்தேதி மணிப்பூரில் நிகழ்ந்த இந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இதனை தொடர்ந்து இந்த வீடியோவை பார்க்கும் போது காட்டுமிராண்டிகள் வாழும் தேசத்தில் நாம் வாழ்கிறோமா என்று அளவிற்கு அந்த பெண்களை சித்திரவதை செய்து நிர்வாணமாக அழைத்து செல்கிறார்.

மணிப்பூர் கலவரம்:  திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்!

மேலும், கலவரங்கள் மூலம் அச்சத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வாக்குகளை பெறும் பாசிச அரசியலை பாஜக அரசு முன்னெடுத்துள்ளது. மிகபெரிம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவத்தை போன்று எத்தனை சம்பவங்கள் நடந்தது என்று தெரியவில்லை, அனைத்தையும் மூடி மறைக்கும் வேலையை மத்திய அரசு செய்து வருகிறது. மேலும் மத்திய அரசு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க தவறினால், இதை நாங்கள் கையில் எடுப்பொம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட் தெரிவித்துள்ளார். ம்ணிப்பூரில் பெண்களுக்கு நடந்தது மன்னிக்கமுடியாத மிகப்பெரிய குற்றம். இன்னும் அங்கு இணைய சேவை முடக்கத்தால் வெளியுலகத்திற்கு வராத சம்பங்கள் நிறைய இருக்கலாம், அவைகளும் வெளிவந்தால் பெரும் அதிரிச்சியை ஏற்படுத்து என்றார்.

மணிப்பூர் கலவரம்:  திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்!

இந்த கலவரம் ஆரம்பித்த உடனேயே தடுத்து இருந்தால். இது போன்ற சம்பவாங்கள் ஏற்பட்டிருக்காது. இந்தியர்களுக்கு மிகப்பெரிய அவமானம் ஏற்பட்டதற்கு பின்னால் தான் மாநில பாஜக அரசு பேச ஆரம்பித்திருக்கிறார்கள், இதுவும் கண்டனத்திற்குரியது என தெரிவித்தார். மேலும் காட்டுமிராண்டிகள் வாழும் தேசம் இந்தியா என்று உலக அரங்கில் இந்தியாகளைத் தலை குனியச் செய்த இவர்களை கடுமையான முறையில் தண்டிக்க வேண்டும்.  இனியும் தாமதிக்காமல் மணிப்பூர் கலவரம் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என தெரிவித்தார், இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணல்லானோர் பங்கேற்று தங்களது கண்டன குரல்களை வெளிப்படுத்தினார். இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜகீர். பொருளாளர் மால் பாஷர், துணைத்தலைவர் காஜா, துணைச் செயலாளர்கள் உமர், பிலால், ரசூல், கனி ஆகியோர் கலந்துக்கொண்டனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget