மேலும் அறிய

திருவண்ணாமலையில் 10 ஆயிரம் பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா விநியோகம்

திருவண்ணாமலையில் 72 கோடி மதிப்பில் 10 ஆயிரம் பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாவை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.

திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே  பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் வீட்டுமனை பட்டா, மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மோட்டார் வாகனத்தை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி  மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் நடைப்பெற்றது.

பொதுப்பணித்துறை துறை அமைச்சர் எ.வ.வேலு  பேசியதாவது, தி.மு.க. அரசு திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதி வாரியாக திருவண்ணாமலையில் 865 பயனாளிகளுக்கும் கீ,ழ்பென்னாத்தூரில் 1242 பயனாளிகளுக்கும், செங்கத்தில் 1182 பயனாளிகளுக்கும், கலசபாக்கத்தில் 1032 பயனாளிகளுக்கும், போளூரில் 1457 பயனாளிகளுக்கும், ஆரணியில் 1271 பயணிகளுக்கும், செய்யாரில் 1530 பயணிகளுக்கும், வந்தவாசியில் 1437 பயனாளிகளுக்கும் ஆகமொத்தம் 10 ஆயிரத்து 016 பயனாளிகளுக்கு 72 கோடியே 74 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வீட்டுமனை பட்டாவதற்கான ஆணை வழங்கப்பட்டது.

திருவண்ணாமலையில் 10 ஆயிரம் பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா விநியோகம்

திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 11 மாற்றுத்திறனாளிகளுக்கு 10 லட்சத்தி 40 ஆயிரம் மதிப்பில் மூன்று சக்கர மோட்டார் வாகனத்தையும் பள்ளி கல்விதுறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பொறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் 9862 மாணவர்களுக்கும், 11769 மாணவிகளுக்கும் ஆக மொத்தம் 21631 மாணவ, மாணவிகளுக்கு 10 கோடியே 43 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மிதிவண்டி வழங்ப்பட்டது.

மேலும் இந்த பட்டாவழங்கும் நிகழ்ச்சி வரலாறு சிறப்புமிக்க நிகழ்வு கி.பி 1002- சோழப் பேரரசன் இராஜராஜ சோழன் ஆட்சியில் தான் முதல் முறையாக நிலங்கள் அளந்துக் கணக்கிடப்பட்டன. நிலங்களை அளந்து உழவர்களுக்குப் பட்டயங்கள் வழங்கப்பட்டன. மதுரை நாயக்கர்கள் ஆட்சியில் கிராமங்களில் வரி வசூல் செய்ய மணியக்காரர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஆங்கிலேயர் ஆட்சியின் போது “பட்டயம்” என்பதை
ஆங்கிலேயருக்கு சரியாக உச்சரிக்க வராததால் “பட்டா” என்ற வார்த்தை வந்தது. 1800- ஆம் ஆண்டில் நிலங்களைப்பதிவு செய்வது குறித்து சட்டம் கொண்டுவரப்பட்டது.

இதனை தொடர்ந்து நிலம் செல்வத்தின் தாய் உழைப்பு அதன் தந்தை என்று பொருளாதார அறிஞர் ”வில்லியம் பெட்டி” கூறினார். இயற்கையின் கொடையான நிலமும் மனிதனின் உழைப்பும் சேரும் பொழுதுதான் உற்பத்தி செய்யப்பட்ட செல்வம் பிறக்கிறது. ஆகவே செல்வத்தின் முக்கியமான கண்ணாக நிலம் விளங்குகிறது.

திருவண்ணாமலையில் 10 ஆயிரம் பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா விநியோகம்

1971 குடியிருப்போர் மனையை குடியிருப்போருக்கே சொந்தமாக்கி சட்டம் செய்தவர் கலைஞர் தான். 1972 நகர் பகுதிகளில் நடுத்தர மக்களுக்கு சொந்த வீடுகள் கட்ட புதிய குடியிருப்பு நகரப் பகுதியில் உருவாக்கியவர் கலைஞர் தான். 1972ல் ஏழை எளிய மக்கள் வாழ குடிசை மாற்று வாரியம் கொண்டு வந்தவர் கலைஞர்  (15.02.1974) இந்தியாவிலேயே முதன்முறையாக ஆதிதிராவிடர் வீட்டு வசதிக்கழகம் தொடங்கப்பட்டு இலவச கான்கிரீட் வீடுகள் கட்டி தந்தவர் கலைஞர் தான். மனிதனுக்கு அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, இருக்க இடம் தமிழர்கள் இருப்பிடம் என்கிற அடிப்படைத் தேவையை எப்போதும் உணர்வுப் பூர்வமாகப் பார்ப்பவர்கள். கால் காணி நிலத்தைக் கூட பாட்டன் சொத்து, அப்பன் சொத்தை அடுத்தவர்களுக்கு விற்று விடாமல் எவ்வளவு பண நெருக்கடி வந்தாலும் கையில் வைத்திருப்பது நம் இயல்பு.  மக்களின் நாடித் துடிப்பினை நன்கு அறிந்த அரசு இந்த அரசு அதனால் தான் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான இருப்பிடத்தை கட்டிக்கொள்ள நிலம் வழங்கி உதவுகிறது என பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி செய்யார்ரூபவ் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலர்கள் பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget