மூன்றாம் பாலினத்தவருக்கு தனியாக சுய உதவி குழு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மகளிர் சுய உதவி குழுக்களில் உருவாகும் பொருட்களை இ - காமர்ஸ் முறையில் சந்தைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக 1989 ஆம் ஆண்டு சுய உதவி குழுக்களை கலைஞர் உருவாக்கினார். அதை துணை முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் விரிவுப்படுத்தினார். தற்போது உதயநிதி ஸ்டாலின் மேலும் அதை விரிவுப்படுத்துவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது" என்றார். இதனை தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "பொருளாதார சுதந்திரமே பெண்களுக்கு உண்மையான சுதந்திரம் என பெரியார் கூறி உள்ளார். அதனடிப்படையில் பெண்கள் முன்னேற்றத்திற்கு மகளிர் சுய உதவி குழுக்களை கலைஞர் 1989 ஆம் ஆண்டு தொடங்கினார். அன்று தர்மபுரியில் தொடங்கப்பட்ட இந்த சுய உதவி குழு இன்று தமிழ்நாடு முழுவதும் 7,22,000 மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்படுகிறது. மகளிர் சுய உதவி குழுக்கள் அமைதியாக தொழில்புரட்சியை செய்து வருகிறது. நான் யாருக்கு பரிசு அளிப்பதாக இருந்தாலும் மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரித்த பொருட்களை தான் வழங்குவேன். எனக்கு பரிசுகள் வழங்குபவர்களிடமும் அந்த பொருட்களை வழங்க வேண்டும் என் வேண்டுகோளை வைத்துள்ளேன். பெரிய நிறுவனங்கள் உருவாக்கும் பொருட்களின் மீது இருக்கும் நம்பிக்கையை விட மகளிர் சுய உதவி குழுக்கள் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர்.
திராவிட மாடல் அரசு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு எப்பொழுதும் துணை இருக்கும். மகளிர் சுய உதவி குழுக்கள் தற்போது கடன் உதவி பெரும் நிலையிலிருந்து பொருளாதாரத்தை உருவாக்குபவர்கள் என்கிற நிலையை அடைந்துள்ளது. மகளிர் சுய உதவி குழுக்களில் உருவாக்கும் பொருட்களை இ - காமர்ஸ் முறையில் சந்தைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மூன்றாம் பாலினத்தவருக்கு தனி சுய உதவி குழுக்கள் தொடங்க வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கோரிக்கை வைத்துள்ளார் அது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து நல்ல முடிவு விரைவில் எடுக்கப்படும்" என்றார். நிகழ்ச்சிக்கு முன்னதாக உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்த பொருட்களின் கண்காட்சியை தொடக்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் செந்தில் குமார், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் முதன்மை செயல் அலுவலர் திவ்யதர்ஷினி, வாழ்ந்து காட்டுவோம் திட்ட முதன்மை செயலாக்க அலுவலர் பத்மஜா, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மேயர் அன்பழகன் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்தவர்கள்,பல்வேறு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.