மேலும் அறிய
Advertisement
புதுக்கோட்டையில் திருமண வீட்டில் 120 சவரன் நகை கொள்ளை
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமண வீட்டில் வைக்கபட்டு இருந்த 120 பவுண் நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை பிடிக்க காவல்துறை தணிப்படை அமைப்பு.
புதுக்கோட்டை மாவட்டம் பெரியார் நகரில் டபுள் ரோட்டில் வசித்து வருபவர் மனோன்மணி (67). இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவர் சின்னதுரையை பிரிந்து வாழ்கிறார். இந்த தம்பதியினரின் 2 மகள்கள், ஒரு மகன் ஆகியோர் மனோன்மணியுடன் வசித்து வருகின்றனர். மகன் பாரதிராஜா கனடா நாட்டில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மனோன்மணியின் மகள் வெண்ணிலாவுக்கு நேற்று காரைக்குடியில் திருமணம் நடைபெற்றது. இதற்காக நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டி விட்டு அனைவரும் காரைக்குடி சென்றனர். திருமணம் முடிந்த பின்பு நேற்று மாலை மனோன்மணி அவரது குடும்பத்தினர் புதுக்கோட்டையில் உள்ள வீட்டிற்கு திரும்பினர்.
அப்போது வீட்டிற்குள் நுழைந்ததும் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் வீட்டினுள் அறைகளும், பீரோக்களும் திறந்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். பூஜை அறை உள்பட ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த நகைகள் திருட்டு போயிருந்தன. இதுகுறித்து அவர்கள் டவுன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் டவுன் துணை காவல்துறை சூப்பிரண்டு லில்லிகிரேஸ், இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் தீரன் வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடிக்கப்பட்டது. நாய் வீட்டில் இருந்து வெளியே வந்து பிரதான சாலை வரை சென்று நின்றது. அது யாரையும் பிடிக்கவில்லை.
இதனை தொடர்ந்து காவல்துறை விசாரணையின் போது வீட்டில் மகள் திருமணத்திற்காக 120 பவுன் நகைகள் வரை வைத்திருந்ததாகவும், அவை கொள்ளைபோனதாகவும் மனோன்மணி தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு நகைகளை எடுத்து செல்லவில்லையா? என அவரிடம் காவல்துறையினர் கேள்வி எழுப்பினர். அப்போது திருமணத்தின் போது கவரிங் நகைகள் அணிந்திருந்ததாகவும், தங்க நகைகள் வீட்டில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அவரது குடும்பத்தினர் கூறி உள்ளனர். தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்றனரா? என காவல்துறை விசாரித்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் மனோன்மணியின் குடும்பத்தினருக்கு நன்கு தெரிந்த நபர்களே இந்த கொள்ளையில் ஈடுபட்டனரா ? எனவும் விசாரிக்கின்றனர். மேலும் கொள்ளைபோன நகைகளின் விவரங்களை மனோன்மணி குடும்பத்தினரிடம் காவல்துறையினர் கேட்டுள்ளனர். இது தொடர்பாக புகார் மனு பெற்றபின் டவுன் காவல்துறை வழக்குப்பதிவு செய்ய உள்ளனர்.
மேலும் வீட்டின் முன்பு வாழைத்தார்கள், பந்தல் போடப்பட்டு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில் அந்த காட்சிகள் பதிவாகக்கூடிய கருவியை மர்மநபர்கள் கழற்றி சென்றனர். இதனால் மர்மநபர்களை அடையாளம் காணுவதில் காவல்துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நகைகள் கொள்ளைபோன வீட்டின் அருகே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண வீட்டில் 120 பவுன் நகைகள் கொள்ளை போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மர்ம நபர்களை விரைந்து கைது செய்ய காவல்துறையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
கிரிக்கெட்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion