Tasmac: திருவண்ணாமலை மாவட்ட குடும்ப பெண்களுக்கு நற்செய்தி; இந்த தேதில டாஸ்மாக் கடைக்கு லீவு
மிலாடி நபியை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை (Tiruvannamalai news) மிலாடி நபியை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் விடுத்துள்ள செய்திகுறிப்பில்...
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு சில்லறை மதுபானக் கடைகள் (டாஸ்மாக் கடைகள்), முன்னாள் இராணுவ வீரர்களுக்கான அங்காடி (FLAA), அரசு மற்றும் தனியார் மதுபானக்கூடங்கள் (FS) ஆகியவற்றை எதிரவரும் 17.09.2024 (செவ்வாய் கிழமை) மிலாடி நபி நாளன்று விற்பனையின்றி "DRY DAY ஆக அனுசரித்து மேற்படி மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்களை முடிவைக்க வேண்டும் ஆயத்திரவைத்துறை ஆணையர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுவிலக்கு மற்றும் எனவே, எதிர்வரும் 17.09.2024 (செவ்வாய் கிழமை) மிலாடி நபி நாளன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு சில்லறை மதுபானக்கடைகள் (டாஸ்மாக் கடைகள்), முன்னாள் இராணுவவீரர்களுக்கான அங்காடி (F.4A), அரசு மற்றும் தவியார் மதுபானக்கூடங்கள் (FL) விற்பனையின்றி "DRY DAY ஆக அனுசரித்து மூடப்படவேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டுள்ளதையடுத்து மேற்படி அனைத்து சில்லறை அரசு மதுபானக்கடைகள் (டாஸ்மாக் கடைகள்). முன்னாள் இராணுவவீரர்களுக்கான அங்காடி (FL4A). அரசு மற்றும் தனியார் மதுபானக்கூடங்கள் (FR3) அனைத்தும் விற்பனையின்றி (DRY DAY) மூடிவைக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்கள்.