மேலும் அறிய

அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் 100% தேர்ச்சி பெற்றுவிட்டார் - அமைச்சர் சேகர்பாபு

திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து கோயிலுக்கு நான்கு கார் இயக்கப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் இலவசமாக பயணம் செய்யலாம்.

அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் செயல்பாடு 100% திருப்திகரமாக உள்ளது என்றும் தலைவர் ஸ்டாலினின் பாராட்டுகளை பெற்று அவரது எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்வர் எனவும் அமைச்சர் சேகர்பாபு பேசினார்.

அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் 100% தேர்ச்சி பெற்றுவிட்டார் - அமைச்சர் சேகர்பாபு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.300 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் திருச்செந்தூர் கோயிலில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். சரவண பொய்கையில் அமைக்கப்பட்டு வரும் யானை குளியல் தொட்டியை அமைச்சர் ஆய்வு செய்தார். பின்னர் திருச்செந்தூர் கோயிலுக்குள் சென்று சுவாமி மூலவர், சுவாமி சண்முகரை தரிசனம் செய்தார். பின்னர் தங்கத்தேர் பழுதுபார்க்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் 100% தேர்ச்சி பெற்றுவிட்டார் - அமைச்சர் சேகர்பாபு

ஆறுபடை வீடுகளுள் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி கோயிலில் HCL நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி மதிப்பில் கட்டமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக 80 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி துணை மின் நிலையம் கோயில் நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து மேலும் 80 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டமைப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளது.

அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் 100% தேர்ச்சி பெற்றுவிட்டார் - அமைச்சர் சேகர்பாபு

கோவில் சார்பில் 100 கோடி மதிப்பில் 1.50 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டமைப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதில் பிப்ரவரி 3 தேதி 16 கோடி மதிப்பில் கோவில் சன்னிதானம் அமைந்துள்ள இடத்தில் உள்கட்டமைப்பு திருப்பணிகள் தொடங்கப்பட உள்ளது. இரண்டு ஆண்டுக்குள் இந்தப் பணிகள் நிறைவு பெற்று கோவில் கும்பாபிஷேகத்துடன் அனைத்து பெருந்திட்ட வளாகப் பணிகளும் நிறைவடையும் என தெரிவித்தார்.

அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் 100% தேர்ச்சி பெற்றுவிட்டார் - அமைச்சர் சேகர்பாபு

நீதிமன்ற உத்தரவுபடி பக்தர்களின் செல்போன் பாதுகாப்பு அறை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று தெரிவித்த அவர், திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்திலிருந்து கோவிலுக்கு நான்கு கார் இயக்கப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவித்த அவர்,புதியதாக கட்டப்பட்டு வரும் பக்தர்கள் தங்கும் விடுதியில் 100 அறைகள், 20 ஓட்டுநர்கள் தங்கும் அறைகளும் கட்டி முடிக்கப்பட்டு அக்டோபர் நவம்பர் மாதத்திற்குள் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என உறுதி அளித்த அவர்,திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களின் அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றி நல்ல நிலைமையில் இருக்கக்கூடிய வகையில் திராவிட மாடல் அரசு உருவாக்கும் என்பதில் எள்ளளவு கூட சந்தேகம் இல்லை என தெரிவித்தார்.

அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் 100% தேர்ச்சி பெற்றுவிட்டார் - அமைச்சர் சேகர்பாபு

மேலும் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுவிட்டார். அவரது செயல்பாடு திருப்தியாக உள்ளது.இதுவரை அவருக்கு கொடுக்கப்பட்ட அனைத்து பணிகளிலும் சிறப்பாக செயல்பட்டு தலைவர் ஸ்டாலினின் பாராட்டுகளைப் பெற்று முன்னேறி வருகிறார் என பாராட்டிய அவர், சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் புத்தாண்டு அன்று பக்தர்கள் உரிய பாதுகாப்புடன் அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
சிவப்பு சூட்கேஸில் கிடந்த இளம்பெண்ணின் உடல்.. பதறிய மக்கள்.. நெடுஞ்சாலையில் பரபரப்பு!
சிவப்பு சூட்கேஸில் கிடந்த இளம்பெண்ணின் உடல்.. பதறிய மக்கள்.. நெடுஞ்சாலையில் பரபரப்பு!
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
ஆந்திராவில் முகாமிட்ட தமிழக போலீஸ்: ஐதராபாத்தில் பதுங்கி இருக்கும் நடிகை கஸ்தூரி! பின்னணியில் தயாரிப்பாளர்! 
Embed widget