மேலும் அறிய

திருச்சியில் கடந்த ஆண்டை விட அதிகரித்த சாலை விபத்து: வெளியான திடுக் தகவல்

விபத்துக்கள், ஓட்டுநரின் சொந்த தவறால் ஏற்படுகின்றன. மற்ற வாகனங்கள் அல்லது நபர்கள் இதில் சம்பந்தப்படுவதில்லை. ஆகஸ்ட் மாதத்தில் நடந்த சாலை விபத்து மரணங்களில் சுமார் 40 சதவீதம் இந்த தனிநபர் விபத்துக்களே.

தஞ்சாவூர்: திருச்சி மாவட்டத்தில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்ற பகீர தகவல் வெளியாகி உள்ளது. 

திருச்சியில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த சாலை விபத்துக்களில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட கூடுதல் என்று அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த ஆகஸ்ட் 2025-ல் திருச்சி நகரில் சாலை விபத்துக்களில் உயிரிழந்தவர்களில், மற்ற வாகனங்கள் சம்பந்தப்படாத தனிநபர் விபத்துக்கள் தான் முதலிடத்தில் உள்ளன.

இந்த விபத்துக்கள், ஓட்டுநரின் சொந்த தவறால் ஏற்படுகின்றன. மற்ற வாகனங்கள் அல்லது நபர்கள் இதில் சம்பந்தப்படுவதில்லை. ஆகஸ்ட் மாதத்தில் நடந்த சாலை விபத்து மரணங்களில் சுமார் 40 சதவீதம் இந்த தனிநபர் விபத்துக்களே. இதில் பெரும்பாலானவை இருசக்கர வாகன ஓட்டுனர்களையே பாதித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து திருச்சி மாநகர காவல் துறை தெரிவித்த தகவல்படி, ஆகஸ்ட் 2025-ல் சாலை விபத்துக்களில் 13 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு இதே மாதத்தில் 19 பேர் உயிரிழந்தனர். ஆனால், உயிரிழப்பு இல்லாத விபத்துக்கள் உட்பட மொத்த விபத்துக்களின் எண்ணிக்கை 48-ல் இருந்து 55 ஆக அதிகரித்துள்ளது. காவல் துறை தரவுகளின்படி, 13 உயிரிழப்புகளில் ஐந்து விபத்துக்கள் 'தனிநபர் விபத்துக்கள்' என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியுள்ளனர். அதிவேகமே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. நான்கு விபத்துக்கள் இருசக்கர வாகனங்களில் நடந்துள்ளன. கருமண்டபத்தில் ஒரு ஆட்டோ பாதுகாப்பு தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

பெரும்பாலான தனிநபர் விபத்துக்கள் நன்கு பராமரிக்கப்பட்ட சாலைகளிலேயே நடந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சாலைகள் அதிவேகமாக செல்ல ஓட்டுநர்களை ஊக்குவிக்கின்றன. பகல் நேரத்தில் இதுபோன்ற ஒரு விபத்து கூட நடக்கவில்லை. பாரதிதாசன் சாலை, திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை போன்ற முக்கிய சாலைகளில் தனிநபர் விபத்துக்கள் பதிவாகியுள்ளன. திருவளர்ச்சோலை மற்றும் கல்கண்டார்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள உட்புற சாலைகளில் மேலும் இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

ஒரு சம்பவத்தில், 73 வயது முதியவர் ஒருவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ மீது மோதி உயிரிழந்தார். இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்கும் சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். சாலைகள் காலியாக இருப்பதால், ஓட்டுநர்கள் அதிகாலை நேரங்களில் வேகமாக ஓட்டுகிறார்கள். சில விபத்துக்களுக்கு தெரு நாய்களும் காரணமாக இருக்கலாம் என்று சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

Trichy power cut: திருச்சியில் நாளை (23-7-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
திருச்சியில் நாளை (23-7-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
Trichy power cut: நாளை (22-07-2026) திருச்சியில் மின்தடை! காலை முதல் மாலை வரை எந்தெந்த பகுதிகளில் கரண்ட் இருக்காது?
நாளை (22-07-2026) திருச்சியில் மின்தடை! காலை முதல் மாலை வரை எந்தெந்த பகுதிகளில் கரண்ட் இருக்காது?
Trichy power cut (18-07-2026): நாளை திருச்சியில் மின்தடை! உங்க ஏரியாவில் கரண்ட் இருக்குமா? உடனே செக் பண்ணுங்க
நாளை திருச்சியில் மின்தடை! உங்க ஏரியாவில் கரண்ட் இருக்குமா? உடனே செக் பண்ணுங்க
Trichy power cut: திருச்சியில் மின்தடை அறிவிப்பு: நாளை (14-07-2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
திருச்சியில் மின்தடை அறிவிப்பு: நாளை (14-07-2026) எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
“இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
Best SUVs for Young Buyers: ஜென் Z-க்கு ஏத்த ஸ்டைலான, கெத்தான SUV கார்கள் எவை.? இந்த லிஸ்ட்ட பார்த்து தேர்ந்தெடுத்துக்கோங்க
ஜென் Z-க்கு ஏத்த ஸ்டைலான, கெத்தான SUV கார்கள் எவை.? இந்த லிஸ்ட்ட பார்த்து தேர்ந்தெடுத்துக்கோங்க
Trump Tariff Vs India: திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
Cheapest EV Car Blinq RYDE: வெறும் ரூ.4.5 லட்சம்; 250 கி.மீ ரேஞ்ச்; டாடா டியாகோ EV-க்கு தலைவலியாக வரும் பிளிங்க் ரைடு EV கார்
வெறும் ரூ.4.5 லட்சம்; 250 கி.மீ ரேஞ்ச்; டாடா டியாகோ EV-க்கு தலைவலியாக வரும் பிளிங்க் ரைடு EV கார்
Embed widget