மேலும் அறிய

பல் பிடுங்கிய விவகாரம்: ஏஎஸ்பி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.. முதல் தகவல் அறிக்கையில் இருப்பது என்ன?

முதல் நாளில் ஆதரான 14 பேரில் 11 பேரிடம் விசாரணை நடைபெற்று முடிந்தது. காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 12 மணி வரை 14 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. 

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பாளையங்கோட்டையை சேர்ந்த  சுபாஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது குற்ற எண் 01/2023படி 323, 324,326, 506/1 ஆகிய 4 பிரிவுகள்ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர் கொடுத்த புகார் மனுவில் ஏஎஸ்பி விசாரணைக்கு அழைத்து சென்ற மற்ற காவலர்கள் உதவியுடன்  எனது மற்றும் நண்பர்களின் பற்களை கொடூரமான முறையில் பிடுங்கி சித்தரவை செய்ததாக குறிப்பிட்டு உள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கு குறித்த விசாரணைக்காக, புகார் மனு கொடுத்த இளைஞர் சுபாஷ் மாவட்ட குற்றப்பிரிவு காவல் அலுவலகத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் பொன்ரகு முன்னிலையில் ஆஜராகி உள்ளார். 

முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அமைத்த அமுதா IAS தலைமையிலான உயர்மட்ட குழு விசாரணை இரண்டாம் கட்டம் 17 மற்றும் 18  திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் நடைபெற்றது. அதன்படி திங்கட்கிழமை நடைபெற்று முடிந்துள்ள இரண்டாம் கட்ட விசாரணையின் முதல் நாளில் சூர்யாவின் தாத்தா பூதப்பாண்டி, இரண்டு சிறார்கள், அவர்களது தாயார் ராஜேஸ்வரி மற்றும் தனலட்சுமி, ராஜேஸ்வரியின் கணவர் கண்ணன், கணேசன், அருண்குமார் என 8 பேர் மதியம் வரை ஆஜராகினர். மதியத்திற்கு மேல் வழக்கறிஞர் மகராஜன் உடன்  செல்லப்பா, E.மாரியப்பன், சுபாஷ், M.மாரியப்பன் இசக்கிமுத்து, வேத நாராயணன் என ஆறு பேர் விசாரணைக்கு வந்தனர். இதனால் இரண்டாம் கட்ட விசாரணையும் முதல் நாளில் 14 பேர் ஆஜராகி இருந்தனர். 

பல் பிடுங்கிய விவகாரம்: ஏஎஸ்பி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.. முதல் தகவல் அறிக்கையில் இருப்பது என்ன?

இதில் முதலில் வந்த 8 சாட்சிகளிடம் விசாரணை முடிய இரவானது. இதனை தொடர்ந்தும் நடைபெற்ற விசாரணையில் மகாராஜன் உடன் வந்த ஆறு பேரில் மூன்று பேர் விசாரணைக்கு ஆஜராகி சாட்சியம் அளித்தனர். இதன்படி முதல் நாளில் ஆதரான 14 பேரில் 11 பேரிடம் விசாரணை நடைபெற்று முடிந்தது. காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 12 மணி வரை 14 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இதனை அடுத்து காத்திருக்கும் மூன்று பேருக்கு செவ்வாய்கிழமை  விசாரணை நடைபெற்றது. முன்னதாக சார் ஆட்சியர் விசாரணையில் பிறழ் சாட்சியாக மாறிய சூர்யா வீடியோ கால் மூலம் ஆஜராகி காவல்துறையால் பாதிக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்தார். மொத்தமாக 15 பேரிடம் விசாரணையானது நடைபெற்ற நிலையில் விசாரணையை முடித்த அமுதா ஐஏஎஸ் மற்றும் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் ஆகிய இருவரும் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் ஆகிய காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
திருநெல்வேலி, தென்காசியில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
திருநெல்வேலி, தென்காசியில் நாளை மின்தடை! எந்தெந்த பகுதிகள் பாதிப்பு?
திருச்செந்தூர் ரயில் சேவை ரத்து, மாற்றம்: ஜூலை பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
திருச்செந்தூர் ரயில் சேவை ரத்து, மாற்றம்: ஜூலை பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: திருநெல்வேலி–திருச்செந்தூர் வழித்தடத்தில் 6 நாட்கள் ரயில்கள் ரத்து!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: திருநெல்வேலி–திருச்செந்தூர் வழித்தடத்தில் 6 நாட்கள் ரயில்கள் ரத்து!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget