திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் குளங்கள் ஆக்கிரமிப்பு கண்டறியும் பணி - நேரில் பார்வையிட்ட கலெக்டர்
திருவண்ணாமலையில் உள்ள குளங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதா என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்து சென்னை உயர் நீதிமன்றதிற்கு இதுகுறித்து தாக்கல் செய்யவுள்ளார்.
திருவண்ணாமலையில் உள்ள 139 குளங்களில் 32 குளங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. குளங்களை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றம் பொதுநல மனு ஒன்றை வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்தார். இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அடங்கிய அமரவும் முன்பாக கடந்த மூன்றாம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் குளங்கள் ஆக்கிரமிப்பு குறித்து நில நிர்வாக துறை கமிஷனர், பொதுப்பணித்துறை செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் ஆகியோர் தனித்தனியாக நேரில் சென்று குளங்களை ஆய்வு செய்து தனித்தனி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து குளங்கள் ஆய்வு செய்யும் பணி குறித்து வருவாய்த்துறை அறநிலையத்துறை உள்ளிட்ட பல துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டங்களை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நடத்தினார்.
மேலும் குளங்களை ஆய்வு செய்து அளவிடும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், வருவாய்த்துறை ஊரக வளர்ச்சி துறை மற்றும் அறநிலையத்துறை அலுவலர் உடன் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன்படி கிரிவலப் பாதை காஞ்சி ரோட்டில் உள்ள எல்லை குளத்தை முதலில் ஆய்வு செய்து குளத்தின் பரப்பளவு குறித்து விசாரித்தார். அப்போது குளம் கிட்டத்தட்ட ஒரு ஏக்கர் பரப்பில் இருப்பதாக வருவாய்த்துறை ஆவணத்தில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அங்கு சிறிய அளவில் மட்டுமே குளம் இருக்கிறது. இதனால் குளத்தைச் சுற்றிலும் ஆக்கிரமிப்பு இருப்பது தெரிய வந்ததை, தொடர்ந்து குபேர கோயில் தீர்த்த குளம், ஆடையூர் தீர்த்த குளம், அடி அண்ணாமலை, மாணிக்கவாசகர் கோயில் அருகே உள்ள தீர்த்த குளம்,
மேலும் வாயுலிங்கம் பின்புறத்தில் உள்ள குளத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்யும்போது குளம் சிறியளவில் உள்ளதையும் குளத்துடைய இடத்தில் சாலை மற்றும் வீடுகள் கட்டி ஆக்கரமிப்பு செய்யப்பட்டுள்ளது ஆகியவற்றையும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார். உயர்நிதிமன்ற உத்தரவை தொடர்ந்து கிரிவலப் பாதையில் உள்ள குளங்களை கணக்கிடும் பணிகளும் ஆக்கிரமிப்புகள் உள்ளதையும் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிப்பதற்கான பணிகள் இப்போது நடைபெற்று வருகிறது. அரசு அறிக்கை சமர்ப்பித்த பின்னர் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.