மேலும் அறிய

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு - பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிப்பு

இன்று திங்கட்கிழமை மாலை 6 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை காலை 7 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில்  பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் விமர்சையாக நடைபெறும். அதில், மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. ஆனால், இந்த ஆண்டு கார்த்திகை மாதத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. மேலும் பகல்பத்து, ராப்பத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் 20 நாட்களும் பெரிய பெருமாள் எனப்படும் மூலவர் ரெங்கநாதர் முத்தங்கியுடன் அருள் தருவார். பகல்பத்து உற்சவத்தின் போது உற்சவர் நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்திலும், ராப்பத்து உற்சவத்தின் போது திருமாமணி மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்திலும் அனைத்து ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்களுடன் எழுந்தருளி சேவை சாதிப்பார். மேலூம் திருநெடுந்தாண்டகம் திருவிழா நாட்களில் நாலாயிர திவ்யபிரபந்தம் ஆனது பகல்பத்து மற்றும் ராப்பத்து என 20 நாட்கள் அபிநயம் மற்றும் இசையுடன் நம்பெருமாள் முன் பாடப்படும். அதற்காக ரெங்கநாதரிடம் மூலஸ்தானத்தில் அனுமதி பெற்று இந்த நாலாயிர திவ்ய பிரபந்தத்தை படிக்க தொடங்குவதே திருநெடுந்தாண்டகம் ஆகும்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு - பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிப்பு

ஸ்ரீரங்கம் கோவிலில் நாலாயிரம் திவ்யபிரபந்தம் படிக்க ஆரம்பித்தவுடன் மற்ற திவ்ய தேசங்களில் இருந்து பெருமாள்கள் அனைவரும் இங்கு எழுந்தருள்கின்றனர் என்பது ஐதீகம். இதனால் இக்கோவிலில் படிக்கும் திவ்யபிரபந்தத்தை வேறு எங்கும் படிக்க மாட்டார்கள். அப்படி படித்தால் அதற்கு பலன் இருக்காது என்பது நம்பிக்கை.  இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 3ஆம் தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அந்தவகையில், பகல்பத்து உற்சவத்தின் 10 ஆவது நாளான இன்று திங்கட்கிழமை நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் தருகிறார். இதற்காக நம்பெருமாள் நாச்சியார் கோலத்தில் மூலஸ்தானத்தில் இருந்து இன்று காலை 6 மணிக்கு புறப்பட்டு 7 மணிக்கு பகல் பத்து அர்ஜூன மண்டபம் வந்தடைகிறார். பொதுஜன சேவை காலை 6.30 மணி முதல் மாலை 4.30 மணி முடிய நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு பின் மூலஸ்தான சேவை கிடையாது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு - பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிப்பு

குறிப்பாக நாளை ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். நாளை அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் (லக்னப்படி) எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருளுகிறார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். காலை 7 மணிவரை சேவார்த்திகள் அனுமதி இல்லை. காலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை பொதுமக்கள் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சொர்க்கவாசல் 15ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை பிற்பகல் 1 மணி முதல் இரவு 7.30 மணிவரையிலும் திறந்திருக்கும். 20ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணிவரை பரமபத வாசல் திறந்திருக்கும். 21ஆம் தேதி சொர்க்க வாசல் திறப்பு இல்லை. 22ஆம் தேதி பிற்பகல் 1 மணி முதல் இரவு 7.30 மணிவரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். 23 ஆம் தேதி காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு இருக்கும்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை சொர்க்க வாசல் திறப்பு - பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிப்பு

மேலும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்காக இன்று திங்கட்கிழமை மாலை 6 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை காலை 7 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. நம்பெருமாள் பரமபத வாசல் கடந்து, திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளிய பிறகு நாளை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். இரவு 8 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi:அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi:அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Gautam Gambhir: 1 ரன்னில் தோற்ற இந்தியா! இரவு முழுவதும் கதறி அழுத கவுதம் கம்பீர்!
Gautam Gambhir: 1 ரன்னில் தோற்ற இந்தியா! இரவு முழுவதும் கதறி அழுத கவுதம் கம்பீர்!
Embed widget