மேலும் அறிய

விரைவில் தூத்துக்குடி- கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து

தூத்துக்குடி-கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க அனுமதி அளித்து கடிதம் வழங்கி உள்ளோம். இருநாடுகளுக்கு இடையேயான போக்குவரத்து என்பதால் இரு நாடுகளிடமும் அனுமதி பெற வேண்டும்.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் லட்சினையை(லோகோ) மாற்றுவதற்கான துறைமுகம் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது. இதற்காக அகில இந்திய அளவில் லோகோ வரைந்து அனுப்பும் போட்டி நடந்தது. இதன் மூலம் புதிய லோகோ உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த லோகோ அறிமுக நிகழ்ச்சி நேற்று காலை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர்(பொறுப்பு) பிமல்குமார் ஜா தலைமை தாங்கினார்.

விரைவில் தூத்துக்குடி- கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து

சிறப்பு அழைப்பாளராக மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சக செயலாளர் தா.கி.ராமச்சந்திரன் கலந்து கொண்டு லோகோவை அறிமுகப்படுத்தி பேசினார். பெருமை அப்போது, புதிய லோகோவை அறிமுகம் செய்வது பெருமையாக இருக்கிறது. இந்த லோகோவை உருவாக்க ஓராண்டாக முயற்சி செய்து வந்தோம். அந்த கனவு தற்போது நிறைவேறி இருக்கிறது. இந்த லோகோவில் உள்ள தத்துவங்கள் நன்றாக இருக்கிறது. இதற்காக ஒரு போட்டி நடத்தப்பட்டு, அதன் மூலம் லோகோவுக்கான கரு கிடைத்தது. இந்த லோகோ எளிமையாகவும், நவீனமாகவும் உள்ளது. நமக்கு எப்போதும் தொடர்பு இருந்து கொண்டே இருக்கும். தூத்துக்குடி துறைமுகம் உலகின் சிறந்த துறைமுகமாக மாறும் என்றார்.

விரைவில் தூத்துக்குடி- கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து

மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சக செயலாளர் தா.கி.ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறிய அவர், "தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் புதிய லோகோ அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த லோகோவுக்காக நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற ராஜேந்திரன் ஆர்.ரஞ்சனி என்பவருக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது. வ.உ.சி துறைமுகம் உலகின் முக்கியமான துறைமுகமாக திகழ்வதற்கு இது ஒரு முக்கியமான பணியாக இருக்கும். அகில இந்திய அளவில் சாகர்மாலா திட்டத்தின் மூலம் சுமார் ரூ.5½ லட்சம் கோடி பணிகள் நடந்து வருகின்றன. இந்த திட்டத்தில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் மட்டும் சுமார் ரூ.2 ஆயிரம் கோடிக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி துறைமுகத்தின் 9-வது கப்பல் தளம் சரக்கு பெட்டக முனையமாக மாற்றும் பணி நடந்து வருகிறது. ரூ.7 ஆயிரம் கோடி செலவில் வெளித்துறைமுகம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தியா முழுவதும் அனைத்து துறைமுகங்களிலும் நல்ல வளர்ச்சி உள்ளது. ஒவ்வொரு துறைமுகத்தில் ஒவ்வொரு விதமான பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி அதிகமாக உள்ளன. மராட்டிய மாநிலத்தில் வாதுவான் என்ற பகுதியில் புதிய துறைமுகம் தொடங்கப்பட உள்ளது. அனைத்து துறைமுகத்திலும், அந்த பகுதிக்கு ஏற்றவாறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விரைவில் தூத்துக்குடி- கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து

தூத்துக்குடி துறைமுகத்தை பொறுத்தவரை திரவ ஹைட்ரஜன் ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி, குஜராத் துறைமுக பகுதிகளில் கடலில் காற்றாலைகள் அமைப்பதற்கான வாய்ப்பு உள்ள இடமாக இருக்கிறது. ஆகையால் இரண்டு பகுதியிலும் காற்றாலைகள் அமைக்கப்பட உள்ளன. தூத்துக்குடியில் முதல் கட்டமாக 500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் காற்றாலைகள் அமைக்கப்பட உள்ளன. இதில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை தமிழ்நாடு மின்சாரவாரியம் வாங்கிக் கொள்ள சம்மதம் தெரிவித்து உள்ளனர். இந்த திட்டத்துக்கு விரைவில் டெண்டர் விடப்பட உள்ளது.

விரைவில் தூத்துக்குடி- கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து

கொச்சி, மும்பை, கோவா, விசாகப்பட்டினம், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் சுற்றுலா முனையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த துறைமுகங்களில் இருந்து சுற்றுலா கப்பல்கள் வந்து செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடற்கரை, சர்வதேச கடல் பகுதி மற்றும் ஆறு ஆகிய நீர் வழித்தடங்களை இணைக்கும் வகையில் நீர்வழி போக்குவரத்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி-கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்காக 2 கப்பல் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர். இதனை ஆய்வு செய்து, கப்பல் போக்குவரத்து தொடங்க அனுமதி அளித்து கடிதம் வழங்கி உள்ளோம். இது இருநாடுகளுக்கு இடையேயான போக்குவரத்து என்பதால் இரு நாடுகளிடமும் அனுமதி பெற வேண்டும். இதனால் அந்த நிறுவனத்தினர் இலங்கையில் அனுமதி பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது 300 பயணிகளை ஏற்றி செல்லும் வகையிலான கப்பலை இயக்க உள்ளனர். இலங்கையில் இருந்து அனுமதி கிடைத்த உடன் விரைவில் இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
Embed widget