தஞ்சாவூர் மாணவி பவித்ரா: தேசிய சிலம்பம் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை
மாணவி பவித்ரா தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை பெற வேண்டும் என்பது தனது நோக்கம் என்றார்.

தஞ்சாவூர்: தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தஞ்சைக்கு பெருமை சேர்த்துள்ளார் அரசு உதவிபெறும் பள்ளி மாணவி பவித்ரா.
வாழ்வில் முன்னேற்றத்தின் படிக்கட்டுகளாக இருப்பவை முயற்சி, செயல்திறன், தன்னம்பிக்கைதான். முன்னேற முயற்சியை, உழைப்பை, அறிவை, ஒழுக்கத்தை நம்புபவர்கள் வெற்றியின் பக்கம் நிற்கின்றனர். இதைத்தவிர வேறு எதை நம்பினாலும் முன்னேற முடியாது என்பதையும் தெரிந்து உள்ளனர்.
அறிவுக்கு இந்த உலகம் எப்போதும் வணங்கும். திறமைக்கு இருகரம் நீட்டி ஆதரவு தரும். தூய்மையான உள்ளத்திற்கு மிகுந்த வரவேற்பு தரும். துன்பங்களையும், தோல்விகளையும் மனோபலத்துடன் எதிர்கொள்ள முடிந்தால், எப்படிப்பட்ட துக்கத்தையும் தாங்கிக்கொள்ள முடியும். நிறைந்த முயற்சியை உடையவன், மலர்ந்த வாழ்வைப் பெறுவான். வெற்றியாளராக மாறுவான் என்பது எப்போதும் நிரூபிக்கப்பட்ட ஒன்று.

மீன்களிடம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம் ஒன்று இருகின்றது . நீரோட்டம் இருக்கும் திசையில் நீரில் இருப்பது எல்லாம் அடித்து செல்லப்படும். காரணம் தண்ணீரின் வேகம். ஆனால் மீன்கள் என்ன செய்யும் தெரியுமா? நீரோட்டம் வரும் திசையோடு நீந்தாது அதற்கு எதிர்த்து எதிர் திசையில் நீந்தும். தாவிக்குதித்து நீரோட்டத்தின் வேகத்தை எதிர்த்து முன்னேறும். இதில் இருந்து நமக்கு கிடைக்கும் பாடம் என்ன ? நாமும் பிரச்சனை வெள்ளம் போல திரளாய் வந்தாலும் துணிந்து எதிர்கொண்டு எதிர்நீச்சல் போட்டு முன்னேற வேண்டும் என்பதுதான்.
வெற்றியின் அடிகோலாக இருப்பது தன்னம்பிக்கை. நாம் நமது அன்றாட வாழ்க்கையில் பல தடைகளைச் சந்திக்கின்றோம். பல்வேறு பட்ட சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் நமது வாழ்வில் நிறையவே ஏற்படுகின்றன. இவ்வாறான தடைகளுக்கும், சவால்களுக்கும் ஈடுகொடுக்க முடியாமைக்கான முக்கிய காரணமாக விளங்குவது தன்னம்பிக்கையின்மையாகும்.
அந்த வகையில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தஞ்சைக்கு பெருமையை சேர்த்துள்ளார்கீழவாசல் முள்ளுக்கார தெரு பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி, சுரேஷ் ஆகியோரின் மகள் பவித்ரா (13). இவர் தஞ்சையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயது முதலே நாட்டியம், பாடல், சிலம்பம், ஓவியம் வரைதல் என பல்வேறு கலைகளிலும் ஆர்வம் உடையவர்.
தான் நான்காம் வகுப்பு பயிலும் போது பரதநாட்டியம் பள்ளி அருகே சிலம்பம் கற்றுக் கொடுப்பதை பார்த்த இவருக்கு சிலம்பம் சுற்ற ஆர்வம் ஏற்பட்டு சிலம்ப பள்ளியில் சேர்ந்து தனது முயற்சியால் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இதேபோல் திருச்சி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
இவர் சிலம்பம், சுருள்வாள் என அனைத்து கலைகளிலும் தேர்ச்சி பெற்று கடந்த மாதம் கோவாவில் நடைபெற்ற மத்திய விளையாட்டு துறையின் இளையோர் விளையாட்டு போட்டி நடைபெற்ற நிலையில் இதில் 14 வயதுக்குட்பட்டவருக்கான சிலம்பம் சுருள் வாள் மற்றும் போட்டியில் தேசிய அளவில் முதலிடம் பெற்று தங்க பதக்கம் பெற்றுள்ளார். மேலும் தேசிய அளவில் சர்வதேச அளவிலும் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை பெற வேண்டும் என்பது தனது நோக்கம் எனவும், இதற்கு அரசு உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தனது பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், பயிற்சியாளர் என அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார். தேசிய அளவில் வெற்றி பெற்று சொந்த ஊர் வந்து அவருக்கு பெற்றோர், ஆசிரியர்கள் பயிற்சியாளர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.





















