மேலும் அறிய

திருச்சியில் நேற்று ஒரே நாளில் 65,310 பேருக்கு தடுப்பூசி - இதுவரை 16,51,640 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது

’’நேற்று ஒரே நாளில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது’’

நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இலட்சக்கணக்கான மக்கள் இந்த தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு மத்திய மாநில அரசுகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தொடர்ந்து பொதுமக்களை அறிவுறுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு ஊசி மாபெரும் முகாமை ஏற்பாடு செய்து பொதுமக்களுக்கு தடுப்பூசியை சுகாதாரத்துறை சார்பில் செலுத்தி வருகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் மூன்று மாபெரும் தடுப்பூசி முகாம் நிறைவு பெற்றுள்ள நிலையில், நேற்று தமிழ்நாடு முழுவதும் 4 ஆவது மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் இதுவரை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாத நபர்கள் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதற்காக இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது

திருச்சியில் நேற்று ஒரே நாளில் 65,310 பேருக்கு தடுப்பூசி - இதுவரை 16,51,640 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது

திருச்சி  மாவட்டத்தில் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை 533 இடங்களில் நடந்த கொரோனா மெகா தடுப்பூசி முகாம் மூலம் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 65,310 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 2,40,090 நபர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை திருச்சி மாவட்டத்தில் 12,55,709 பேருக்கு முதல் கட்ட தடுப்பூசியும், 3,95,931 இரண்டாம் கட்ட தடுப்பூசியும் என மொத்தம் 16,51,640  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

திருச்சியில் நேற்று ஒரே நாளில் 65,310 பேருக்கு தடுப்பூசி - இதுவரை 16,51,640 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது

மேலும் அரசு கூறிய விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும், முக கவசங்கள் அணிந்திருக்க வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளையும், அறிவுரைகளையும் மாநில அரசு தெரிவித்துள்ளது . மேலும் அரசு எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே இந்த பெரும் தொற்றில் இருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள முடியும் என மாவட்ட நிர்வாகம் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை பலரும் இரண்டாம் தவணை தடுப்பூசி செய்து கொள்வதில் தயக்கம் காட்டுகிறார்கள், என்ற செய்தி வருத்தம் அளிக்கிறது எனவும் மக்கள் இரண்டு தடுப்பூசிகளை முழுமையாக செலுத்தி கொண்டால் மட்டுமே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாக கூடும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கு தயக்கம் காட்டக் கூடாது  என மாவட்ட ஆட்சியர் சிவராசு  தெரிவித்துள்ளார்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பிரதமரின் முதன்மை செயலாளராக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமனம்
பிரதமரின் முதன்மை செயலாளராக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமனம்
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்!- வழிமுறை இதோ!
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்!- வழிமுறை இதோ!
கண்ட்ரோல் ரூம்க்கு போன கால்.. முதல்வருக்கு கொலை மிரட்டல்.. ஜெயில் கைதியின் ஸ்கெட்ச்!
ENG vs AUS: ஸ்மித் பாய்சை சுளுக்கெடுக்கும் பென் டக்கெட்! 350 ரன்களுக்கு மேல் குவிக்குமா இங்கிலாந்து?
ENG vs AUS: ஸ்மித் பாய்சை சுளுக்கெடுக்கும் பென் டக்கெட்! 350 ரன்களுக்கு மேல் குவிக்குமா இங்கிலாந்து?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பிரதமரின் முதன்மை செயலாளராக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமனம்
பிரதமரின் முதன்மை செயலாளராக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமனம்
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்!- வழிமுறை இதோ!
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்!- வழிமுறை இதோ!
கண்ட்ரோல் ரூம்க்கு போன கால்.. முதல்வருக்கு கொலை மிரட்டல்.. ஜெயில் கைதியின் ஸ்கெட்ச்!
ENG vs AUS: ஸ்மித் பாய்சை சுளுக்கெடுக்கும் பென் டக்கெட்! 350 ரன்களுக்கு மேல் குவிக்குமா இங்கிலாந்து?
ENG vs AUS: ஸ்மித் பாய்சை சுளுக்கெடுக்கும் பென் டக்கெட்! 350 ரன்களுக்கு மேல் குவிக்குமா இங்கிலாந்து?
Watch Video: நட்ட நடுரோட்டில் கிஸ் அடிக்க வந்த ரசிகர்.. தெறித்து ஓடிய பூனம் பாண்டே
Watch Video: நட்ட நடுரோட்டில் கிஸ் அடிக்க வந்த ரசிகர்.. தெறித்து ஓடிய பூனம் பாண்டே
Trump's Tension: ட்ரம்ப்பை டென்ஷனாக்கிய பொடியன்.!?! ஆத்திரத்தில் அவர் என்ன செய்தார் தெரியுமா.?
ட்ரம்ப்பை டென்ஷனாக்கிய பொடியன்.!?! ஆத்திரத்தில் அவர் என்ன செய்தார் தெரியுமா.?
இரவு நேரத்தில் தெரியாத பெண்ணுக்கு மெசேஜ்! ஜெயிலில் போட்ட நீதிமன்றம்! டைம் என்னன்னு தெரிஞ்சிக்கோங்க!
இரவு நேரத்தில் தெரியாத பெண்ணுக்கு மெசேஜ்! ஜெயிலில் போட்ட நீதிமன்றம்! டைம் என்னன்னு தெரிஞ்சிக்கோங்க!
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
Embed widget