திமுக அரசு தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - எடப்பாடி.பழனிச்சாமி
அரசியல்வாதிகளுக்கும், பொதுமக்களுக்கும், காவல்துறையினருக்கும் இந்த ஆட்சியில் பாதுகாப்பில்லை சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது - எடப்பாடி. பழனிச்சாமி பேட்டி
புதுக்கோட்டையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு விராலிமலை சட்டமன்ற தொகுதி மருத்துவ படிப்பு சேர்ந்த ஐந்து மாணவர்களுக்கு பாராட்டு விழா முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் ஆன எடப்பாடி பழனிச்சாமி மாணவர்களை பாராட்டி ஸ்டேட்டஸ் கோப், இனிப்புகள் வழங்கி பாராட்டினார் .
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி. பழனிச்சாமி பேசியது..
தமிழ்நாட்டில் 7.5% இட ஒதுக்கீட்டில் மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பு படிப்பதற்கு எனது ஆட்சிக்காலத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த 2019 20 ஆம் ஆண்டு அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களில் 30 பேர் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்தனர்.
இந்த நிலை மாற வேண்டும் கிராமப்புற மாணவர்கள் மருத்துவராக வேண்டும், என்பதற்காக தான் 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.
மேலும், 7 மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் அதிமுக ஆட்சிக்காலத்தில் 700 கோடி ரூபாய் மதிப்பில் காவேரி - வைகை குண்டார் இணைப்பு திட்டம் தொடங்கியது. அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதாலேயே தற்போது திமுக அரசு இந்த திட்டத்தை முடக்கியுள்ளது என குற்றம் சாட்டினார்.
காவேரி- வைகை குண்டார் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மீண்டும் அதிமுக ஆட்சி வந்தவுடன் காவேரி- வைகை குண்டார் இணைப்பு திட்டம் விரைவாக பணிகள் நடைபெற்று திட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.
தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளுக்கும், பொதுமக்கள், காவல்துறையினருக்கும் இந்த ஆட்சியில் பாதுகாப்பில்லை சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. குறிப்பாக திறமை அற்ற முதல்வர் நாட்டை ஆண்டு வருகிறார்.
தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தொடங்குவதற்கு எல்லோருக்கும் ஜனநாயக உரிமை உள்ளது. ஆனால் மாநாடு உள்ளிட்ட எந்த நிகழ்விற்கு யார் அனுமதி கேட்டாலும் அனுமதி கொடுப்பது மறுக்கபடுகிறது. எங்கள் ஆட்சி காலத்தில் எல்லா கட்சிகளும் போராட்டங்கள் நடத்தவும், மாநாடுகள் நடத்தவும் அனுமதி கொடுத்தோம்.
ஆனால் நடிகர் விஜய்யின் மாநாட்டிற்கு திமுக அரசு அனுமதி கொடுக்காதது கண்டிக்கத்தக்கது. விஜயை கண்டு திமுக பயப்படுகிறதோ, இல்லையோ. ஆனால் பெரிய கட்சி, சிறிய கட்சி ஜனநாயக நாட்டில் யார் அனுமதி கேட்டாலும் கொடுப்பது தான் முறை ஆகும்.
பாஜக விவகாரம் குறித்தும் அவர்கள் அழைப்பு விடுத்த விவாகரம் குறித்தும் எனது கருத்தை நான் ஏற்கனவே தெளிவாக சொல்லி விட்டேன். இனி இந்த விவகாரத்தில் அரைத்த மாவை அரைக்க வேண்டியதில்லை என்றார்.
அதிமுக ஆட்சியில் இருந்தபோது தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும் என்று, தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். ஆனால் எங்கள் ஆட்சி காலத்தில் முதலீடுகளை ஈர்த்தது வெளிப்படையாக தெரிந்தது
இப்போது இந்த ஆட்சியில் கூறப்படும் தொழில் முதலீடுகள் குறித்த தொகை எதுவும் வெளிப்படை தன்மையாக இல்லை என்றார்.
அதனால் தான் நாங்கள் மட்டுமல்ல அனைத்து எதிர்கட்சிகளுமே வெள்ளை அறிக்கை வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ததமிழ்நாட்டில் வருகின்ற காலங்களில் உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி எதையும் சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என தெரிவித்தார்.