வெளிநாட்டில் மர்மமான முறையில் இறந்த கணவர் - உடலை மீட்கக் கோரி தாய், மகள் கண்ணீர் மல்க கலெக்டரிடம் மனு
வெளிநாட்டில் மர்மமான முறையில் இறந்த கணவனின் உடலை மீட்டுத் தரக்கோரி தாய், மகள் கண்ணீர் மல்க கலெக்டரிடம் மனு.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மனு அளிக்க வந்த தாய், மகள் ஆகியோர் வெளிநாட்டில் மர்மமாக இறந்த தனது கணவரின் உடலை மீட்டுத் தரக் கோரி மனு அளித்தனர். இதனை தொடர்ந்து அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்சி வடக்கு சித்தாம்பூர் காவேரி பாளையத்தை சேர்ந்தவர் சின்னமுத்து புரவியான் வயது 52 இவரது மனைவி அன்னக்கிளி இவர்களுக்கு 12 ஆம் வகுப்பு படித்து முடித்த மகள் நிவேதா உள்ளார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக சின்னமுத்து வெளிநாடான சவுதியில் வெல்டர் வேலைக்காக சென்றவர். கடந்த புதன்கிழமை இரவு அன்று சின்னமுத்து தனது மனைவி அன்னக்கிளி மற்றும் மகளிடம் சவுதியில் இருந்து அலைபேசி மூலம் பேசியுள்ளார். அடுத்த நாள் மனைவி அன்னக்கிளி தனது கணவரிடம் பேச முற்பட்டபோது செல்போன் சுவிட்ச் ஆப்பாகி இருந்தது. அவரது நண்பரிடம் கேட்ட பொழுது உங்களின் கணவர் சவுதியில் காணாமல் போய் விட்டதாக தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டில் மர்மமான முறையில் இறந்த தனது கணவனின் உடலை மீட்டு தரக்கோரி மனைவி அன்னக்கிளி , திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் மனு அளித்தார்.
— Dheepan M R (@mrdheepan) September 13, 2022
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.@abpnadu pic.twitter.com/O8ZsgFadVe
இந்நிலையில் நேற்று மதியம் சவுதியிலிருந்து பேசிய சின்னமுத்துவின் நண்பர் உங்களின் கணவர் சின்னமுத்து சிகிச்சைக்காக அனுமதித்திருப்பதாக கூறினர். பிறகு மீண்டும் தொடர்பு கொண்டு கணவர் சின்னமுத்து இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். தனது கணவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். உரிய விசாரணை நடத்தி தனது கணவரின் உடலை மீட்டுத் தரக் கோரி அவரது மனைவி அன்னக்கிளி மற்றும் மகள் நிவேதா ஆகியோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தனர்.
இதுகுறித்து அன்னக்கிளி கூறுகையில், எனது கணவருக்கு உடலில் என்ன பாதிப்பு ஏற்பட்டது எனக் கூட முழுமையாக தெரிவிக்காமல் அவர் இறந்து விட்டதாக கூறிவிட்டனர். இனி அனாதையாக தவித்து வரும் நான் எனது குடும்பத்தை எப்படி காப்பாற்றுவேன். எனது மகளை எப்படி கல்லூரியில் சேர்த்து படிக்க வைப்பேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு உதவ வேண்டும் என்று கூறினார். மேலும் அவரும், அவரது மகளும் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)