மேலும் அறிய

Election 2024 Results

UTTAR PRADESH (80)
43
INDIA
36
NDA
01
OTH
MAHARASHTRA (48)
30
INDIA
17
NDA
01
OTH
WEST BENGAL (42)
29
TMC
12
BJP
01
INC
BIHAR (40)
30
NDA
09
INDIA
01
OTH
TAMIL NADU (39)
39
DMK+
00
AIADMK+
00
BJP+
00
NTK
KARNATAKA (28)
19
NDA
09
INC
00
OTH
MADHYA PRADESH (29)
29
BJP
00
INDIA
00
OTH
RAJASTHAN (25)
14
BJP
11
INDIA
00
OTH
DELHI (07)
07
NDA
00
INDIA
00
OTH
HARYANA (10)
05
INDIA
05
BJP
00
OTH
GUJARAT (26)
25
BJP
01
INDIA
00
OTH
(Source: ECI / CVoter)

PM Modi: மத்திய அரசு முன்பைக் காட்டிலும் 3 மடங்கு அதிக நிதியை தமிழ்நாட்டிற்கு செலவு செய்திருக்கிறது - பிரதமர் மோடி

தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான ஏழை குடும்பங்களுக்கு மத்திய அரசின் இலவச ரேஷன் பொருட்கள் கிடைத்து வருகின்றன - பிரதமர் மோடி பேச்சு

திருச்சியில் புதிய சர்வதேச விமான நிலையத்தில் பல்வேறு திட்டங்களை தொடக்கி வைத்த பிறகு விழா மேடையில் பிரதமர் மோடி பேசியதாவது: முதற்கண் உங்கள் அனைவருக்கும் 2024ம் ஆண்டின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்தாண்டு அனைவருக்கும் அமைதியானதாகவும் வளமானதாகவும் இருக்கட்டும். இந்த ஆண்டுக்கான என்னுடைய முதலாவது பொது நிகழ்ச்சி தமிழ்நாட்டில் நடக்கிறது என்பதை நான் என் பாக்கியமாகக் கருதுகிறேன். சுமார் இருபதாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த வளர்ச்சி திட்டங்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சியை பலப்படுத்தும். சாலை வழிகள், ரயில் பாதைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், எரிசக்தி, ஆற்றல் மற்றும் ஒரு பெட்ரோலிய குழாய் இணைப்பு ஆகிய இந்த திட்டங்களுக்காக நான் உங்களுக்கு என் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன். இதில் பல திட்டங்கள் பயணிப்பதில் சுலபத்தன்மை, அதை ஊக்கப்படுத்துவதோடு ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும்.


PM Modi: மத்திய அரசு முன்பைக் காட்டிலும் 3 மடங்கு அதிக நிதியை தமிழ்நாட்டிற்கு செலவு செய்திருக்கிறது - பிரதமர் மோடி

தமிழ்நாட்டில் பலருக்கு 2023ம் ஆண்டின் கடந்த சில வாரங்கள் மிகவும் கடினமானவையாக இருந்தன. கனமழை காரணமாக நமது பல சக குடிமக்களை நாம் இழக்க வேண்டியிருந்தது. சொத்துக்கள், உடமைகள் இழப்பும் கணிசமானவையாக இருந்தன. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலை எனக்குள்ளே மிகவும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நெருக்கடியான வேலையில் மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு துணையாக நிற்கின்றது. சாத்தியமான அனைத்து ஆதரவையும் மாநில அரசாங்கத்திற்கு நாங்கள் அளித்து வருகின்றோம். சில நாட்கள் முன்பாக நாம் விஜயகாந்த்தை இழந்திருக்கின்றோம். அவர் சினிமாவுலகின் கேப்டன் மட்டுமல்ல. அரசியலிலும் அவர் கேப்டனாக இருந்து வந்திருக்கிறார்.

திரைப்படங்களில் அவருடைய செயல்பாடு காரணமாக, அதன் வாயிலாக அவர் மக்களின் இதயங்களை கொள்ளை கொண்டு இருக்கிறார். ஒரு அரசியல்வாதி என்ற முறையிலேயே அவர் அனைத்திற்கும் மேலாக தேசிய நலனுக்கு முன்னுரிமை அளித்து வந்திருக்கிறார். அவருக்கு நான் என்னுடைய அஞ்சலிகளை காணிக்கையாக்குகிறேன். அவருடைய குடும்பத்துக்கும், அபிமானிகளுக்கும் நான் என் ஆழமான இரங்கலை உரித்தாக்குகிறேன். இன்று நான் இங்கு தமிழ்நாட்டில் இருக்கும் வேளையில் தமிழ் மண்ணின் மைந்தன் முனைவர் எம்.எஸ்.சுவாமிநாதனையும் நினைவு கூர்கிறேன். நமது நாட்டின் உணவு பாதுகாப்பிற்காக முக்கிய பங்களிப்பை அளித்தார். கடந்தாண்டில் அவரையும் நாம் இழந்துள்ளோம்.


PM Modi: மத்திய அரசு முன்பைக் காட்டிலும் 3 மடங்கு அதிக நிதியை தமிழ்நாட்டிற்கு செலவு செய்திருக்கிறது - பிரதமர் மோடி

சுதந்திரத்தின் அமுத காலம். அதாவது வர விருக்கும் இருபத்தைந்து ஆண்டு கால கட்டத்தில் பாரதத்தை வளர்ந்த தேசமாக நாம் ஆக்க வேண்டும். வளர்ச்சி அடைந்த பாரதம் என்று கூறும்போது, இதில் பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் என்ற இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. பாரத நாட்டின் வளம் மற்றும் கலாச்சார மரபின் பிரதிபலிப்பு தான் தமிழ்நாடு. தமிழ்நாட்டின் வசம் தமிழ்மொழி மற்றும் ஞானம் என்ற பழமையான கருவூலம் இருக்கிறது. புனிதர் திருவள்ளுவர் தொடங்கி சுப்பிரமணிய பாரதி வரை பலர் அற்புதமான இலக்கியங்களை படைத்துள்ளனர். சி.வி. ராமன் தொடங்கி இன்று வரை அற்புதமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு சொந்தக்காரர்கள் பலரை இந்த மண் உருவாக்கி அளித்துள்ளது. நான் எப்போதெல்லாம் தமிழ்நாட்டிற்கு வருகிறோனோ அப்போதெல்லாம் ஒரு புதிய சக்தியை நிரப்பிக் கொண்டு செல்கிறேன். 

திருச்சிராப்பள்ளி நகரம் என்று சொன்னாலே வளமான வரலாற்றுக்கான சான்றுகள் அங்கிங்கெனாதபடி எல்லா இட ங்களிலும் கொட்டி கிடக்கின்றது. இங்கு பல்லவர்கள் சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள் போன்ற பல்வேறு அரச வம்சங்களின் நல்லாட்சி மாதிரிகள் கண்கூடாக காண கிடைக்கின்றன. எனக்கு ஏராளமான தமிழ் நண்பர்கள் உண்டு. அவர்களிடத்திலே எனக்கு மிக நெருக்கமான உறவுகள் உண்டு. இவர்களிடமிருந்து தமிழ் கலாச்சாரம் பற்றி வெகுவாக கற்க கூடிய நல் வாய்ப்பும் எனக்கு கிட்டி இருக்கிறது. உலகின் எந்த இட த்துக்கு நான் சென்றாலும் கூட தமிழ்நாட்டை பற்றி பேசாமல் தமிழ் மொழியை மனதார புகழாமல் என்னால் இருக்க முடிவதில்லை. நண்பர்களே தேசத்தின் வளர்ச்சி மற்றும் பாரம்பரியத்தில் தமிழ்நாட்டில் இருந்து கிடைக்கும் கலாச்சார உத்வேகம் தொடர்ந்து விரிவாக வேண்டும். பரவ வேண்டும் என்பதே என்னுடைய முயற்சியாக இருக்கிறது. டெல்லியின் பாராளுமன்ற புதிய கட்டிடத்திலேயே. புனிதமான செங்கோல் நிறுவப்பட்டிருப்பதை நீங்கள் கண்டிருக்கலாம். தமிழ் பாரம்பரியமானது. தேசத்துக்கு அளித்து இருக்கும் நல்லாளுகை மாதிரியிலிருந்து கருத்தூக்கம் பெரும் முயற்சியே இது. காசி தமிழ்ச் சங்கம், சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கம் போன்ற இயக்கங்களின் பொருளும் கூட இது தான். இந்த இயக்கங்கள் தொடங்கப்பட்டதிலிருந்து நாடு முழுவதிலும். தமிழ் மொழி தமிழ் கலாச்சாரம் தொடர்பான உற்சாகம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.


PM Modi: மத்திய அரசு முன்பைக் காட்டிலும் 3 மடங்கு அதிக நிதியை தமிழ்நாட்டிற்கு செலவு செய்திருக்கிறது - பிரதமர் மோடி

இன்று பாரதம் கட்டுமானம் மற்றும் சமூக கட்டமைப்பின் மீது இதுவரை காணாத முதலீடுகளை செய்துவருகிறது. இன்று பாரதம் உலகின் தலைசிறந்த ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக விளங்குகிறது. உலகின் ஒரு புதிய நம்பிக்கை தாரகையாக இன்று பாரதம் ஒளி வீசிக் கொண்டிருக்கிறது. பெரிய பெரிய முதலீட்டாளர்கள் எல்லாம் இன்று பாரதத்தில் முதலீடு செய்து வருகிறார்கள். இதன் நேரடி ஆதாயம் தமிழ்நாட்டிற்கும், தமிழ்மக்களுக்கும் கிடைத்து வருகிறது. தமிழ்நாடு மேக் இன் இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம். இதன் மிகப்பெரிய பிராண்ட் அம்பாசடராக மாறிக்கொண்டிருக்கிறது.

மாநில வளர்ச்சி மூலம் தேசத்தின் வளர்ச்சி என்ற மந்திரத்தை அடிநாதமாக கொண்டு நாம் செயல்பட்டு வருகிறோம். கடந்த ஓராண்டில் மத்திய அரசின் 40 க்கும் மேற்பட்ட பல்வேறு அமைச்சர்கள் 400க்கும் மேற்பட்ட முறை தமிழ்நாட்டில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு விரைவான வளர்ச்சியை அடையும் போது பாரதத்தின் வளர்ச்சியும் விரிவுபடும். இணைப்புகள் கூட முன்னேற்றத்திற்கு ஒரு மிகப்பெரிய ஊடகமாக விளங்குகின்றன. இதனால் வியாபாரமும், வணிகமும் பெருகுவது மட்டுமல்ல, மக்களுக்கு வசதி வாய்ப்புகளும் ஏற்படுகின்றன. வளர்ச்சியின் இந்த உணர்வைத்தான் என்று இங்கே திருச்சிராப்பள்ளியிலேயே நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையம் காரணமாக. இந்த இட த்தின் இணைப்புத்திறன் மூன்று மடங்கு அதிகரிக்கும். இங்கிருந்து கிழக்கு ஆசியா, மத்திய ஆசியா மேலும் உள்நாட்டின் உலக நாடுகளின் பிற பாகங்கள் வரை திருச்சியின் இணைப்பில் அதன் திறன் மேலும் வலுவானதாக ஆகும். இதனால் திருச்சியைத் தவிர அண்டைபுறத்தில் இருக்கும் மிகப்பெரிய பகுதியில் முதலீடுகளும், புதிய வணிகத்துக்கான புதிய சந்தர்ப்பங்களும் உருவாக்கப்படும். இங்கே கல்வி, உடல்நலம் மற்றும் சுற்றுலாத் துறைகளில் மிகப்பெரிய அளவுக்கு பலம் கூட்டப்படும். விமான நிலையத்தின் திறன் அதிகரிப்பதோடு, இதை உயர்த்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலையோடு இணைக்கும் உயர்த்தப்பட்ட சாலையாகவும் கூட மிகப்பெரிய வசதி உண்டாகும். திருச்சி விமான நிலையம் உள்ளூர் கலை, கலாச்சாரம் வாயிலாக தமிழ் பாரம்பரியம் பற்றிய பெருமைமிகு விஷயங்களை உலகிற்கு பறை சாட்டும் என்பது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.


PM Modi: மத்திய அரசு முன்பைக் காட்டிலும் 3 மடங்கு அதிக நிதியை தமிழ்நாட்டிற்கு செலவு செய்திருக்கிறது - பிரதமர் மோடி

மேலும் வலுவானதாகக்க ஐந்து புதிய திட்டங்கள். தொடங்கப்பட்டிருக்கின்றன. இவற்றால் பயணம் மற்றும் போக்குவரத்து எளிதாக ஆகும் என்பது ஒருபுறம். மற்றொரு புறத்திலே இந்த பகுதியில் தொழில்களுக்கும், மின்சார உற்பத்திக்கு கூட பெறும் வலுவூட்டப்படும். இந்த நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கும் மக்கள் நலத்திட்டங்கள் ஸ்ரீரங்கம் சிதம்பரம், மதுரை, ராமேஸ்வரம், வேலூர் போன்ற மகத்துவம் வாய்ந்த இடங்களை இணைக்கின்றன. இவை நமது, நம்பிக்கை, ஆன்மிகம் மற்றும் சுற்றுலாவின் பெரிய மையங்கள். இவற்றால் எளிய சாமான்யர்களுடன் புனித பயணங்களை மேற்கொள்வோருக்கும் பெரிய வசதியை உண்டாக்கும்.

கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசாங்கத்தின் மிகப்பெரிய கவனம் துறைமுகம் வழிநடத்தும் முன்னேற்றம் மீது இருந்து வந்திருக்கிறது. நாம் கடற்கரையோர கட்டமைப்பின் முன்னேற்றம் மற்றும் மீனவ நண்பர்களின் வாழ்க்கையை மாற்றும் நோக்கிலேயே பல பணிகளை ஆற்றி இருக்கிறோம். சுதந்திரம் கிடைத்த பிறகு முதன்முறையாக மீன் வளத்துக்கென பிரத்தியேகமான தனியாக ஒரு அமைச்சகத்தை ஏற்படுத்தி அதற்கென பிரத்தியேகமாக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. முதன்முறையாக மீனவர்களுக்கும் கூட விவசாயிகள் கிசான் கிரெடிட் கார்டு, விவசாயிகள் பற்று அட்டை வசதியும் அளிக்கப்பட்டு இருக்கிறது. மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்புக்காகவும் நவீனமயமாக்கலுக்கும் அரசாங்க உதவிகள் கிடைத்து வருகின்றன. பிரதம மந்திரி மீன் வள திட்டத்தால் மீன்பிடி தொழிலோடு இணைந்திருக்கும் நண்பர்களுக்கு மிகப்பெரிய உதவிகள் கிடைத்து வருகின்றன. 

தமிழ்நாடு உட்பட தேசத்தின் பல்வேறு துறைமுகங்கள் நல்ல சாலைகளோடு இணைக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் பெரும் முயற்சிகளால் இன்று பாரதத்தின் துறைமுக திறனிலும் கப்பல்கள் துறைமுகத்திற்கு வந்து திரும்பிச் செல்லும் நேர அளவிலும் பெரிய மேம்பாடு ஏற்பட்டிருக்கிறது. காமராஜர் துறைமுகம் கூட இந்த தேச த்தின் மிக விரைவாக மேம்பாடு அடைந்து வரும் துறைமுகங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த துறைமுகத்தின் கொள்திறனை நம் அரசாங்கம் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு வரை அதிகப்படுத்தி இருக்கிறது. இப்போது பொதுவான சரக்கு பார்த்து இரண்டு மற்றும் கேப்பிட்டல் ரேஞ்சிங் ஐந்தாவது கட்ட த்தின் தொடக்கம் காரணமாக தமிழ்நாட்டில் ஆக இருக்கும் ஏற்றுமதி இறக்குமதிக்கு புதிய சக்தி கிடைக்கும். சிறப்பான வகையில் இது வாகன துறையில் தமிழ்நாட்டின் திறன்கள், திறமைகளை விரிவாக்கும் அணுசக்தி உலை மற்றும் எரிவாயு குழாய் மூலமாகவும் கூட தமிழ்நாட்டின் தொழிற்சாலைகளுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கல்களுக்கு புதிய பலம் கிடைக்கும்.


PM Modi: மத்திய அரசு முன்பைக் காட்டிலும் 3 மடங்கு அதிக நிதியை தமிழ்நாட்டிற்கு செலவு செய்திருக்கிறது - பிரதமர் மோடி

மாநிலத்தில் வரலாறு காணாத நிதியை செலவு செய்து வருகிறது. 2014 க்கு முன்பான 10 ஆண்டுகளில் மத்திய அரசு அதன் தரப்பில் இருந்து மாநிலங்களுக்கு சுமார் 30 லட்சம் கோடி ரூபாய் அளிக்கப்பட்டது. நம்முடைய அரசாங்கமானது கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மாநிலங்களுக்கு 120 லட்சம் கோடி. ரூபாயை அளித்திருக்கிறது. 2014க்கு முன்பான பத்தாண்டுகளில் எத்தனை நிதியை மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு பெற்றதோ அதைவிட இரண்டரை மடங்குக்கும் அதிகமான நிதியை நம்முடைய மத்திய அரசு. அளித்திருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளை உருவாக்கும் பொருட்டு மத்திய அரசு முன்பைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிக நிதியை தமிழ்நாட்டிற்கு செலவு செய்திருக்கிறது.

ரயில்வே துறையை நவீனமயமாக்க நமது அரசாங்கம் முந்தைய காலத்தோடு ஒப்பிடுகையில் தமிழ்நாட்டிற்கு இரண்டரை மடங்கு அதிகளவு செலவு செய்து வருகிறது. தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான ஏழை குடும்பங்களுக்கு மத்திய அரசின் இலவச ரேஷன் பொருட்கள் கிடைத்து வருகின்றன. இலவசமாக மருத்துவ சிகிச்சை கிடைத்து வருகிறது. நம்முடைய அரசாங்கம் கான்கிரீட் வீடுகள், கழிப்பறை வசதிகள், குடிநீர் இணைப்புகள், எரிவாயு இணைப்புகள் போன்ற பல வசதிகளை. நம் தமிழ்ச் சொந்தங்களுக்கு செய்து வருகிறது.

உங்களின் திறன்கள், திறமைகளை மீது அபாரமான அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தமிழ் இளைஞர்களிடத்திலே ஒரு புதிய எண்ணம், புதிய உற்சாகத்தின் உதயத்தை என்னால் தெளிவாக காண முடிகிறது. இந்த உற்சாகம் தான். வளர்ச்சி அடைந்த பாரதத்தின் சக்தியாக உருமாறும். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் வளர்ச்சி பணிகளுக்கான பலப்பல நல்வாழ்த்துக்கள். இவ்வாறு பிரதமர் பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சென்னையில் இடியுடன் கூடிய மழை: வானிலை மையம் தெரிவித்தது என்ன?
Chennai Rain: சென்னையில் இடியுடன் கூடிய மழை: வானிலை மையம் தெரிவித்தது என்ன?
BJP: “ஆபரேஷன் சக்ஸஸ், பேஷன்ட் டெட்” சம்பவம்! ஒரு வெற்றிகரமான தோல்வியின் கதை!
BJP: “ஆபரேஷன் சக்ஸஸ், பேஷன்ட் டெட்” சம்பவம்! ஒரு வெற்றிகரமான தோல்வியின் கதை!
Kangana Ranaut: கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்! விமான நிலையத்தில் தாக்கிய பெண் பாதுகாப்பு அதிகாரி - ஷாக்
கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்! விமான நிலையத்தில் தாக்கிய பெண் பாதுகாப்பு அதிகாரி - ஷாக்
Breaking News LIVE: சென்னையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை.. மழையால் போக்குவரத்து நெரிசல்
Breaking News LIVE: சென்னையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை.. மழையால் போக்குவரத்து நெரிசல்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Jagan Mohan Reddy vs Chandra Babu Naidu | ”ஆந்திராவில் வன்முறை TDP-யின் அட்டூழியம்” - ஜெகன் மோகன்Kangana Ranaut | கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்! தாக்கிய CSIF பெண் அதிகாரி விமான நிலையத்தில் பரபரப்புLok sabha election ADMK | அதிமுகவை காலி செய்த EX அதிமுகவினர்! குழப்பத்தில் சீனியர்கள்Mayawati INDIA Bloc | மோடியை காப்பாற்றிய மாயாவதி! அந்த 16 தொகுதி இல்லன்னா... I.N.D.I.A ஆட்சிதான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னையில் இடியுடன் கூடிய மழை: வானிலை மையம் தெரிவித்தது என்ன?
Chennai Rain: சென்னையில் இடியுடன் கூடிய மழை: வானிலை மையம் தெரிவித்தது என்ன?
BJP: “ஆபரேஷன் சக்ஸஸ், பேஷன்ட் டெட்” சம்பவம்! ஒரு வெற்றிகரமான தோல்வியின் கதை!
BJP: “ஆபரேஷன் சக்ஸஸ், பேஷன்ட் டெட்” சம்பவம்! ஒரு வெற்றிகரமான தோல்வியின் கதை!
Kangana Ranaut: கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்! விமான நிலையத்தில் தாக்கிய பெண் பாதுகாப்பு அதிகாரி - ஷாக்
கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்! விமான நிலையத்தில் தாக்கிய பெண் பாதுகாப்பு அதிகாரி - ஷாக்
Breaking News LIVE: சென்னையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை.. மழையால் போக்குவரத்து நெரிசல்
Breaking News LIVE: சென்னையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை.. மழையால் போக்குவரத்து நெரிசல்
Rahul Gandhi: பங்குச் சந்தையில் மிகப் பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது - ராகுல் காந்தி
Rahul Gandhi: பங்குச் சந்தையில் மிகப் பெரிய முறைகேடு நடைபெற்றுள்ளது - ராகுல் காந்தி
PM Narendra Modi: தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர்.. ஜூன் 9ம் தேதி பதவியேற்கும் மோடி..? ஏஎன்ஐ தகவல்!
தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர்.. ஜூன் 9ம் தேதி பதவியேற்கும் மோடி..? ஏஎன்ஐ தகவல்!
NTK Vote Bank: 1% முதல் 8% : நாளுக்கு நாள் உயரும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி; சொன்னதைச் செய்யும் சீமான்? என்ன காரணம்?
NTK Vote Bank: 1% முதல் 8% : நாளுக்கு நாள் உயரும் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி; சொன்னதைச் செய்யும் சீமான்? என்ன காரணம்?
BJP Annamalai:ஆட்டை வெட்டி இருக்கிறார்கள்.. திமுகவினர் முடிந்தால் என் மீது கை வைக்கட்டும் -அண்ணாமலை கருத்து!
ஆட்டை வெட்டி இருக்கிறார்கள்.. திமுகவினர் முடிந்தால் என் மீது கை வைக்கட்டும் -அண்ணாமலை கருத்து!
Embed widget