மேலும் அறிய

தனது கோரிக்கையை ஏற்று சாலை அமைத்து கொடுத்த அதிகாரிகள் - எம்.பி., துரை வைகோ நன்றி

தனது கோரிக்கையை ஏற்று  உடனடியாக சாலை அமைத்துக் கொடுத்த மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு எம்.பி. துரை வைகோ நன்றி தெரிவித்தார்.

திருச்சி: திருச்சி  மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பல இடங்களில்  இன்று (9ம் தேதி) காலை 8 மணி முதல் மதியம் 12 மணிவரை  எம்.பி., துரை வைகோ ஆய்வு  மேற்கொண்டார். இதில் திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சி எம்.பி., துரை வைகோ இன்று காலை 8 மணிக்கு  மணிக்கு எம்.ஐ.இ.டி., முதல் எல்காட் ஐடி பூங்கா வரை உள்ள 100 அடி இணைப்பு சாலையில் களஆய்வு மேற்கொண்டார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இந்த இணைப்பு சாலையை அமைத்துத்தர வேண்டும் என்று எம்.பி., துரை வைகோ  கோரிக்கை வைத்திருந்தார். அதனை ஏற்று அமைக்கப்பட்ட சாலையை இன்று  அவர் பார்வையிட்டார். தனது கோரிக்கையை ஏற்று உடனடியாக சாலை அமைத்துக் கொடுத்த மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு எம்.பி. துரை வைகோ நன்றி தெரிவித்தார்.

அந்தப் பகுதியில் உள்ள ஜங்ஷனில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளதை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் எம்.பி. துரைவைகோ சுட்டிக்காட்டி, . 100 மீட்டருக்கு சாலையை இருபுறத்திலும் அகலப்படுத்திட வேண்டும் என்று  வலியுறுத்தினார். 100 அடி சாலை முடிவிலிருந்து ஐடி பார்க் வரை செல்லும் ஒரு கிலோமீட்டர் அளவிற்கு குறுகிய வளைவு பகுதி உள்ளதால் தொடர்ந்து விபத்துகள் நடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 

அதையும் சரிசெய்து குறுகிய இடத்தை அகலப்படுத்தி ஒரே சீரான சாலை அமைக்க அதிகாரிகளிடம்  எம்.பி. கோரிக்கை விடுத்தார். ஐடி பார்க் சந்திப்பு பகுதியிலும் சாலைகளை சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். அங்கு போதுமான அளவு விளக்குகள் அமைக்கவும் வலியுறுத்தினார். இதற்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

அடுத்ததாக, சோழமாதேவி பகுதியில் உள்ள சாலைகளின் தரத்தை அதிகாரிகளிடம் எடுத்துரைத்து சாலைகளை அமைக்கும்படி கேட்டுக்கொண்டார். சோழமாதேவி நகரில் உள்ள பழைய பாலத்தை இடித்துவிட்டு அகலமான புதிய பாலம் அமைத்துத்தர அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதனையும் நிறைவேற்ற வேண்டும் என்று அதிகாரிகளிடம் எம்.பி., வலியுறுத்தினார். நடப்பு ஆண்டின் ஒதுக்கீடுகள் முடிவடைந்தபடியால் அடுத்த நிதி ஆண்டில் அமைக்கலாம் என்றனர். ஏதாவது சிறப்பு நிதியை அடையாளம் கண்டு அதில் இங்கு புதிய பாலம் கட்டுவதற்கான ஆயத்த பணிகளை தொடங்க ஆவன செய்யுமாறு எம்.பி., துரை வைகோ கேட்டுக்கொண்டார். 

அடுத்ததாக, திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு பயணிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தார். அங்கு பூட்டப்பட்டிருந்த கழிப்பறைகளைத் திறந்து விட வேண்டுமென பயணிகள் வலியுறுத்தினர். இதனை ரயில் நிலைய மேலாளரிடம் எடுத்துரைத்தபோது கழிப்பறைகளில் சில சமூகவிரோத நடவடிக்கைகள் நடப்பதாக தெரிவித்தார்.. அதற்கு, மொத்தமாக பூட்டிவிடுவது சரி அல்ல என்றும், சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட வேண்டும். ரயில்கள் வரும் நேரங்களில் இரண்டு மணி நேரம் மட்டுமாவது கழிப்பறைகள் திறந்துவிடப்படுவது அவசியம் என்றும் வலியுறுத்தினார். தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள் அவ்வாறே செய்வதாக ஒப்புக்கொண்டனர்.

அடுத்ததாக, திருவெறும்பூர் ரயில் நிலையத்தையும் திருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்தையும் இணைக்கும் கூடுதல் சாலையை அகலப்படுத்தி, சீரமைத்து சாலை அமைத்துத் தரவேண்டும் என்று எம்.பி. துரை வைகோ வலியுறுத்தினார். அங்கு உள்ள ரயில் பாதையை கடக்கும் போது விபத்துகள் ஏற்பட்டு பல உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், அதனால் அங்கு ஒரு சுரங்கப்பாதை அமைத்துத்தர வேண்டும் என்று பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இன்று அதற்கான மூன்று இடங்களை அதிகாரிகளுடன் பார்வையிட்டார்.

ஒவ்வொரு இடத்திலும் சில தொழில் நுட்ப காரணங்களால் சுரங்கப்பாதை அமைக்க முடியாது என்று அதிகாரிகள் கூறினர். இருந்தாலும் சின்ன அளவிலாவது சுரங்கப்பாதை அமைக்க வழிவகை செய்துதர வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து தெரிவிப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன் பிறகு, அங்கு புதிய பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்தார். இறுதியாக பால்பண்ணை பகுதியில் உள்ள சென்னை – தஞ்சாவூர் பிரிவு சாலையை பார்வையிட்டார். ஆய்வின்போது மதிமுக நிர்வாகிகள், திமுக உள்ளிட்ட தோழமை கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
Renault Triber: பட்ஜெட் விலையில் 7 சீட்டர் கார்.. Renault Triber காரின் விலையும், மைலேஜும் எப்படி?
Renault Triber: பட்ஜெட் விலையில் 7 சீட்டர் கார்.. Renault Triber காரின் விலையும், மைலேஜும் எப்படி?
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
Embed widget