மேலும் அறிய

திருச்சி மாவட்டத்தில் 326 பள்ளி வாகனங்கள் ஆய்வு; டிரைவர்களுக்கு கலெக்டர் அட்வைஸ்

திருச்சி மாவட்டத்தில் 326 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. டிரைவர்கள் மிகுந்த கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்று கலெக்டர் பிரதீப் குமார் அறிவுரை வழங்கினார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளை ஏற்றிச் செல்லும் பள்ளி வாகனங்கள் அரசு விதித்துள்ள விதிமுறைகளை முறையாக பின்பற்றி இயக்கப்படுகிறதா? என்பது குறித்து கூத்தூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று ஆய்வு செய்யப்பட்டது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தொடங்கி வைத்து, ஆய்வு செய்தார். பின்பு ஆட்சியர் கூறுகையில்,  “பள்ளி வாகனங்களை ஆண்டுக்கு ஒருமுறை மாவட்ட ஆய்வுக்குழு மூலமாக ஆய்வு செய்திட தமிழக அரசு உத்தரவிட்டதின் அடிப்படையில், பள்ளி வாகனங்களின் டிரைவர்கள் முழு உடல் தகுதியுடன் கூடிய உரிமம் பெற்றிருக்க வேண்டும். டிரைவர்களுக்கு தனி கிரில் அமைத்து பள்ளி குழந்தைகள் அவர் அருகில் செல்ல முடியாத அளவில் இருக்க வேண்டும். டிரைவர்கள் கட்டாயம் சீருடை அணிந்திருக்க வேண்டும். பயணத்தின்போது கட்டாயம் உதவியாளர் இருக்க வேண்டும். பள்ளி வாகனத்தின் பின்புறம் பள்ளி நிர்வாகத்தின் தொலைபேசி எண் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் தொலைபேசி எண், போலீஸ் நிலைய தொலைபேசி எண், 1098 என்ற குழந்தைகள் பாதுகாப்பு எண் கட்டாயம் இருக்க வேண்டும். பள்ளி வாகனத்தின் படிக்கட்டுகள் அரசு நிர்ணயித்த அளவில் இருக்க வேண்டும். முதலுதவி பெட்டி, தீயணைப்பான் கருவி வாகனத்தில் கட்டாயம் இருக்க வேண்டும். அவசர கால கதவு நல்ல நிலையில் இயங்கும்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
 
திருச்சி மாவட்டத்தில் 326 பள்ளி வாகனங்கள் ஆய்வு; டிரைவர்களுக்கு கலெக்டர் அட்வைஸ்
 
மேலும் வாகனத்தில் வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்தியிருக்க வேண்டும். வாகனத்தின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் தெளிவாக தெரியும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் வாகனத்தில் பொருத்த வேண்டும். டிரைவர்கள் தீயணைப்பான் கருவிகள், முதலுதவி சிகிச்சை பெட்டகங்களை கட்டாயம் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். கட்டாயம் கண் பரிசோதனை மற்றும் மருத்துவ பரிசோதனைகளை டிரைவர்கள் செய்து கொள்ள வேண்டும். குழந்தைகளின் உயிர் என்பது விலைமதிக்க முடியாதது. எனவே டிரைவர்கள் மிகுந்த கவனத்துடனும், பொறுப்புடனும் கடமையுணர்வோடு பணியாற்ற வேண்டும்” என தெரிவித்தார்.
 
இதனை தொடர்ந்து பள்ளி வாகன டிரைவர்களுக்கு தீ விபத்து மற்றும் மீட்புமுறை குறித்து மாவட்ட தீயணைப்பு துறையின் சார்பில் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் முதலுதவி பற்றியும் தங்களது உடல் பராமரிப்பு பற்றியும் 108 ஆம்புலன்ஸ் குழு மூலம் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. முதற்கட்டமாக  326 பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 304 வாகனங்களுக்கு தகுதிச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 22 வாகனங்களில் சில குறைபாடுகளை கண்டறிந்து அதனை சரி செய்து மீண்டும் மறுஆய்வுக்குட்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள வாகனங்கள் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு ஆய்வு செய்து முடிக்கப்பட உள்ளது. இந்த ஆய்வின்போது, லால்குடி ஆர்.டி.ஓ. வைத்தியநாதன், துணை கலெக்டர் பயிற்சி ஐஸ்வர்யா, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் குமார், கணேஷ், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) சந்திரசேகர், மண்ணச்சநல்லூர் தாசில்தார் அருள்ஜோதி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், போக்குவரத்து ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கனிமொழிக்கு கடிவாளம்?
கனிமொழிக்கு கடிவாளம்? "உதயநிதியை வந்து பாருங்க" தூத்துக்குடிக்கு பறந்த ORDER
"பெண் காவலர்களுக்கு போதிய வசதி இல்லை" கொதித்தெழுந்த இபிஎஸ்.. நடந்தது என்ன?
"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chidambaram issue : முற்றிய தீட்சிதர்கள் வாக்குவாதம்! உடனே OFF செய்த நீதிபதி! OK சொன்ன அறநிலையத்துறைTemple AC Water : அது தீர்த்தம் இல்ல.. AC தண்ணி! உ.பி கோயிலில் அவலம்! ”டேய் பரமா படிடா”Rahul about Priyanka | ”அப்பாவை கொன்றவரைகட்டி அணைத்தவர் பிரியங்கா”கண்கலங்கிய ராகுல் காந்திIND vs NZ  Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கனிமொழிக்கு கடிவாளம்?
கனிமொழிக்கு கடிவாளம்? "உதயநிதியை வந்து பாருங்க" தூத்துக்குடிக்கு பறந்த ORDER
"பெண் காவலர்களுக்கு போதிய வசதி இல்லை" கொதித்தெழுந்த இபிஎஸ்.. நடந்தது என்ன?
"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
"ரொட்டியையும் பெண்களையும் களவாடும் வங்கதேச குடியேறிகள்" மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
சென்னை தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு? மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்- பள்ளி மூடல்
சென்னை தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு? மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்- பள்ளி மூடல்
US Election 2024: அமெரிக்க தேர்தல், கமலா ஹாரிஸ் Vs டிரம்ப், பெரும்பான்மை கிடைக்காவிட்டால் புதிய அதிபர் யார்?
US Election 2024: அமெரிக்க தேர்தல், கமலா ஹாரிஸ் Vs டிரம்ப், பெரும்பான்மை கிடைக்காவிட்டால் புதிய அதிபர் யார்?
”I am not Interested -  ராஜபக்சேவிற்கு எதிராக கையெழுத்து போட மறுத்த விஜய்” தமிழர் நலனை எப்படி காப்பார்?
”I am not Interested - ராஜபக்சேவிற்கு எதிராக கையெழுத்து போட மறுத்த விஜய்” தமிழர் நலனை எப்படி காப்பார்?
Embed widget