மேலும் அறிய

வேலைவாய்ப்பு அதிகரிக்க இதை செய்ய வேண்டும்: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம் பின்தங்கியுள்ளதால் வேலைவாய்ப்பு அதிகரிக்க வேளாண் சார்ந்த நிறுவங்கள் தொடங்கப்படவேண்டும் தொழில் துறை கூட்டமைப்பு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆலோசனை

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று  இந்திய தொழில்துறை கூட்டமைப்பு நிறுவனம் (CII) சார்பாக மாவட்டத்தில் உள்ள தொழில்துறைகளின் வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன்  தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர்  தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் வளர்ச்சி அடைய செய்ய வேண்டு மெனவும் குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள அனைத்து இளைஞர்களும் வேலைவாய்ப்பை பெற்று தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டுமென்பதற்காகவும், பல்வேறு சிறப்பு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இன்றையதினம் திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு நிறுவனம் (CII) சார்பாக தொழில்துறைகளின் வளர்ச்சியை மேம்படுத்துவற்காக மேற்கொள்ளப்படும் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

வேலைவாய்ப்பு அதிகரிக்க இதை செய்ய வேண்டும்: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலையில்  வேலைவாய்ப்பை உருவாக்கி தரும் வகையில் தொழில் நிறுவனங்கள் அமைந்தால் நன்றாக இருக்கும்

இக்கூட்டத்திற்கு வருகை தந்துள்ள இந்திய தொழில்துறை கூட்டமைப்பு நிறுவனத்தின் சென்னை மண்டல தலைவர் துணைத்தலைவர் மற்றும் குழுத்தலைவர் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்களுக்கும் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். வேளாண்மையை முதன்மையாக கொண்ட ஊரக பகுதிகள் நிறைந்த மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டம் திகழ்கிறது. இம்மாவட்டத்தில் பட்டய மற்றும் பட்டப்படிப்புக்கான கல்வி நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. அவ்வாறு கல்வி நிறுவனங்களில் பயின்ற இளைஞர்களுக்கு இந்த பகுதிகளிலேயே வேலைவாய்ப்பை உருவாக்கி தரும் வகையில் தொழில் நிறுவனங்கள் அமைந்தால் நன்றாக இருக்கும். வேளாண் தொடர்பான தொழில் நிறுவனங்கள் இப்பகுதியில் அமைக்கும் பட்சத்தில் பின்தங்கியுள்ள இப்பகுதியில் உள்ள வேலைவாய்ப்பற்ற பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள அனைத்து மக்களும் வேலைவாய்ப்பு பெற்று தங்கள் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான வாய்ப்பாக அமையும்.

வேலைவாய்ப்பு அதிகரிக்க இதை செய்ய வேண்டும்: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்

இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் 

இலட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்பு கிட்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்கள். தொடர்ந்து இக்கூட்டத்தில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு நிறுவனம் (CII) சார்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவது குறித்து தொழில் நிறுவனங்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு அரசு திட்டங்கள் மூலமாக வங்கி கடனுதவிகள் வழங்கும் அரசு துறைகளான மாவட்ட தொழில் மையம், சிட்கோ, டிக், மாவட்ட முன்னோடி வங்கி தாட்கோ மற்றும் மின் வாரியம் சிப்காட் உள்ளிட்ட அரசு துறைச்சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில்  மிலன் வாஹி (CII) தலைவர் சென்னை மண்டலம் மற்றும் நிர்வாக இயக்குநர் லோட்டே இந்தியா கார்ப்பரேஷன் லிமிடெட் அஜித் சோர்டியா ஊஐஐ துணைத் தலைவர் சென்னை மண்டலம் மற்றும் நிர்வாக இயக்குநர் ஒலிம்பியா , இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆர். வி.சாரி  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
Delhi New CM: டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Suchitra vs Vairamuthu |’’நீ என்ன PSYCHIATRIST-ஆ?நோபல் பரிசு கொடுக்கலாமா?’’கடுப்பான சுசித்ராTirupati Laddu History | Mysuru Palace Elephant Angry | Barriers-யை உடைத்து எறிந்த யானை மைசூரில் அலறியோடிய மக்கள் பதறிய பாகன்Rahul on laddu | லட்டில் பன்றி கொழுப்பா? கொதித்தெழுந்த  ராகுல்! ஜெகன், நாயுடுவுக்கு எச்சரிக்கை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம்.. யார் இவர்?
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை தொடங்கும் ஏ.ஆர்.ரஹ்மான்
Delhi New CM: டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
டெல்லி அரசியலில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சராக பதவியேற்ற அதிஷி!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
ஆபிஸ்ல 8 மணி நேரத்திற்கு மேல வேலை செய்ய சொல்றாங்களா? ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க பாஸ்!
மதுரை: பவுடர் பால் குடித்த 2 மாத குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு!
மதுரை: பவுடர் பால் குடித்த 2 மாத குழந்தை மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு!
Tvk Vijay maanadu: தவெக முதல் மாநாடு... மீண்டும் அனுமதி கேட்டு எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்த புஸ்ஸி ஆனந்த்
Tvk Vijay maanadu: தவெக முதல் மாநாடு... மீண்டும் அனுமதி கேட்டு எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்த புஸ்ஸி ஆனந்த்
இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு.. வாக்கு எண்ணிக்கை இன்றே தொடக்கம்!
இலங்கை அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு நிறைவு.. வாக்கு எண்ணிக்கை இன்றே தொடக்கம்!
Breaking News LIVE: தமிழ்நாடு மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது
Breaking News LIVE: தமிழ்நாடு மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது
Embed widget