மேலும் அறிய

Cauvery Calling: திருச்சியில் தொடங்கியது காவேரி கூக்குரல் இயக்கத்தின், மாபெரும் மரப்பயிர் சாகுபடி கருத்தரங்கு..!

திருச்சி, கொப்பம்பட்டியில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில் மாபெரும் மரப்பயிர் சாகுபடி கருத்தரங்கு நடைபெற்று வருகிறது.

காவேரி கூக்குரல் இயக்கத்தினர் மக்களிடம் விவசாயம் தொடர்பாகவும், விவசாயத்தின் மூலம் எளிதாக வருவாய் ஈட்டும் வழிமுறைகளையும் விளக்கமாக கூறி வருகின்றனர். இந்த சூழலில், காவேரி கூக்குரல் இயக்கத்தினர் சார்பில் திருச்சியில் இன்று மாபெரும் மரப்பயிர் சாகுபடி கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. இந்த கருத்தரங்கில் மரம் சார்ந்த விவசாயம் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது. தமிழக விவசாயிகளிடம் மரம் சார்ந்த விவசாயம் செய்யும் ஆர்வம் அதிகரித்ததையடுத்து, இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டு வருகிறது.

Cauvery Calling: திருச்சியில் தொடங்கியது காவேரி கூக்குரல் இயக்கத்தின், மாபெரும் மரப்பயிர் சாகுபடி கருத்தரங்கு..!

திருச்சி, துறையூர் தாலுகாவில் உள்ள கொப்பம்பட்டியில் இந்த கருத்தரங்கு நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில் வன மரபியல் மற்றும் மரப் பெருக்கு நிறுவனத்தின் (IFGTB) விஞ்ஞானி டாக்டர். மாயவேல்  ‘மலைவேம்பில் மலைக்க வைக்கும் வருமானம்’ எனும் தலைப்பிலும், ஓய்வு பெற்ற வேளாண் இணை இயக்குனர் டாக்டர் ஹரிதாஸ் ‘பலா – பழமும் தரும், மரம் மூலம் மொத்த பணமும் தரும்’ எனும் தலைப்பிலும், பல்லடத்தை சேர்ந்த முன்னோடி
விவசாயி துரைசாமி  ‘4 அடுக்கு பாதுகாப்பில் 40 ஏக்கரில் சந்தன மரங்கள் ’என்ற தலைப்பிலும், காரைக்குடியை சேர்ந்த ஆசிரியர் ராமன் ‘மழை நீரே போதும் – 60 ஏக்கர் நிலத்தில் அற்புத காடு’ என்ற தலைப்பிலும், பண்ருட்டியில் சமவெளியில் மிளகு பயிரிடும் விவசாயி திருமலை ‘கருப்பு பனையில் கருப்பு தங்கம் (மிளகு)’ என்ற தலைப்பிலும் பேசுகின்றனர்.

தேக்கு, குமிழ் தேக்கு, மகோகனி, வேங்கை போன்ற மரங்களை வளர்க்கும் முன்னோடி விவசாயிகள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர். ‘லிட்டில் ஊட்டி’ என்ற பெயரிலான வேளாண் காட்டில் சுமார் 1 லட்சத்திற்கு மேற்பட்ட பல்வேறு வகை மரங்களை அக்காட்டின் உரிமையாளர் டாக்டர் துரைசாமி வளர்த்து வருகிறார். அந்த பிரமாண்ட வேளாண் காட்டை விவசாயிகள் சுற்றி பார்க்கும் ‘பண்ணை பார்வையிடல்’ நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 

Cauvery Calling: திருச்சியில் தொடங்கியது காவேரி கூக்குரல் இயக்கத்தின், மாபெரும் மரப்பயிர் சாகுபடி கருத்தரங்கு..!

காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த கருத்தரங்கு முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. விவசாயிகள் 94425 90079, 94425 90081 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளலாம். காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
Embed widget