மேலும் அறிய

250 உயிர்களை பலிவாங்கிய அரியலூர் ரயில் விபத்தின் 65ஆவது ஆண்டு நினைவு தினம்...!

’’இந்த சம்பவத்தின்போது, பிரதமராக நேரு இருந்தார். ரயில் விபத்துக்கு முழுப்பொறுப்பேற்று லால்பகதூர் சாஸ்திரி தனது ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்’’

மக்களை பொறுத்தவரை ரயில் பயணம் என்பது இப்போது மட்டுமல்ல, எப்போதுமே பாதுகாப்பானதுதான். ஆனால் விபத்துகள் என்பது அரிதாக நடந்தாலும், பெரிய அளவிலான சேதங்களை ஏற்படுத்தி விடுகின்றன அப்படிப்பட்ட விபத்து தான் 65 ஆண்டுகள் கடந்தாலும் அகலாத நினைவாக இருக்கும் அரியலூர் இரயில் விபத்து. இன்னும் சொல்ல வேண்டும் என்றால்  இந்தியாவையே உலுக்கிய அந்த விபத்து 1956 நவம்பர் 23ஆம் தேதி நடந்தது. 142 பயணிகள் இறந்தனர், 110 பேர் காயமடைந்தனர். ஏராளமானோர் காணாமல் போயினர். விபத்துக்கு முந்தைய நாள் இரவு 9.30 மணிக்கு சென்னை எழும்பூர் நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 603) சுமார் 800 பயணிகளுடன் புறப்பட்டது. நீராவி என்ஜின் இணைக்கப்பட்ட அந்த ரயில் கொட்டும் மழையில் கரும்புகையை கக்கிக் கொண்டு கிளம்பியது. அந்த ரயிலுக்கு முன்பாக, திருவனந்தபுரம், நெல்லைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்றிருந்தன. மொத்தம் 13 பெட்டிகளை கொண்ட இந்த ரயில் சென்ற பாதை எல்லாம் இடைவிடாமல் இடி-மின்னலுடன் மழை பெய்து கொண்டே இருந்தது. முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்த பயணிகள் அயர்ந்து தூங்கினார்கள். பொதுப்பெட்டிகள், பெண்கள் பெட்டியில் பயணித்தவர்கள் தூக்கம் இன்றி கண்விழித்த நிலையில் இருந்தனர். நள்ளிரவு நேரத்தில் ரயில் விருத்தாசலம் ரயில் நிலையத்தை அடைந்ததும், ரயிலின் கடைசி பெட்டி கழற்றப்பட்டது. அது சேலம் செல்லும் இணைப்பு ரயிலில் மாற்றப்படுவதற்காக தனியாக நிறுத்தப்பட்டது.

250 உயிர்களை பலிவாங்கிய அரியலூர் ரயில் விபத்தின் 65ஆவது ஆண்டு நினைவு தினம்...!

பின்பு 12 பெட்டிகளுடன் தூத்துக்குடி ரயில் அங்கிருந்து புறப்பட்டது. ரயிலை விட்டு பயணிகள் ஏறி இறங்கினாலும், மழை மட்டும் விடாமல் பெய்து கொண்டே இருந்தது. அதிகாலை வேளையில், 5.30 மணிக்கு ரயில் அரியலூரை தாண்டி திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. காவிரியின் கிளை ஆறான மருதையாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த ரயில்வே பாலத்தை மூழ்கடித்த நிலையில் அப்போது ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. இந்த அபாயகரமான பாலத்தைத்தான் ரயில் கடந்து செல்ல வேண்டும். ஆனால், போதிய வெளிச்சம் இல்லாததால், ரயிலை இயக்கிய என்ஜின் டிரைவர் துரைசாமி, பயர்மேன்கள் (நிலக்கரியை எரியவைப்பவர்கள்) முனுசாமி, கோதண்டன் ஆகியோரின் கண்களுக்கு வெள்ளத்தின் அபாய நிலை தெரியவில்லை.

250 உயிர்களை பலிவாங்கிய அரியலூர் ரயில் விபத்தின் 65ஆவது ஆண்டு நினைவு தினம்...!

வேகமான நீரோட்டத்தால், பாலத்தின் தூண்களும் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. ரயில் என்ஜின் பாலத்தை கடக்க முற்பட்டபோது, தண்டவாளம் ஆட்டம் கண்டது. ரெயில் பெட்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக முன்னேறிச் சென்ற நிலையில், பாரம் தாங்காமல் பாலம் அப்படியே வெள்ளத்தில் மூழ்கியது. இதனால், நிலைகுலைந்த ரெயில் பெட்டிகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. என்ன நடக்கிறது என்று தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அபயக் குரல் எழுப்பியும், காப்பாற்றுவதற்கு அங்கு யாரும் இல்லை. ரயிலில் உள்ள முதல் 7 பெட்டிகளை வெள்ளம் மூழ்கடித்துவிட்டது.  அதிலும், என்ஜினுக்கு அடுத்த பெட்டி பெண்கள் பெட்டியாக இருந்ததால், அதில் பயணித்த பெண்கள், குழந்தைகள்தான் நீருக்கு அடியில் சிக்கிக்கொண்டு மாண்டுபோனார்கள்.

250 உயிர்களை பலிவாங்கிய அரியலூர் ரயில் விபத்தின் 65ஆவது ஆண்டு நினைவு தினம்...!

இந்த கோர சம்பவத்தில் சுமார் 250 பேர் தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழந்தனர். விடிந்தும் விடியாததுமாக சம்பவத்தை கேள்விப்பட்டு, அங்கு மீட்புக் குழுவினர் வந்தனர். ஆனால், 2 நாள் போராட்டத்திற்கு பிறகும் 150 சடலங்களை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது. பலரது உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்து அழுகிய நிலையிலேயே மீட்கப்பட்டன. இந்தியாவையே உலுக்கிய இந்த கோர விபத்து சம்பவத்தின்போது, பிரதமராக நேரு இருந்தார். ரயில்வே துறை மந்திரியாக லால்பகதூர் சாஸ்திரி இருந்தார். ரயில் விபத்துக்கு முழுப்பொறுப்பேற்று அவரை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில், லால்பகதூர் சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் இந்த ரயில் விபத்தின்போது, கடைசி பெட்டியில் இருந்த கார்டுகளான வைத்தியநாதசாமி, ஆறுமுகம் மற்றும் பின்வரிசை பெட்டிகளில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர். அந்த விபத்து நடந்து 65 ஆண்டுகள் கடந்திருந்தாலும், அதில் இருந்து தப்பியவர்களில் ஒரு சிலர் இன்னும் உயிரோடு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. என்றாலும், வரலாற்றில் கருப்பு எழுத்துகளால் பதிவான இந்த கோர நிகழ்வு இத்தனை ஆண்டுகள் கடந்தாலும், நெஞ்சை கசக்கிப் பிழியத்தான் செய்கிறது. விபத்தில் மாண்டவர்களுக்கு அஞ்சலியை செலுத்துவோம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
தமிழக  வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
தமிழக வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
Australian Open 2025: ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லப்போவது யார்.? இறுதிப்போட்டியில் சபலென்கா, கீஸ்...
ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லப்போவது யார்.? இறுதிப்போட்டியில் சபலென்கா, கீஸ்...
Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?
Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”பாஜகவோட கூட்டணி இல்ல” நிதிஷ் கொடுத்த வார்னிங்! குழப்பத்தில் பாஜககாதல் திருமணம் செய்த பெண்! கத்தியுடன் வந்த குடும்பம்! காரில் கடத்திய பகீர் காட்சிLorry accident | சாலையை கடக்க முயன்ற தம்பதி அடித்து தூக்கிய சரக்கு லாரி பகீர் CCTV காட்சி! | Madurai

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
ஆயுதத் தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து: 5 பேர் பலி! மற்றவர்களின் நிலை? என்ன நடந்தது?
தமிழக  வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
தமிழக வீராங்கனைகள் மீது பஞ்சாப்பில் தாக்குதல்! காரணம் என்ன?
Australian Open 2025: ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லப்போவது யார்.? இறுதிப்போட்டியில் சபலென்கா, கீஸ்...
ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்லப்போவது யார்.? இறுதிப்போட்டியில் சபலென்கா, கீஸ்...
Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?
Vengaivayal: முடிந்தது 750 நாட்களாக தொடர்ந்த சஸ்பென்ஸ் - வேங்கை வயல் நீர் தொட்டியில் மலம் கலந்தது யார் தெரியுமா?
Seeman: சிக்கலில் சீமான்! கொத்தாக தி.மு.க.வுக்கு ஜம்ப் அடித்த 3000 தம்பிகள்! அடி மேல் அடி
Seeman: சிக்கலில் சீமான்! கொத்தாக தி.மு.க.வுக்கு ஜம்ப் அடித்த 3000 தம்பிகள்! அடி மேல் அடி
CM Stalin: ”விஜய் தான் டார்கெட்”  ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை
CM Stalin: ”விஜய் தான் டார்கெட்” ஆளுநர் ரவியை மாற்ற வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை
Tancet 2025: தொடங்கிய விண்ணப்பப் பதிவு; டான்செட் தேர்வு கட்டணம், தகுதி, விண்ணப்ப வழிமுறைகள் இதோ!
Tancet 2025: தொடங்கிய விண்ணப்பப் பதிவு; டான்செட் தேர்வு கட்டணம், தகுதி, விண்ணப்ப வழிமுறைகள் இதோ!
Donald Trump: நிறைமாத கர்ப்பிணிகள் அலறல், ட்ரம்பை கூப்பில் உட்கார வைத்த நீதிமன்ற உத்தரவு - இந்தியர்கள் ஹாப்பி
Donald Trump: நிறைமாத கர்ப்பிணிகள் அலறல், ட்ரம்பை கூப்பில் உட்கார வைத்த நீதிமன்ற உத்தரவு - இந்தியர்கள் ஹாப்பி
Embed widget