மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

கடந்த 10 மாதம் கொள்ளையடித்த பணத்தை துபாயில் முதலீடு செய்துள்ளனர் - எடப்பாடி பழனிச்சாமி

தமிழக முதல்வர் ஸ்டாலின் டீ, குடிப்பதை, பளு தூக்குவதை பத்திரிகை செய்திகளில் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அடுத்த உலக பளு தூக்கும் போட்டிக்கு ஸ்டாலினை அனுப்பிவிடலாம் - எடப்பாடி பழனிச்சாமி

தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றும் வகையில் சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்திய திமுக அரசை கண்டித்து திருச்சி ரயில்வே ஜங்ஷன் முன்பாக தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி  கே.பழனிசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இதில்  திருச்சி மாநகர மற்றும் மாவட்ட அதிமுக சார்பில் ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து கண்டன உரையை நிகழ்த்திய எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, “முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசு தான் வீட்டு வரியை உயர்த்த சொல்லி உள்ளது என்கிறார், ஆனால்  அப்படி எங்கும் மத்திய அரசு குறிப்பிடவில்லை. மத்திய அரசின் மீது வீன் பழியை போட்டு ஏமாற்ற பார்க்கின்றனர். இந்தியாவிலேயே தேர்தல் அறிக்கையை புத்தகம் போட்டு வெளியிட்ட கட்சி திமுகதான், அதிலும் குறிப்பாக திமுக தேர்தல் அறிக்கையில்  487வது அறிவிப்பில் சொத்து வரி உயர்த்தப்படாது என்று சொல்லிவிட்டு தற்போது ஏன் உயர்த்தபட்டது என கேள்வி எழுப்பினார்.

மேலும்  அதிமுக ஆட்சியில் தொலை நோக்கு திட்டம்,  தாலிக்கு தங்கம் என்கிற அற்புதமான திட்டம் பல லட்சம் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இதனால் பலன் அடைந்தார்கள் - திருமண உதவி திட்டம் எண்ணற்ற பலன்களை மக்களுக்கு கொடுத்தது. 

கடந்த 10 மாதம் கொள்ளையடித்த பணத்தை துபாயில் முதலீடு செய்துள்ளனர் - எடப்பாடி பழனிச்சாமி

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் மக்கள் இரண்டு ஆண்டுகளாக கொரோனோவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.  இந்த நேரத்தில் இந்த விடியா அரசு 150% சொத்து வரியை உயர்த்தி உள்ளது. மக்கள் மிகவும் சிரமப்பட்டு கொண்டு இருக்கும் இந்த காலகட்டத்தில் இப்படி வரியை உயர்த்தியது கண்டனத்துக்கு உரியது என்றார். திமுக ஸ்டாலினுக்கு மக்களை பற்றி கவலை அல்லாமல், அவரது வீட்டு மக்களை பற்றி தான் கவலை பட்டுக்கொண்டு உள்ளார்.

வேலை இல்லாமல், வாழ்வாதாரமே இல்லாத நிலையில் மக்கள் உள்ள நிலையில்  இந்த வரியை உயர்த்தி உள்ளது. குறிப்பாக இந்தியாவிலேயே அதிகமாக உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் உள்ள மாநிலம் தமிழகம் என்று நல்ல பெயரை அதிமுக ஆட்சியில் பெற்று தந்தோம் . மேலும் 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினோம், ஏழை மாணவர்களுக்கு பலன் அளிக்கும் இத்திட்டத்தை ரத்து செய்ய முயற்சி செய்கிறீர்கள் என குற்றம் சாட்டினார். தமிழகத்தில் கட்டுமான பொருட்களில் ஊழல் நடக்கிறது ஒரு சிமெண்ட் மூட்டைக்கு 30 ரூபாய் திமுகவிற்கு செல்கிறது,  அப்படி என்றால் எவ்வளவு கோடி செல்லும் என மக்கள்  எண்ணிப்பார்க்க வேண்டும்.  விளம்பரத்தில்தான் திமுக இயங்கி வருகிறது,  இல்லை என்றால் கானாமால் போய் இருப்பார்கள்.

10 மாதத்தில் நீங்கள் என்ன திட்டத்தை கொண்டு வந்தீர்கள்,  நான் கொண்டு வந்த திட்டத்திற்கு எல்லாம் ரிப்பன் கட் பண்ணிக்கொண்டு வருகிறீர்கள். நாம் பெற்ற பிள்ளைக்கு இவர்கள் பெயர் வைத்து வருகிறார்கள்.  10 மாதத்தில் ஸ்டாலின் கொண்டு வந்த திட்டம் என்ன என கேள்வி எழுப்பினார்.

கடந்த 10 மாதம் கொள்ளையடித்த பணத்தை துபாயில் முதலீடு செய்துள்ளனர் - எடப்பாடி பழனிச்சாமி

இதனை தொடர்ந்து ஸ்டாலின் இன்ப சுற்றுலா சென்று வந்தார். மேலும்,  கடந்த 10 மாதமாக கொள்ளை அடித்த பணத்தை வைத்து துபாயில் முதலீடு செய்ய தான் ஸ்டாலின் சென்றார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டபேரவை தேர்தல் வந்தாலும் வரலாம். பிரதமரே கூறி உள்ளார் - ஒரே நாடு ஒரே தேர்தல் என்று, அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. எனவே கிடைத்த வாய்பை பயன்படுத்தி மக்களுக்கு நல்லது செய்ய பாருங்கள். மக்கள் இப்படியே கடந்து சென்று விடுவார்கள் என்று எண்ணிவிடாதீர்கள் - மிக பெரிய போராட்டத்தை மக்கள் நடத்த போகிறார்கள்,  இதனை எச்சரிக்கையாக கூறி கொள்ள விரும்புகிறேன். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பாலியல் பலாத்காரம் அதிகரித்து வருகிறது - சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது,காவல் துறை செயல் இழந்து விட்டது.

பெண்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை - இதனை எல்லாம் செய்யவில்லை என்றால் எதிர்காலமே திமுகவிற்கு இருக்காது. திராவிட மாடல் இதுதானா ? அம்மா மினி கிளினிக் இப்போது மூடி விட்டார்கள் - அம்மா என்கிற பெயரை கேட்டாலே ஸ்டாலினுக்கு அலர்ஜி ஆகி விடுகிறது. மின் வெட்டு இப்போது தான் ஆரம்பித்து உள்ளது - இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்த துன்பமும் இல்லை என்கிறார் முதல்வர்” என்றார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
IPL Auction 2025 LIVE:  ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர் விஜய் சங்கரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை அணி 
IPL Auction 2025 LIVE: ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர் விஜய் சங்கரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை அணி 
NTK Issue: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய மற்றொரு மாவட்ட செயலாளர் - யார் தெரியுமா?
NTK Issue: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய மற்றொரு மாவட்ட செயலாளர் - யார் தெரியுமா?
Karthigai Deepam: சிவ பக்தர்களே! திருவண்ணாமலையில் தீபம் பார்க்க டிக்கெட் விற்பனை எப்போது? வாங்குவது எப்படி?
Karthigai Deepam: சிவ பக்தர்களே! திருவண்ணாமலையில் தீபம் பார்க்க டிக்கெட் விற்பனை எப்போது? வாங்குவது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL RahulAR Rahman Saira Divorce Reason : வலியும் வேதனையும் அதிகம்  பிரிந்த AR ரஹ்மான்  சாய்ரா பானுIPL Auction 2025 :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
TN Rain: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
IPL Auction 2025 LIVE:  ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர் விஜய் சங்கரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை அணி 
IPL Auction 2025 LIVE: ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர் விஜய் சங்கரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை அணி 
NTK Issue: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய மற்றொரு மாவட்ட செயலாளர் - யார் தெரியுமா?
NTK Issue: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய மற்றொரு மாவட்ட செயலாளர் - யார் தெரியுமா?
Karthigai Deepam: சிவ பக்தர்களே! திருவண்ணாமலையில் தீபம் பார்க்க டிக்கெட் விற்பனை எப்போது? வாங்குவது எப்படி?
Karthigai Deepam: சிவ பக்தர்களே! திருவண்ணாமலையில் தீபம் பார்க்க டிக்கெட் விற்பனை எப்போது? வாங்குவது எப்படி?
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10  வீரர்கள் பட்டியல் இதோ!
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்கள் பட்டியல் இதோ!
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. தட்டித்தூக்கிய LSG!
Embed widget