மேலும் அறிய

இந்திய அணி ஹாக்கி வீரருக்கு வீடு வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

அரியலூர் மாவட்டம், இந்திய ஹாக்கி அணி வீரர் எஸ். கார்த்திக்குக்கு குரும்பஞ்சாவடி திட்டப்பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (28.11.2022) 2022) ஆம் ஆண்டு ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்று, தமிழகத்திற்கு பெருமை சேர்த்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய ஹாக்கி அணி வீரர் எஸ். கார்த்திக் இல்லத்திற்கு நேரில் சென்று, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அரியலூர் மாவட்டம், குரும்பஞ்சாவடி திட்டப்பகுதியில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையினை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார். இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்றுள்ள அரியலூர், ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்த கார்த்திக்கின் குடும்ப உறுப்பினர்கள், தங்களது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டும், தங்களின் மகன் விளையாட்டில் பயிற்சி மேற்கொள்வதற்கு உதவிகள் வேண்டியும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்தார்கள். அதன் அடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை தொடர்பு கொண்டு கார்த்திக் இல்லத்திற்கு சென்று அவர்களுக்கு தேவைப்படும் உதவிகள் குறித்து கேட்டறிந்திட அறிவுறுத்தினார்.

இந்திய அணி ஹாக்கி வீரருக்கு வீடு வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

கார்த்திக் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று, இந்திய ஹாக்கி விளையாட்டு வீரர் கார்த்திக்கின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அரியலூர் மாவட்டம், குரும்பஞ்சாவடி திட்டப்பகுதியில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையினை வழங்கினார். முன்னதாக, இந்தோனேசியா நாட்டின் ஜகார்தாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கி வாகையர் போட்டியில் (ASIA CUP HOCKEY CHAMPIONSHIP-2022) இந்திய அணியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் எஸ். கார்த்திக்குக்கு 10 இலட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலையை தமிழ்நாடு முதலமைச்சரால் 24.11.2022 அன்று சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி ஹாக்கி வீரருக்கு வீடு வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, போக்குவரத்து துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, தொல். திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர்கள் கே. சின்னப்பா, க.சொ.க. கண்ணன், அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பெ. ரமண சரஸ்வதி ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
OPS vs EPS: இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
Maruti Electric MPV: மாருதியின் முதல் மின்சார எம்பிவி ஆன் தி வே - என்ன எதிர்பார்க்கலாம்? எப்படி இருக்கும்?
Maruti Electric MPV: மாருதியின் முதல் மின்சார எம்பிவி ஆன் தி வே - என்ன எதிர்பார்க்கலாம்? எப்படி இருக்கும்?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
OPS vs EPS: இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
Maruti Electric MPV: மாருதியின் முதல் மின்சார எம்பிவி ஆன் தி வே - என்ன எதிர்பார்க்கலாம்? எப்படி இருக்கும்?
Maruti Electric MPV: மாருதியின் முதல் மின்சார எம்பிவி ஆன் தி வே - என்ன எதிர்பார்க்கலாம்? எப்படி இருக்கும்?
Top 10 News Headlines: உச்சத்தில் வெள்ளி, அசத்திய இஸ்ரோவின் பாகுபலி, ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு - விறுவிறுப்பான 11 மணி செய்திகள்
உச்சத்தில் வெள்ளி, அசத்திய இஸ்ரோவின் பாகுபலி, ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு - விறுவிறுப்பான 11 மணி செய்திகள்
ISRO BlueBird: விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
ISRO BlueBird: விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
Tamilnadu Round Up: தவெக - காங்., கூட்டணி? எகிறிய தங்கம், ஈபிஎஸ்க்கு நோ சொன்ன ஓபிஎஸ் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: தவெக - காங்., கூட்டணி? எகிறிய தங்கம், ஈபிஎஸ்க்கு நோ சொன்ன ஓபிஎஸ் - தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget