மேலும் அறிய

திருச்சியில் 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல், 5 பேர் கைது - போலீஸ் நடவடிக்கை

திருச்சியில் ரேஷன் அரிசியை கடத்தி விற்க முயன்றதாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி தென்னூர் சவேரியார் கோவில் தெரு அருகே வாகனங்களில் சிலர் ரேஷன் அரிசி பதுக்கி வைத்துள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை இயக்குனர் ஆபாஷ் குமார் உத்தரவின்பேரில் திருச்சி மண்டல குடிமை பொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா அறிவுறுத்தலின்படி திருச்சி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சுதர்சன் மற்றும் இன்ஸ்பெக்டர் கோபிநாத், சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பியோட முயன்றனர். இருப்பினும் 5 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் தென்னூர் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த மதியழகன், பொன்மலையை சேர்ந்த சேக் முக்தார், சீனிவாசன் நகரை சேர்ந்த முத்துக்குமார், அரியமங்கலத்தை சேர்ந்த ஈஸ்வரன், அண்ணா நகரை சேர்ந்த ஆறுமுகம் என்பது தெரியவந்தது. மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனங்களை சோதனை செய்தபோது அதில் 11 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

திருச்சியில் 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல், 5 பேர் கைது -  போலீஸ் நடவடிக்கை

இதனை தொடர்ந்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து மதியழகன் உள்பட 5 பேரையும் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 சரக்கு வாகனங்கள், ஒரு மினி லாரி மற்றும் 11 டன் ரேஷன் அரிசி, ரூ.82 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய பாபு என்கிற சாதிக் பாட்ஷாவை வலைவீசி தேடி வருகின்றனர். இதேபோல் சமயபுரம் அருகே ஒரு காரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த காரை சோதனை செய்தபோது 27 மூட்டைகளில் தலா 50 கிலோ வீதம் மொத்தம் 1,350 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில்.. தமிழ்நாடு அரசு மக்களுக்காக ரேஷன் கடைகளில் அரிசிகளை வழங்கி வருகிறது. ஆனால் சில இடங்களில் சிலர் தவறாக பயன்படுத்தி ரேஷன் அரிசிகலை கள்ளசந்தையில் வாங்கி வெளியே விற்பனை செய்து வருய்கின்றனர். இவ்வாறு தவறான செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Delhi Exit Poll 2025: டெல்லி தேர்தல் பிந்தைய கணிப்பு: லீடில் பாஜக! ஷாக்கில் ஆம் அத்மி, காங்கிரஸ்
Delhi Exit Poll 2025: டெல்லி தேர்தல் பிந்தைய கணிப்பு: லீடில் பாஜக! ஷாக்கில் ஆம் அத்மி, காங்கிரஸ்
"மு.க.ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேளுங்க" கிருஷ்ணகிரி விவகாரத்தில் கொதித்தெழுந்த இபிஎஸ்!
Thaipusam 2025: கோலாகலமாக கொண்டாடப்படும் தைப்பூசம்.. பழனியில் தேரோட்டம் எப்போது?
கோலாகலமாக கொண்டாடப்படும் தைப்பூசம்.. பழனியில் தேரோட்டம் எப்போது?
திருப்பரங்குன்றம் சரித்திரத்தை சொன்ன அண்ணாமலை... அடுக்கடுக்காக வைத்த கேள்வி
திருப்பரங்குன்றம் சரித்திரத்தை சொன்ன அண்ணாமலை... அடுக்கடுக்காக வைத்த கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi apology: ”என்னை மன்னிச்சிடுங்க” THUGLIFE செய்த ராகுல்! மோடி கொடுத்த ரியாக்‌ஷன்Rahul Gandhi Parliament | அல்வாவை வைத்து நக்கல்! நிர்மலாவை சீண்டிய ராகுல்! SILENT MODE-ல் மோடிChennai MTC Bus : “BAD..BAD..BAD..BOY...Modi visit US: வரியை உயர்த்திய ட்ரம்ப்! அலறும் உலக நாடுகள்! அமெரிக்கா புறப்படும் மோடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delhi Exit Poll 2025: டெல்லி தேர்தல் பிந்தைய கணிப்பு: லீடில் பாஜக! ஷாக்கில் ஆம் அத்மி, காங்கிரஸ்
Delhi Exit Poll 2025: டெல்லி தேர்தல் பிந்தைய கணிப்பு: லீடில் பாஜக! ஷாக்கில் ஆம் அத்மி, காங்கிரஸ்
"மு.க.ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேளுங்க" கிருஷ்ணகிரி விவகாரத்தில் கொதித்தெழுந்த இபிஎஸ்!
Thaipusam 2025: கோலாகலமாக கொண்டாடப்படும் தைப்பூசம்.. பழனியில் தேரோட்டம் எப்போது?
கோலாகலமாக கொண்டாடப்படும் தைப்பூசம்.. பழனியில் தேரோட்டம் எப்போது?
திருப்பரங்குன்றம் சரித்திரத்தை சொன்ன அண்ணாமலை... அடுக்கடுக்காக வைத்த கேள்வி
திருப்பரங்குன்றம் சரித்திரத்தை சொன்ன அண்ணாமலை... அடுக்கடுக்காக வைத்த கேள்வி
Tirupati Temple:திருமலை பணியாளர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும் - திருப்பதி தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு!
Tirupati Temple:திருமலை பணியாளர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும் - திருப்பதி தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு!
தேர்வர்களே.. பிப்.14 முதல் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்- பெறுவது எப்படி?
தேர்வர்களே.. பிப்.14 முதல் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்- பெறுவது எப்படி?
"இருக்குற இடம் தெரியாம போய்டுவீங்க.." அமைச்சர் ரகுபதிக்கு அண்ணாமலை பகிரங்க எச்சரிக்கை!
Illegal Indian Immigrants: இந்தியா வந்தடைந்த 205 சட்டவிரோத குடியேறிகள்! டிரம்ப்புக்கு இந்தியா சொல்வது என்ன?
Illegal Indian Immigrants: இந்தியா வந்தடைந்த 205 சட்டவிரோத குடியேறிகள்! டிரம்ப்புக்கு இந்தியா சொல்வது என்ன?
Embed widget