மேலும் அறிய

Chennai Rains: மழைக்காலங்களில் சென்னை தண்ணீரில் மிதக்காது - அமைச்சர் கே.என். நேரு உறுதி

சென்னையில் முழுவதுமாக மழை நீர் வடிக்கால், கழிவு நீர் கால்வாய்  சீரமைக்கப்பட்டுள்ளது. மழை காலங்களில் சென்னை தண்ணீரில் மிதக்காது - நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு

தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த பிறகு பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனை  தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேரு கூறுகையில், திருச்சி பஞ்சப்பூரில் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் 80 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது. அங்கு  200 பேருந்துகள் வந்து செல்லும் வகையிலும், 104 பேருந்துகள் சிறிது நேரம் மட்டுமே நின்று செல்லும் வகையிலும், 100 பேருந்துகள் நிரந்தரமாக நிற்கும் வகையிலும் வசதி செய்யப்படவுள்ளது. இதற்கான கட்டுமான செலவுகளுக்காக முதற்கட்டமாக ₹ 390 கோடி ரூபாய் நிதியினை தமிழக முதல்வர் ஒதுக்கீடு செய்து, சட்டமன்றத்தில் அறிவித்து, அது கையெழுத்தாகி அரசாணையாகவும் வெளியாகியுள்ளது. ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் 28 ஏக்கர் பரப்பளவில் காய்கறிகளுக்கான மொத்த மற்றும் சில்லறை விற்பனை சந்தை அமைக்கப்பட உள்ளது. மேலும் அதன் அருகிலேயே வணிக வளாகம், வர்த்தக மையம், அங்கு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வந்து செல்ல உயர்மட்ட பாலம் உள்ளிட்டவையும் அமைக்கப்பட உள்ளது. உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான நிதியை  தேசிய நெடுஞ்சாலை துறையினர் வழங்கியுள்ளனர். திருச்சி பஞ்சப்பூரில் பேருந்து முனையம் அமையவுள்ள களிமண் சார்ந்த பள்ளத்தை, கிராவல் மண் கொண்டு 3 அடி உயரத்தி, நிலத்தை சமன்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

Chennai Rains: மழைக்காலங்களில் சென்னை தண்ணீரில் மிதக்காது - அமைச்சர்  கே.என். நேரு  உறுதி

மேலும் இன்னும் 3 மாதத்தில் பேருந்து முனையம் அமைப்பதற்கான ஒப்பந்த பணிகள் நிறைவடையும். அடுத்த 18 மாதத்தில் பேருந்து முனையம் கட்டிமுடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் மாநகராட்சி, நகராட்சி குப்பை கிடங்குகளில் தேங்கி கிடைக்கும் குப்பைகள் அனைத்தும் இன்னும் 18 மாத காலத்தில் பயோ மைனிங் திட்டத்தின் கீழ் அகற்றப்படும். சென்னை பெருங்களத்தூர் குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை 30 மாதங்களில் அகற்றிவிட்டு 400 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைக்கவுள்ளோம். பிளாஸ்டிக் என்பது மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆகையால் உடனே ஒழிப்பது என்பது சற்று சிரமமாக உள்ளது. இந்நிலையில் பிளாஸ்டிக் ஒழிப்பை தீவிரமாக பேசி வருகிறோம். அதனை உடனடியாக மக்கள் கைவிடுவது சிரமமான காரியம். அதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.  சென்னையில் மழை நீர் வடிக்கால்வாய் மற்றும் கழிவுநீர் வடிகால் பாதைகளை மேம்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் ₹938 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார்.

Chennai Rains: மழைக்காலங்களில் சென்னை தண்ணீரில் மிதக்காது - அமைச்சர்  கே.என். நேரு  உறுதி

தமிழகம் முழுவதும் வாரந்தோறும் நடைபெறும் மெகா தூய்மை பணிகளில் இதுவரை 7500 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளது. பணியாளர்களை வைத்து குப்பைகளை சேகரிக்கும் போது பொருள் செலவுகள் அதிகமாவதை தவிர்க்க, தன்னார்வலர்களை கொண்டு  குப்பைகளை சேகரிக்கும் புதிய திட்டத்தை சென்னையில் தொடங்கவுள்ளோம். திருச்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அழுத்தம் கொடுத்து உள்ளோம். திருச்சி மாநகரில் 15 நாட்களில் சாலை அமைக்கும் பணிகள் 75 சதவீதம் நிறைவடையும் என்றார். மேலும், சென்னையில் முழுவதுமாக மழை நீர் வடிக்கால், கழிவு நீர் கால்வாய் சீரமைக்கப்பட்டுள்ளது, மழை காலங்களில் சென்னை தண்ணீரில் மிதக்காது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் நேரு, பாஜக பொன்.ராதாகிருஷ்ணன் கேள்விக்குகெல்லாம்  பதில் சொன்னால் மேலே பார்த்து துப்பிக்கொள்வது போன்று என தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget