மேலும் அறிய

ஒரே குடும்பத்தில் மூவர் அடுத்தடுத்து உயிரிழப்பு..! சோகத்தில் மூழ்கிய கிராமம்..! நெல்லையில் நடந்தது என்ன?

மகன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் அவரது தாய் பகவதி மற்றும் சகோதரி மாலா இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

நெல்லை மாவட்டம் தாழையூத்து அடுத்த கீழ தென்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். வயது 50, இவர் கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர்.  இவரது தாய் பகவதி, கிருஷ்ணன் வீடு அருகே தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். இந்த நிலையில் கிருஷ்ணனின் தங்கை மாலா திருமணமாகி கணவரை பிரிந்து தனது தாய் பகவதியுடன் வசித்தார். இவர்களுக்கு எந்த ஒரு வருமானமும் இல்லாத நிலையில் கிருஷ்ணனை சார்ந்து வாழ வேண்டிய சூழல் இருந்துள்ளது. அதோடு கிருஷ்ணன் தனது மனைவி குழந்தைகளை மட்டுமல்லாமல் தனது தாய் மற்றும் சகோதரி ஆகியோரையும் ஒரு சேர கவனித்து வந்துள்ளார். வீட்டில் மசாலா சாமான்கள் முதல் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் அவர் தான் வாங்கி கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று கிருஷ்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரது உடல் அவரது வீட்டில் இறுதிச் சடங்குகளுக்காக வைக்கப்பட்டது. இதற்கிடையில் மகன் இறந்த தகவல் கேட்டு தாய் பகவதி மற்றும் கிருஷ்ணனின் சகோதரி மாலா ஆகியோர் வீட்டுக்கு வந்து உடல் முன்பு அமர்ந்து கதறி அழுதுள்ளனர். கொஞ்சமும் எதிர்பாராத மரணம் அவர்களை செய்வதறியாது திகைக்க செய்தது. அதோடு கிருஷ்ணனின் உடல் முன்பு தன்னையும் தன் மகளையும் கவனிக்க இனிமேல் யார் இருக்கிறார் என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் சொல்லி தாய் பகவதி அழுது புலம்பியுள்ளார். அதன்பின்னர்  தாய் பகவதியும், மகள் மாலாவும் கிருஷ்ணனின் வீட்டில் இருந்து அவர்கள் வசிக்கும் வீட்டிற்கு சென்று உள்ளனர். அங்கு சென்று நெடு நேரமாகியும் மீண்டும் அவர்கள் வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் வீட்டில் சென்று பார்த்துள்ளனர். அப்போது இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கிருஷ்ணன் இறந்ததில் மனமுடைந்த அவர்கள் செய்வதறியாது இந்த முடிவை எடுத்துள்ளனர். 

இது தொடர்பாக தாழையூத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் அவரது தாய் பகவதி மற்றும் சகோதரி மாலா இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. ஒரே கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்தில் கீழதென்கலம் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

விஜய்க்கு துணிவு இருக்கிறதா? திரள்நிதியை கையில் எடுத்த தவெகவுக்கு நாதக பதிலடி! பரபரப்பில் தமிழக அரசியல் களம்!
விஜய்க்கு துணிவு இருக்கிறதா? திரள்நிதியை கையில் எடுத்த தவெகவுக்கு நாதக பதிலடி! பரபரப்பில் தமிழக அரசியல் களம்!
King Maker Vijay: கூட்டணி வைக்காவிட்டால் பாஜக, அதிமுக கோவிந்தா.!! கிங் மேக்கராகும் விஜய் - கருத்துக்கணிப்பு
கூட்டணி வைக்காவிட்டால் பாஜக, அதிமுக கோவிந்தா.!! கிங் மேக்கராகும் விஜய் - கருத்துக்கணிப்பு
New Income Tax Bill 2025: மக்களவையில் புதிய வருமான வரி மசோதா தாக்கல்... எப்போது அமலுக்கு வரும் தெரியுமா.?
மக்களவையில் புதிய வருமான வரி மசோதா தாக்கல்... எப்போது அமலுக்கு வரும் தெரியுமா.?
MOTN Survey: தமிழ்நாட்டுல பாஜக வளரவே இல்ல..இப்ப தேர்தல் நடந்தாலும் திமுக தான் ஜெயிக்கும் - கருத்துக்கணிப்பு
தமிழ்நாட்டுல பாஜக வளரவே இல்ல..இப்ப தேர்தல் நடந்தாலும் திமுக தான் ஜெயிக்கும் - கருத்துக்கணிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | “என்னை LOVE பண்ணு, இல்லனா”மிரட்டிய தவெக நிர்வாகி 8ஆம் வகுப்பு சிறுமி தற்கொலை! | GingeeChiranjeevi Controversy | TVK Transgender Issue | ”9-ஆடா நாங்க?...இன்னும் எத்தனை நாளைக்கு..” SURRENDER ஆன தவெக! | Vijayதிமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்! ஆட்டத்தை தொடங்கிய PK! குஷியில் EPS, விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு துணிவு இருக்கிறதா? திரள்நிதியை கையில் எடுத்த தவெகவுக்கு நாதக பதிலடி! பரபரப்பில் தமிழக அரசியல் களம்!
விஜய்க்கு துணிவு இருக்கிறதா? திரள்நிதியை கையில் எடுத்த தவெகவுக்கு நாதக பதிலடி! பரபரப்பில் தமிழக அரசியல் களம்!
King Maker Vijay: கூட்டணி வைக்காவிட்டால் பாஜக, அதிமுக கோவிந்தா.!! கிங் மேக்கராகும் விஜய் - கருத்துக்கணிப்பு
கூட்டணி வைக்காவிட்டால் பாஜக, அதிமுக கோவிந்தா.!! கிங் மேக்கராகும் விஜய் - கருத்துக்கணிப்பு
New Income Tax Bill 2025: மக்களவையில் புதிய வருமான வரி மசோதா தாக்கல்... எப்போது அமலுக்கு வரும் தெரியுமா.?
மக்களவையில் புதிய வருமான வரி மசோதா தாக்கல்... எப்போது அமலுக்கு வரும் தெரியுமா.?
MOTN Survey: தமிழ்நாட்டுல பாஜக வளரவே இல்ல..இப்ப தேர்தல் நடந்தாலும் திமுக தான் ஜெயிக்கும் - கருத்துக்கணிப்பு
தமிழ்நாட்டுல பாஜக வளரவே இல்ல..இப்ப தேர்தல் நடந்தாலும் திமுக தான் ஜெயிக்கும் - கருத்துக்கணிப்பு
முதல்வர் துறையிலேயே இப்படியா? பெண் காவலர்களுக்கு பாதுக்காப்பில்லையா? இணை ஆணையர் சஸ்பெண்ட்
முதல்வர் துறையிலேயே இப்படியா? பெண் காவலர்களுக்கு பாதுக்காப்பில்லையா? இணை ஆணையர் சஸ்பெண்ட்
Double Decker Flyover: அடடே..! மேல மெட்ரோ, கீழே வாகன போக்குவரத்து.. கோவையில் 'டபுள் டக்கர்' மேம்பாலம், எங்கே தெரியுமா?
Double Decker Flyover: அடடே..! மேல மெட்ரோ, கீழே வாகன போக்குவரத்து.. கோவையில் 'டபுள் டக்கர்' மேம்பாலம், எங்கே தெரியுமா?
PM Modi US Visit: அமெரிக்காவில் கால் வைத்ததுமே சம்பவம்..! ட்ரம்ப் சந்திப்பு - 36 மணி நேரம், மோடியின் 6 முக்கிய திட்டங்கள்
PM Modi US Visit: அமெரிக்காவில் கால் வைத்ததுமே சம்பவம்..! ட்ரம்ப் சந்திப்பு - 36 மணி நேரம், மோடியின் 6 முக்கிய திட்டங்கள்
Cockroach Milk: எதிர்காலத்தின் சூப்பர் ஃபுட்..! கரப்பான் பூச்சியின் பால், சேமிக்கப்படுவது எப்படி? விலை எவ்வளவு?
Cockroach Milk: எதிர்காலத்தின் சூப்பர் ஃபுட்..! கரப்பான் பூச்சியின் பால், சேமிக்கப்படுவது எப்படி? விலை எவ்வளவு?
Embed widget